இனிய காலை வணக்கம்

உன் நினைவோடு ஆரம்பித்த அதிகாலை நடைபயணம் நீ நம்பித்தான் ஆக வேண்டும் காலில் செருப்புக்கூட இல்லை இதமான இசைகள் பல இசையமைப்பாளர்கள். இசைக்கு சத்திமாய் தோல்விதான் அந்த உயர்சாதி நாய்க்கு வேற வேலையில்லை தொடக்கி வைத்தது என் நடைக்கான அசைவாய் தெருமேளத்தை வீட்டுக்கு வீடு குறையாமல் இரண்டு நாய்கள் அப்பப்பா அவை பாட நான் ஓட தெருமேளம் களைகட்டியது.

மனதில் உன் நினைவுடன் தார் வீதியில் தனிமையில் அதிகாலை நடை பயணம் என் கால்களுக்கு மெல்லிய வருடல். வீட்டுக்கு வீடு போட்ட சுப்பிரபாதம் விடிந்ததை போட்டி போட்டு கூவிய சேவல்கள் ஒரு சில வீகளில் கேட்ட பசுமாடு கன்றுக்குட்டிகளின் சத்தம் இசைக்கு மெருகூட்டிய கோவில் மணி என உன் நினைவோடு அலங்கரித்த நடைபயணம்.

மெல்ல திறந்த கடைகள் சூடுபிடிக்கத்தொடங்கிய பாண், பத்திரிகை வியாபாரம் வீடுகள் கடைகள் என போட்டி போட்டு ஒலித்த வானெலிகளின் காலைச்செய்திகள் பாடசாலை செல்ல அடம்பிடிக்கும் சிறுசுகளின் அழுகைக்குரல் என ஒருவிதமான ஆரவாரத்துடன் விடிந்தது இன்றைய காலை.

வீட்டு வாசலுக்கு அடியெடுத்து வைத்தேன் காலை வணக்கம் என்ற உன் தாத்தாவிற்கு பதில் வணக்கம் சொல்லிய படி பத்திரிகையை எடுத்தபடி தாத்தாவின் எதிரில் அமர்ந்தேன் ஆறிடப்போகுது சீக்கிரம் குடி என்றாள் உன் அம்மா தேநீருடன் அம்மாவின் பின் சிரித்த படி நீ (உன் புகைப்படம்).

                                                                                        சுG
                                                                                        இனிய காலை வணக்கம்
                                                                                        11.01.2016


 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..