தொடர் பயணங்கள் எத்தனையோ போயாச்சு இருப்பினும் மனதைபாதித்த பார்க்க
நினைக்கும் இடங்களை பார்ப்பதென்பது ஒரு எதர்பார்ப்பு தான்.
நினைக்கும் இடங்களை பார்ப்பதென்பது ஒரு எதர்பார்ப்பு தான்.
முல்லைத்தீவில் உள்ள தலைவரின் வீட்டினை பார்வையிட சென்றோம். சுற்றிலும்
முட்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ள இடம் ஒருவர் பின் ஒருவர் நின்டு தான் உள்ள போகனும் வீட்டிற்கு முன் இருந்த விளம்பர பலகையை
பார்த்தால் தமிழர்களை ஒன்றில் செயலிழக்க செய்யும் அல்லது உணர்வினை தூண்டிவிடும்
முட்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ள இடம் ஒருவர் பின் ஒருவர் நின்டு தான் உள்ள போகனும் வீட்டிற்கு முன் இருந்த விளம்பர பலகையை
பார்த்தால் தமிழர்களை ஒன்றில் செயலிழக்க செய்யும் அல்லது உணர்வினை தூண்டிவிடும்
(பிரதான பயங்கரவாதியின் பதுங்குகுழி)
வீட்டினை பார்வையிடலாம் என்று உட் சென்றால் வாசலில் புத்த பிக்ககு ஒருவர் புண்ணகையுடன் உட்காந்திருந்தார் உள்ளே இருந்த இருட்டில் இரவே தோற்று விடும் போல் இருந்தது இடையிடையே மின்னலை போல் வேலை செய்யும் லைட் அவரவர் கொண்டு சென்ற தொலைபேசிகளின் வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பிடித்தபடி உட் சென்றதும் வெளிவந்ததும் ஒரு விடுகதை தான் இவ்விடம் சுற்றுளாத்தலமாக மாறிவருவது வருத்தத்திற்குரியதாக இருந்தாலும் பார்வையிட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஆர்வம் இருந்து
கொண்டே தான் இருக்கின்றது. பார்வைக்கு சாதாரண வீடாக தோன்றினாலும் உள் இருக்கும்நவீனங்கள் புதுமை தான்
பரந்த நிலப்பரப்பு
அழகானஇடம்வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான
வன்னி பெரும் நிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்த்தில் வற்றாப்பளை எனும் கிராமத்தில்
அமைந்துள்ளது. பார்வைக்கு மிகவும் அழகான சுற்றுச்சூழலைக் கொண்டிருந்தாலும்
வெய்யிலின் கொடுமை சொல்லவே தேவையில்லை.
அடங்காப்பற்று என அழைக்கப்படும் இவ் வன்னிப் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தார் போன்றோருக்கு கப்பம்
செலுத்தினர். இவர்களின் பின் வருகைதந்த ஆங்கிலேயர்களை எதிர்க்குமளவிற்கு வீரம் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் விளங்கினர். இத்தகை வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்
பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில், போர்த்துக்கேய தளபதியாகிய நெவில்
என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை
வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது. இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும்
படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து மூலம் அறிய முடிகிறது.

ஆயிரம் கண்ணுள்ள மண் சட்டிகள் ஒருபுறம் கச்சான் விற்பனை மறு புறம் கட்டட வேலை இன்னொரு புறம் பார்வையிட வருவோரின் சமையல் என அட்டசாகமாக காட்சியளித்தது கோவில்.
சித்திநாயகர் ஆலயம் மிகவும் அழகான கோவில் ஊற்றெடுக்கும் தீர்த்தக்கேணியும் அழகானசுற்றுச்சூழலும் என காட்சியளித்த கோவிலினுள் சென்றால் உண்மையில் ஒரு அமைதி
தெய்வீக நிலை நிலவும்
புலிகளால் கடத்தப்பட்ட பாரா கப்பல் 2009ம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இடத்திலே இப்பாரா கப்பல் உள்ளது. வெளிநாட்டு பயணிகள் உள்நாட்டு சகோதர மொழியினர் என பலர் நாள்தோறும் பார்வையிட்ட படியே
z
விஸ்வமடுவில் ஒரு சிறைச்சாலை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவினரால் விஸ்வமடு பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சிறைச்சாலை தற்போது ராணுவத்திரின் பார்வையில் இருந்து வருகின்றது.
சூமிங்புல் பற்றி சொல்லவே தேவையில்லை மிகவும் அழகாக தான் காணப்பட்டது ஆனால் குறிப்பிட்டு சொல்லும் படி சுத்தமாக இல்லை