என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......

என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......................


அன்றிரவு என் வீடு கொஞ்சம் அமைதியாக இருந்தது சிறு பயம் பேயை பற்றி எனக்கும் கொஞ்சம் இல்லாமல் இல்லை. பயத்தோடு தூக்கமும் என்னை தழுவிக் கொண்டது விசித்திரம் தான். யாரோ அருகில் இருமிக்கேட்டது அட அது என் அப்பா என்னவனைப் போன்றே சிறு முனகலுடன் அடங்கியது இருமல். தொடர்ந்த என் தூக்கத்தில் என்னவனின் கிராமத்துக்கு என்னையறியாமல் சென்றேன்.

என்ன ஒரு அழகு என்னவனின் கிராமம் 5.30 இருக்கும் சூரியன் நிலவைப்போல் வட்டமாக வெட்கப்பட்டு மெல்ல வந்தான் புது மணப்பெண் போல. வெளியில் கன்றுகளின் சத்தம் அக்கிராம வீடுகளுக்கு வாசல் இருப்பதை நினைவு படுத்தியது. சேவல்களின் கூவும் போட்டிக்கு கண்டிப்பாக நடுவரை இருத்தியே ஆகனும். அணிவகுத்த பறவைகளின் இரைதேடும் படலம் எனக்கென்னமோ வந்தேமாதரம் பாடிச்சென்றது போலவும் அதை நிறுத்தவோ அல்லது திசை திருப்பவோ கோயில் மணி ஓங்கி அடித்தது போலவும் இருந்தது.
                                                            

கௌஷல்யா என ஆரம்பித்த சுப்பிரபாதம் அதைவிட வீட்டுக்கு வீடு தூங்கும் கும்பகர்ணங்களை எழுப்பும் சுப்பிரபாதமோ சூப்பரு. வீட்டுக்கு வீடு வாசல்படி மட்டும் தானாம் இருக்கு காலைக்கடன் தொடங்கி குளியல் வரை வெட்டவெளி தான் பொதுக்கிணறு, குளம், ஏரிக்கு தானாம் செல்லவேண்டும். அடக்கடவுளே நான் இங்கு வந்து எப்படி தான் வாழப்பழக போறேனோ. இதைவிட்டால் எனக்கு வேறு வழியும் இல்லை என்ற சிந்தனையிலே பயம் என் பீதியை கிழப்ப விட்டால் எனக்கும் காலைக்கடன் வந்துவிடும் போல இருந்தது. அடிச்சு சொல்லுவன் கிராமம் படு குப்பை நகரம் தான் நமக்கெல்லாம் சொர்க்கம்.

கோயிலை நிமிர்ந்தும் பார்க்காமல் குணிந்தபடி விலத்தி சென்ற பெண்களை பார்க்கையில் சற்று பரிதாபமாக தான் இருந்தது. சிக்குப்புக்கு சிக்குப்புக்கு என்ற படி அணி வகுத்து ஓடிய சிறுவர்களை பார்க்கையில் நாளை என் பிள்ளையும் இப்படி என்ற தொற்றிக்கொண்ட ஆசையை என்ன சொல்ல?.
                                                           

பால்காரன், பேப்பர் விற்பளையாளன், மரக்கறி வியாபாரி, மாம்பழம், தயிர், மோர் விற்கும் பெண்மணிகள் என கிராமத்தின் அழகு சொல்லமுடியாதளவு செதுக்கப்பட்டு கொண்டிருந்தது. ஊர் தலைவர் அட என்ன ஒரு அடக்கம் எளிமை வீரம் கண்டவுடன் வணக்கம் வைக்கும் சிறியோர் பெரியோர் மட்டுமா மாடு நாய்களும் தான் மரியாதை தெரிந்த கிராமம் என்ன ஒரு கவலை என்னை தான் யாரும் கண்டு கொள்ளவில்லை.

என்னவன் அடிக்கடி என்னிடம் செல்வது உனக்கு கறுப்பு உடுப்பை விட பாவாடை தாவணி சேலை அழகென்று அடப்பாவி எனக்கு இப்ப தானே புரியுது மவனே என் கையில சிக்கினாய் சாம்பாறு தான் பொறு. கிராமத்து பெண்கள் என்ன ஒரு அழகு தரையை மூடும் பாவாடைக்கும் மார்பை மூடும் தாவணிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. எல்லா பெண்களின் நெற்றியும் நிலவுள்ள வாணம் தான். கலகலக்கும் சிரிப்பை விட தலையில் வைத்த பூக்கள் ஒன்றும் அவ்வளவு அழகல்ல.
                                                       

பெண்களை விலத்தும் ஆண்களின் பார்வை அடடா அதிசய மின்னல் தான் ஆண்கள் வெட்கப்படுவதை முதல் முறை பார்க்கிறேன் என்னவனின் கிராமத்தில் தான். பெண்களின் கூந்தலில் அழகோ கொள்ளை தான் பாட்டிமாரின் அடர்த்தியான வெள்ளை கூந்தலை நகரத்து நாடக கம்பனிக்கு வாகைக்கு வேண்டலாமோ என்ற ஆசை தருவார்களோ என்ற எனக்குள் எழுந்த சந்தேகத்திலே அடங்கியது.

வெள்ளை மயில்களும் கூடவே நடக்க பின்னாடியே சென்றேன் என்னவனைத்தேடி அவர்கள் கோயிலுக்குள் சென்றனர் நான் தான் கோயிலுக்கு போக முடியாதே என்ற ஏமாற்றத்திலே திரும்ப திருமணமாண புதுத்தம்பதிகளாக தான் இருக்கவேண்டும் கோயிலை நேக்கி வந்தனர். ப்பா..... என்ன அழகு விலத்தி வளி விட்டபடியே நானும் இப்படிதான் என்னவனுடன் முதல்முதலில் இக்கோயிலுக்கு தான் வரவேண்டும் என நினைவுக்கு வந்த என்னவனை தேடி தொடர்ந்தேன் என் தேடலை.
                                                

வேலியில்லா வீடொன்று அழகான பூமரங்கள் வண்டுகள் வண்ணாத்துப் பூச்சிகளின் ஆட்டத்திற்கு அழவே இல்லை என்றால் பாருங்களன். வானம் காலநிலை பார்த்து நேரம் சொன்ன தாய் டேய் நேரமாச்சு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடு கெதியா அப்பா வந்தா உதை தான் வாங்குவாய்.  அந்த சுட்டியின் கதைக்கு நான் என்னத்த சொல்ல அப்பா என்ன அடிக்க வந்தா உதெல்லாம் அம்மாவோட என்டு சொல்லுவன் அடப்பாவி என்று எனக்குள் சிரித்தபடி நிற்க சின்ன செருமலுடன் வீட்டிற்கு வந்த தந்தையின் குரலைக்கேட்டவனின் சத்தம் சட்டென அடங்கி வெளியில் வந்து தந்தையை இறுக்கி அணைத்து முத்தமிட்டவனாய் புறப்பட்டான் பள்ளிக்கு. வாசலை தாண்டியதும் அவனுடன் சேர்ந்த கூட்டம் இருக்கே அப்பப்பா எல்லாம் வாலுகள் தான் என்னவனுடன் பயனித்த பள்ளிக்கு போய் வந்தேன் ஒரு செக்கன்.
              

வெள்ளை மயில்களும் வெள்ளை கொக்குகளும் அணிவகுத்த பள்ளிப்பாதை அவ்வளவு அழகு தேன்கூட்டை தலையில் கவிழ்த்து அதில் ஒரு ரோஜா பூவை நட்டு தரை தொடும் தாவணியுடன் ஆசிரிய குயில்களின் கூட்டம் சொல்லமுடியா தனி அழகு.

காலை உணவு ஓரளவு நகரமாக இருந்தாலும் கிராமத்து வாசனை ஆங்காங்கு இருக்கவே செய்தது கஞ்சியும் வெங்காயமும், அறுகம்புல் தண்ணி, பிட்டும் கருவாட்டு குழம்பும், களி குரக்கன் ரொட்டி என வாசல் விசித்திரம் தான். கிராமத்தில் யாரும் ஓய்வெடுக்க மாட்டார்கள் போலும் ஏர் கலப்பையுடன் செல்லும் ஒரு கூட்டம் மீனவ கூட்டம் வியாபாரிகள் வீட்டில் சமைக்கும் பெண்கள் என் அட யாருமே ஓய்வாக இல்லையே நான் யாரிடம் என்னவனை பற்றி கேட்பது.

நகரத்தை விட கிராமத்தில் தான் சிறுவர் தொழிலாளர்கள் அதிகம் என்னை அதிர்ச்சிப்படுத்தியது. பாடசாலைக்கு துள்ளிச்சென்ற மாணவன் தொங்கிக்கொண்டு வந்து சாப்பாட்டிற்கு ஒரு அடம்பிடிப்பு பின் வீட்டு வேலை என் பெற்றோருடன் செய்யும் வேலைகள் நகரத்தில் பெரியவர்களுக்கு கூட பஞ்சிபிடித்து விடும்.


நகரத்து பெரியவர்கள் தோற்றுவிடுவார்கள் கிராமத்து சிறுவர்களிடம். நான் கைது செய்யவா அல்லது கிராமத்திடம் கைதியாகவா?

என்னவன் மேல் கோவம் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்தது இத்தனை வருட காதலில் என்னிடம் எதேதோ எல்லாம் பேசி இருப்பான் படுபாவி தன் கிராமத்தை பற்றி இவ்வளவு இருக்கின்றது எதுவுமே சொன்னதில்லை கையில கிடைக்கட்டும் செத்தான் அவன்.

                                 
மாலை அழகு இருக்கே  சொல்ல எனக்கு கற்பனை போதாது தான் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன். ஏற்றிவிட்ட சிமிலி விளக்காய் சூரியன் மேற்கை சூதாட முனைகின்றது. பிள்ளையை தேடி ஓடிவரும் தாய்ப்பசு பாசத்திற்கு ஈடு இணை ஏதமில்லை. பெண்மை ஓர் பண்பு தான் பாதை மாறா பசுக்களின் பயணம் சிறு பெடியங்களை போல் காளை மாடுகளின் கலகலப்பு வயல் வெளி கோயிலடி மதகுகளில் இளைஞர்களின் சந்திப்பு, மறைவான இடங்களில் காதல்களின் முத்தச்சத்தங்கள், சிறு பிள்ளைகளின் செல்ல அழுகை, அதே கோயில் மணி வரிசை மாறா பறவைகளின் பயணம் 5மணிப்பூக்களின் புதுவரவு, விவசாயி தொழிலாளர்களின் வீட்டு ரெயில் பயணம் என் தொடர சுடுகாடொன்று தட்டுப்பட்டது.
                                 

 வாசலில்  காவலாளி ஒருவர் என் அதிஸ்ரம் ஒரு பிணம் எரிந்த படி எரிவுச்சூட்டில் கை கால்கள் சற்று எழும்பிய அதிசயமாகவும் இருக்கலாம்.
அம்மாவின் பயம் நினைவுக்கு வந்தது வீதியால் செத்தவீட்டு பிணம் போனாலே பார்க்காதே அப்படி பார்த்திருந்தால் போய் கைகால் முகம் அலசிவிட்டு வந்து திருநீறு பூசு என சத்தமிடுவாள் நான் இப்ப சுடுகாட்டுக்கே வந்திருக்கேன் அம்மாக்கு மட்டும் இது தெரியனும் நான் செத்தன் அத விட என்னவனுக்கு தெரிஞ்சா போச்சுடா.


                                    

நான் வந்தது என்னவன தேடி தானே இங்க என்ன செய்றன் ஒருவேளை இதில எரியிறது என்னவனா இருக்குமோ ச்சா இருக்காது நான் தான் இன்னும் அவன தேடவே தொடங்கலையே முதல்ல தேடுவம் பிறகு மிச்சத்த யோசிப்பம் என்றவளாய் நகர்ந்தேன் என் முன்னால் சென்ற மந்தை கூட்டத்திற்கு பின்னால். ஆடு மேய்க்கும் சிவன் இருக்கானே என்ன ஒரு தைரியம் எத்தனை ஆடுகள். இத்தனையையும் இச்சிறுவனால் ஒற்றுமையாய் கொண்டுசெல்ல எப்படி முடிகிறது. அச்சிறுவனை கூட அக்கிராமத்துக்கு தெரிகிறது ஏன் என்னை யாருக்கும் தெரியவில்லை ஓ... நான் ஊருக்கு புதுசு தானே.

சிறுசுகளுக்கு உணவூட்ட தேனீர் கொடுக்க பெரியவர்கள் படும் பாடு இருக்கே அதற்காகவே நிலவு தேய்பிறையாக கூடாது. மறுபடியும் இருள் சூழ ஆரம்பித்தது அடக்கடவுளே என்ன இது இருட்ட தொடங்கி விட்டது நான் வந்தது எதற்கு என்ன செய்கிறேன் என்னை இக்கிராமம் கட்டிப்போட்டு விட்டதே வந்தவேலையை மறந்து விடடேன் இரவு எங்கு தங்குவது.
பேய் பிசாசுகள் கிராமத்தில் அதிகமென்று என்னவன் சொன்னானே என்னை கண்டால் நாய் எல்லாம் குரைக்குமே மாடு திணறும் கிராமமே குழம்பிவிடுமே நான் என்ன செய்வது என எனக்குள் புலம்ப தொடங்கிய போதே யாரோ மரணித்தார்கள் போல் புலம்பிக்கேட்டது.

என்ன இது நகரத்திலே கத்திக்கேட்டால் ஊரெ போய் பார்க்கும் கிராமத்தில் யாரும் எந்த உணர்வும் இலலாமல் இருக்கிறார்கள் ஒரு வேளை கிராமத்தின் கட்டுப்பாடாகவும் இருக்கும். நான் போகலாம் தானே போய் பார்ப்போம் என்ற முடிவில் பயந்து பயந்து போனேன். வாசலில் போனதுமே மரண வீடு என்று ஊர்ஜிதமானது. அட நான் சுடலையில் பார்த்த காவலாளி இவர் இங்கு என்ன செய்கின்றார் ஏன் அழுகின்றார் யாரோ முதுகில் தட்டி ஆறதல் சொன்னார்கள் போனவன் வரவா போறான் விடுடா விதி முடிஞ்சு போச்சு அழாத அங்க அந்த பொண்ணுட நிலமை என்னமோ தெரியாது.

ம்..  என்று கண்களை புறங்கையால் துடைத்த காவலாளியை மாமா என்று அருகில் சென்று ஆறதல் சொல்ல முற்பட்டவளாய் நகர்ந்தேன் வீட்ற்குள் ஏன் போனது என் விழிகள் என்ன கொடுமை என்னவனின் படத்தை வைத்து ஒரு பெண்கள் கூட்;டமே கதறியது. ஈரக்குலையே நடுங்கிப்போனது தெரியுமா? நடுங்கிய நடுக்கத்தில் திரும்பினேன் என் வீட்டிற்கு.

என்னை ஏன் பெட்டிக்குள் வளர்த்தி விடடிருக்கிறார்கள்? நான் பாய் போடடே தூங்குவதில்லையே நிலத்தில் தூங்குவது தானே பிடிக்கும் இது என் அப்பாவிற்கு நன்றாக தெரியுமே ஏன் அப்பா அழுகின்றார்? நான் ஏன் அங்க படுத்திருக்கன்? ஏன் நான் படுத்திருக்கிற பெட்டிய சுத்தி இத்தினை பேர் கத்தினம்? நான் யாரு? ஏன் என்ன மூடினம்? மூச்சடக்கப்போகுது துறவுங்கோ.... எங்க கொண்டு போயினம்.

                                                     
போகாதடி போகாதடி என்டு ஏன் எல்லாரும் கத்தினம் என்ற படத்த இப்டி பேப்பரில அடிச்சு ஏன் குடுக்கினம் என்னடா இது புதுப்புது சொந்தமெல்லாம் நிக்குது ஏன் நண்பர்களின்ர கண்ணும் கலங்குது அம்மா ஏன் மயங்கி வழுந்தவா அக்காக்கு என்னாச்சு ஏன் பேசாம இருக்கிறாள் என்னோட சண்டைபிடிக்காம விடமாட்டாளே அண்ணா ஏன் அழுதுகொண்டு போறான் அப்பா எங்க போறார்

தோழிக்கு என்னாச்சு பீல் பண்ணினா பேசுவன்னு தெரிஞ்சும் என்ர வீட்ட வந்து நின்டு ஏன் அழுறாள்? சித்தி ஏன் தலையில் அடிச்சு கத்துறா? நான் ஏன் மேல நிக்குறன்? அப்ப யார கொண்டு போயினம்? என்னது நான் செத்துட்டனோ!!! இல்ல இருக்காது ஜயோ ஏன் எல்லாரும் அழுறீங்க?...... என்ன இது நான் இப்டி கத்துறன் ஏன் ஒருத்தருக்குமே கேக்குதில்லை அப்ப இனின என்னால...

ஜயோ..................


 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..