இனிய காலை வணக்கம்

உன் நினைவோடு ஆரம்பித்த அதிகாலை நடைபயணம் நீ நம்பித்தான் ஆக வேண்டும் காலில் செருப்புக்கூட இல்லை இதமான இசைகள் பல இசையமைப்பாளர்கள். இசைக்கு சத்திமாய் தோல்விதான் அந்த உயர்சாதி நாய்க்கு வேற வேலையில்லை தொடக்கி வைத்தது என் நடைக்கான அசைவாய் தெருமேளத்தை வீட்டுக்கு வீடு குறையாமல் இரண்டு நாய்கள் அப்பப்பா அவை பாட நான் ஓட தெருமேளம் களைகட்டியது.

மனதில் உன் நினைவுடன் தார் வீதியில் தனிமையில் அதிகாலை நடை பயணம் என் கால்களுக்கு மெல்லிய வருடல். வீட்டுக்கு வீடு போட்ட சுப்பிரபாதம் விடிந்ததை போட்டி போட்டு கூவிய சேவல்கள் ஒரு சில வீகளில் கேட்ட பசுமாடு கன்றுக்குட்டிகளின் சத்தம் இசைக்கு மெருகூட்டிய கோவில் மணி என உன் நினைவோடு அலங்கரித்த நடைபயணம்.

மெல்ல திறந்த கடைகள் சூடுபிடிக்கத்தொடங்கிய பாண், பத்திரிகை வியாபாரம் வீடுகள் கடைகள் என போட்டி போட்டு ஒலித்த வானெலிகளின் காலைச்செய்திகள் பாடசாலை செல்ல அடம்பிடிக்கும் சிறுசுகளின் அழுகைக்குரல் என ஒருவிதமான ஆரவாரத்துடன் விடிந்தது இன்றைய காலை.

வீட்டு வாசலுக்கு அடியெடுத்து வைத்தேன் காலை வணக்கம் என்ற உன் தாத்தாவிற்கு பதில் வணக்கம் சொல்லிய படி பத்திரிகையை எடுத்தபடி தாத்தாவின் எதிரில் அமர்ந்தேன் ஆறிடப்போகுது சீக்கிரம் குடி என்றாள் உன் அம்மா தேநீருடன் அம்மாவின் பின் சிரித்த படி நீ (உன் புகைப்படம்).

                                                                                        சுG
                                                                                        இனிய காலை வணக்கம்
                                                                                        11.01.2016


READ MORE - இனிய காலை வணக்கம்

என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......

என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......................


அன்றிரவு என் வீடு கொஞ்சம் அமைதியாக இருந்தது சிறு பயம் பேயை பற்றி எனக்கும் கொஞ்சம் இல்லாமல் இல்லை. பயத்தோடு தூக்கமும் என்னை தழுவிக் கொண்டது விசித்திரம் தான். யாரோ அருகில் இருமிக்கேட்டது அட அது என் அப்பா என்னவனைப் போன்றே சிறு முனகலுடன் அடங்கியது இருமல். தொடர்ந்த என் தூக்கத்தில் என்னவனின் கிராமத்துக்கு என்னையறியாமல் சென்றேன்.

என்ன ஒரு அழகு என்னவனின் கிராமம் 5.30 இருக்கும் சூரியன் நிலவைப்போல் வட்டமாக வெட்கப்பட்டு மெல்ல வந்தான் புது மணப்பெண் போல. வெளியில் கன்றுகளின் சத்தம் அக்கிராம வீடுகளுக்கு வாசல் இருப்பதை நினைவு படுத்தியது. சேவல்களின் கூவும் போட்டிக்கு கண்டிப்பாக நடுவரை இருத்தியே ஆகனும். அணிவகுத்த பறவைகளின் இரைதேடும் படலம் எனக்கென்னமோ வந்தேமாதரம் பாடிச்சென்றது போலவும் அதை நிறுத்தவோ அல்லது திசை திருப்பவோ கோயில் மணி ஓங்கி அடித்தது போலவும் இருந்தது.
                                                            

கௌஷல்யா என ஆரம்பித்த சுப்பிரபாதம் அதைவிட வீட்டுக்கு வீடு தூங்கும் கும்பகர்ணங்களை எழுப்பும் சுப்பிரபாதமோ சூப்பரு. வீட்டுக்கு வீடு வாசல்படி மட்டும் தானாம் இருக்கு காலைக்கடன் தொடங்கி குளியல் வரை வெட்டவெளி தான் பொதுக்கிணறு, குளம், ஏரிக்கு தானாம் செல்லவேண்டும். அடக்கடவுளே நான் இங்கு வந்து எப்படி தான் வாழப்பழக போறேனோ. இதைவிட்டால் எனக்கு வேறு வழியும் இல்லை என்ற சிந்தனையிலே பயம் என் பீதியை கிழப்ப விட்டால் எனக்கும் காலைக்கடன் வந்துவிடும் போல இருந்தது. அடிச்சு சொல்லுவன் கிராமம் படு குப்பை நகரம் தான் நமக்கெல்லாம் சொர்க்கம்.

கோயிலை நிமிர்ந்தும் பார்க்காமல் குணிந்தபடி விலத்தி சென்ற பெண்களை பார்க்கையில் சற்று பரிதாபமாக தான் இருந்தது. சிக்குப்புக்கு சிக்குப்புக்கு என்ற படி அணி வகுத்து ஓடிய சிறுவர்களை பார்க்கையில் நாளை என் பிள்ளையும் இப்படி என்ற தொற்றிக்கொண்ட ஆசையை என்ன சொல்ல?.
                                                           

பால்காரன், பேப்பர் விற்பளையாளன், மரக்கறி வியாபாரி, மாம்பழம், தயிர், மோர் விற்கும் பெண்மணிகள் என கிராமத்தின் அழகு சொல்லமுடியாதளவு செதுக்கப்பட்டு கொண்டிருந்தது. ஊர் தலைவர் அட என்ன ஒரு அடக்கம் எளிமை வீரம் கண்டவுடன் வணக்கம் வைக்கும் சிறியோர் பெரியோர் மட்டுமா மாடு நாய்களும் தான் மரியாதை தெரிந்த கிராமம் என்ன ஒரு கவலை என்னை தான் யாரும் கண்டு கொள்ளவில்லை.

என்னவன் அடிக்கடி என்னிடம் செல்வது உனக்கு கறுப்பு உடுப்பை விட பாவாடை தாவணி சேலை அழகென்று அடப்பாவி எனக்கு இப்ப தானே புரியுது மவனே என் கையில சிக்கினாய் சாம்பாறு தான் பொறு. கிராமத்து பெண்கள் என்ன ஒரு அழகு தரையை மூடும் பாவாடைக்கும் மார்பை மூடும் தாவணிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. எல்லா பெண்களின் நெற்றியும் நிலவுள்ள வாணம் தான். கலகலக்கும் சிரிப்பை விட தலையில் வைத்த பூக்கள் ஒன்றும் அவ்வளவு அழகல்ல.
                                                       

பெண்களை விலத்தும் ஆண்களின் பார்வை அடடா அதிசய மின்னல் தான் ஆண்கள் வெட்கப்படுவதை முதல் முறை பார்க்கிறேன் என்னவனின் கிராமத்தில் தான். பெண்களின் கூந்தலில் அழகோ கொள்ளை தான் பாட்டிமாரின் அடர்த்தியான வெள்ளை கூந்தலை நகரத்து நாடக கம்பனிக்கு வாகைக்கு வேண்டலாமோ என்ற ஆசை தருவார்களோ என்ற எனக்குள் எழுந்த சந்தேகத்திலே அடங்கியது.

வெள்ளை மயில்களும் கூடவே நடக்க பின்னாடியே சென்றேன் என்னவனைத்தேடி அவர்கள் கோயிலுக்குள் சென்றனர் நான் தான் கோயிலுக்கு போக முடியாதே என்ற ஏமாற்றத்திலே திரும்ப திருமணமாண புதுத்தம்பதிகளாக தான் இருக்கவேண்டும் கோயிலை நேக்கி வந்தனர். ப்பா..... என்ன அழகு விலத்தி வளி விட்டபடியே நானும் இப்படிதான் என்னவனுடன் முதல்முதலில் இக்கோயிலுக்கு தான் வரவேண்டும் என நினைவுக்கு வந்த என்னவனை தேடி தொடர்ந்தேன் என் தேடலை.
                                                

வேலியில்லா வீடொன்று அழகான பூமரங்கள் வண்டுகள் வண்ணாத்துப் பூச்சிகளின் ஆட்டத்திற்கு அழவே இல்லை என்றால் பாருங்களன். வானம் காலநிலை பார்த்து நேரம் சொன்ன தாய் டேய் நேரமாச்சு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடு கெதியா அப்பா வந்தா உதை தான் வாங்குவாய்.  அந்த சுட்டியின் கதைக்கு நான் என்னத்த சொல்ல அப்பா என்ன அடிக்க வந்தா உதெல்லாம் அம்மாவோட என்டு சொல்லுவன் அடப்பாவி என்று எனக்குள் சிரித்தபடி நிற்க சின்ன செருமலுடன் வீட்டிற்கு வந்த தந்தையின் குரலைக்கேட்டவனின் சத்தம் சட்டென அடங்கி வெளியில் வந்து தந்தையை இறுக்கி அணைத்து முத்தமிட்டவனாய் புறப்பட்டான் பள்ளிக்கு. வாசலை தாண்டியதும் அவனுடன் சேர்ந்த கூட்டம் இருக்கே அப்பப்பா எல்லாம் வாலுகள் தான் என்னவனுடன் பயனித்த பள்ளிக்கு போய் வந்தேன் ஒரு செக்கன்.
              

வெள்ளை மயில்களும் வெள்ளை கொக்குகளும் அணிவகுத்த பள்ளிப்பாதை அவ்வளவு அழகு தேன்கூட்டை தலையில் கவிழ்த்து அதில் ஒரு ரோஜா பூவை நட்டு தரை தொடும் தாவணியுடன் ஆசிரிய குயில்களின் கூட்டம் சொல்லமுடியா தனி அழகு.

காலை உணவு ஓரளவு நகரமாக இருந்தாலும் கிராமத்து வாசனை ஆங்காங்கு இருக்கவே செய்தது கஞ்சியும் வெங்காயமும், அறுகம்புல் தண்ணி, பிட்டும் கருவாட்டு குழம்பும், களி குரக்கன் ரொட்டி என வாசல் விசித்திரம் தான். கிராமத்தில் யாரும் ஓய்வெடுக்க மாட்டார்கள் போலும் ஏர் கலப்பையுடன் செல்லும் ஒரு கூட்டம் மீனவ கூட்டம் வியாபாரிகள் வீட்டில் சமைக்கும் பெண்கள் என் அட யாருமே ஓய்வாக இல்லையே நான் யாரிடம் என்னவனை பற்றி கேட்பது.

நகரத்தை விட கிராமத்தில் தான் சிறுவர் தொழிலாளர்கள் அதிகம் என்னை அதிர்ச்சிப்படுத்தியது. பாடசாலைக்கு துள்ளிச்சென்ற மாணவன் தொங்கிக்கொண்டு வந்து சாப்பாட்டிற்கு ஒரு அடம்பிடிப்பு பின் வீட்டு வேலை என் பெற்றோருடன் செய்யும் வேலைகள் நகரத்தில் பெரியவர்களுக்கு கூட பஞ்சிபிடித்து விடும்.


நகரத்து பெரியவர்கள் தோற்றுவிடுவார்கள் கிராமத்து சிறுவர்களிடம். நான் கைது செய்யவா அல்லது கிராமத்திடம் கைதியாகவா?

என்னவன் மேல் கோவம் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்தது இத்தனை வருட காதலில் என்னிடம் எதேதோ எல்லாம் பேசி இருப்பான் படுபாவி தன் கிராமத்தை பற்றி இவ்வளவு இருக்கின்றது எதுவுமே சொன்னதில்லை கையில கிடைக்கட்டும் செத்தான் அவன்.

                                 
மாலை அழகு இருக்கே  சொல்ல எனக்கு கற்பனை போதாது தான் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன். ஏற்றிவிட்ட சிமிலி விளக்காய் சூரியன் மேற்கை சூதாட முனைகின்றது. பிள்ளையை தேடி ஓடிவரும் தாய்ப்பசு பாசத்திற்கு ஈடு இணை ஏதமில்லை. பெண்மை ஓர் பண்பு தான் பாதை மாறா பசுக்களின் பயணம் சிறு பெடியங்களை போல் காளை மாடுகளின் கலகலப்பு வயல் வெளி கோயிலடி மதகுகளில் இளைஞர்களின் சந்திப்பு, மறைவான இடங்களில் காதல்களின் முத்தச்சத்தங்கள், சிறு பிள்ளைகளின் செல்ல அழுகை, அதே கோயில் மணி வரிசை மாறா பறவைகளின் பயணம் 5மணிப்பூக்களின் புதுவரவு, விவசாயி தொழிலாளர்களின் வீட்டு ரெயில் பயணம் என் தொடர சுடுகாடொன்று தட்டுப்பட்டது.
                                 

 வாசலில்  காவலாளி ஒருவர் என் அதிஸ்ரம் ஒரு பிணம் எரிந்த படி எரிவுச்சூட்டில் கை கால்கள் சற்று எழும்பிய அதிசயமாகவும் இருக்கலாம்.
அம்மாவின் பயம் நினைவுக்கு வந்தது வீதியால் செத்தவீட்டு பிணம் போனாலே பார்க்காதே அப்படி பார்த்திருந்தால் போய் கைகால் முகம் அலசிவிட்டு வந்து திருநீறு பூசு என சத்தமிடுவாள் நான் இப்ப சுடுகாட்டுக்கே வந்திருக்கேன் அம்மாக்கு மட்டும் இது தெரியனும் நான் செத்தன் அத விட என்னவனுக்கு தெரிஞ்சா போச்சுடா.


                                    

நான் வந்தது என்னவன தேடி தானே இங்க என்ன செய்றன் ஒருவேளை இதில எரியிறது என்னவனா இருக்குமோ ச்சா இருக்காது நான் தான் இன்னும் அவன தேடவே தொடங்கலையே முதல்ல தேடுவம் பிறகு மிச்சத்த யோசிப்பம் என்றவளாய் நகர்ந்தேன் என் முன்னால் சென்ற மந்தை கூட்டத்திற்கு பின்னால். ஆடு மேய்க்கும் சிவன் இருக்கானே என்ன ஒரு தைரியம் எத்தனை ஆடுகள். இத்தனையையும் இச்சிறுவனால் ஒற்றுமையாய் கொண்டுசெல்ல எப்படி முடிகிறது. அச்சிறுவனை கூட அக்கிராமத்துக்கு தெரிகிறது ஏன் என்னை யாருக்கும் தெரியவில்லை ஓ... நான் ஊருக்கு புதுசு தானே.

சிறுசுகளுக்கு உணவூட்ட தேனீர் கொடுக்க பெரியவர்கள் படும் பாடு இருக்கே அதற்காகவே நிலவு தேய்பிறையாக கூடாது. மறுபடியும் இருள் சூழ ஆரம்பித்தது அடக்கடவுளே என்ன இது இருட்ட தொடங்கி விட்டது நான் வந்தது எதற்கு என்ன செய்கிறேன் என்னை இக்கிராமம் கட்டிப்போட்டு விட்டதே வந்தவேலையை மறந்து விடடேன் இரவு எங்கு தங்குவது.
பேய் பிசாசுகள் கிராமத்தில் அதிகமென்று என்னவன் சொன்னானே என்னை கண்டால் நாய் எல்லாம் குரைக்குமே மாடு திணறும் கிராமமே குழம்பிவிடுமே நான் என்ன செய்வது என எனக்குள் புலம்ப தொடங்கிய போதே யாரோ மரணித்தார்கள் போல் புலம்பிக்கேட்டது.

என்ன இது நகரத்திலே கத்திக்கேட்டால் ஊரெ போய் பார்க்கும் கிராமத்தில் யாரும் எந்த உணர்வும் இலலாமல் இருக்கிறார்கள் ஒரு வேளை கிராமத்தின் கட்டுப்பாடாகவும் இருக்கும். நான் போகலாம் தானே போய் பார்ப்போம் என்ற முடிவில் பயந்து பயந்து போனேன். வாசலில் போனதுமே மரண வீடு என்று ஊர்ஜிதமானது. அட நான் சுடலையில் பார்த்த காவலாளி இவர் இங்கு என்ன செய்கின்றார் ஏன் அழுகின்றார் யாரோ முதுகில் தட்டி ஆறதல் சொன்னார்கள் போனவன் வரவா போறான் விடுடா விதி முடிஞ்சு போச்சு அழாத அங்க அந்த பொண்ணுட நிலமை என்னமோ தெரியாது.

ம்..  என்று கண்களை புறங்கையால் துடைத்த காவலாளியை மாமா என்று அருகில் சென்று ஆறதல் சொல்ல முற்பட்டவளாய் நகர்ந்தேன் வீட்ற்குள் ஏன் போனது என் விழிகள் என்ன கொடுமை என்னவனின் படத்தை வைத்து ஒரு பெண்கள் கூட்;டமே கதறியது. ஈரக்குலையே நடுங்கிப்போனது தெரியுமா? நடுங்கிய நடுக்கத்தில் திரும்பினேன் என் வீட்டிற்கு.

என்னை ஏன் பெட்டிக்குள் வளர்த்தி விடடிருக்கிறார்கள்? நான் பாய் போடடே தூங்குவதில்லையே நிலத்தில் தூங்குவது தானே பிடிக்கும் இது என் அப்பாவிற்கு நன்றாக தெரியுமே ஏன் அப்பா அழுகின்றார்? நான் ஏன் அங்க படுத்திருக்கன்? ஏன் நான் படுத்திருக்கிற பெட்டிய சுத்தி இத்தினை பேர் கத்தினம்? நான் யாரு? ஏன் என்ன மூடினம்? மூச்சடக்கப்போகுது துறவுங்கோ.... எங்க கொண்டு போயினம்.

                                                     
போகாதடி போகாதடி என்டு ஏன் எல்லாரும் கத்தினம் என்ற படத்த இப்டி பேப்பரில அடிச்சு ஏன் குடுக்கினம் என்னடா இது புதுப்புது சொந்தமெல்லாம் நிக்குது ஏன் நண்பர்களின்ர கண்ணும் கலங்குது அம்மா ஏன் மயங்கி வழுந்தவா அக்காக்கு என்னாச்சு ஏன் பேசாம இருக்கிறாள் என்னோட சண்டைபிடிக்காம விடமாட்டாளே அண்ணா ஏன் அழுதுகொண்டு போறான் அப்பா எங்க போறார்

தோழிக்கு என்னாச்சு பீல் பண்ணினா பேசுவன்னு தெரிஞ்சும் என்ர வீட்ட வந்து நின்டு ஏன் அழுறாள்? சித்தி ஏன் தலையில் அடிச்சு கத்துறா? நான் ஏன் மேல நிக்குறன்? அப்ப யார கொண்டு போயினம்? என்னது நான் செத்துட்டனோ!!! இல்ல இருக்காது ஜயோ ஏன் எல்லாரும் அழுறீங்க?...... என்ன இது நான் இப்டி கத்துறன் ஏன் ஒருத்தருக்குமே கேக்குதில்லை அப்ப இனின என்னால...

ஜயோ..................


READ MORE - என்னவனின் கிராமத்துக்கு என்னவனைத்தேடி......

முதல்வரை பதவியை இழந்தார் ‪ ஜெயலலிதா

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ. பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா விரும்பினால் தமிழக சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் கோர்ட் அறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார். 112 பக்க தீர்ப்பை நீதிபதி குன்கா படித்தார். தண்டனை முழு விவரம் அறிவிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார். தமிழகம் முழுவதும் பரபரப்பு: இதற்கிடையில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; கடைகள் அடைக்கப்பட்டன. ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு தி.மு.க.இ தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை அ.தி.மு.க.வினர் எரித்தனர். விருத்தாசலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தின் முன் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் கூடினர். இந்நிலையில் இந்த வழக்கில் ஜெ.இ குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் கருணாநிதி வீட்டின் முன் கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மதுரையில் உள்ள சுப்ரமணியசாமி வீ்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரை திருச்சி கோவை கடலூர் விருத்தாச்சலம் ஆத்தூர் திண்டுக்கல் திருநெல்வேலி பொள்ளாச்சி திருப்பூர் திருத்தணி திருவள்ளூர் திருநெல்வேலி பழநி திருமங்கலம் வேலூர் காரைக்குடி தூத்துக்குடி நீலகிரி குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பும் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. ரயில் மறியல்:
பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். திருமங்கலம் அ.தி.மு.க.இவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

திருசெந்தூரில் இருந்து பழநி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்ததால் அந்த ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர் இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. மயிலாடுதுறையில் கோர்ட் தீர்ப்பை கண்டித்து அ.தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. கோவில்பட்டியில் தனியார் பஸ் மீது கல் எறிந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது துறையூரில் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடப்பட்டிருந்த தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றினர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சாவூரில்இ பழையஇ புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகள் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.பஸ்கள் நிறுத்தம்; கடைகள் அடைப்பு பண்ருட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன.

பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பண்ருட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் ரயில் மறியலில் அ.தி.மு.க.இவினர் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல் நாகப்பட்டனம் ரயில்வே ஸ்டேஷனிலும்  திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.மேலூரில் அ.தி.மு.க. தரப்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர் இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

READ MORE - முதல்வரை பதவியை இழந்தார் ‪ ஜெயலலிதா

காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?




சில தலைப்புக்களை பற்றி பேசத் தோணாது. ஆனால் சில தலைப்புகளைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. அது போல தான் இந்த தலைப்பும் இந்தக் காலத்தில் எந்த இளைஞனாலும் பேசாமல் இருக்கவே முடியாத தலைப்பு.






தற்கால குடும்ப ஒற்றுமையில் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?


அருமையான தலைப்பை தந்து ஆதாரங்களுடன் எடுத்துரைக்கச் சொன்ன நடுவருக்கு முதலில் என் நன்றிகள்.

முதலில் திருமணம் என்றால் என்ன என்று நோக்கினால் ஒரு சமூகசட்ட உறவு முறை என்று சொல்லலாம். இன்றைய கால கட்டத்தில் ஒரு மனிதன் முழுமையடைவது திருமணத்தில் தான. இதில் காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது? என்ற தலைப்பு எமக்கு கொடுக்கப்பட்டது இதில் எனது தெரிவு காதல் திருமணமே சிறந்தது என்பது தான்.

தற்போது இளசுகள் சிறுசுகள் செய்யும் பல காமவேலைகளும் தற்கொலைகளும் தான் காதல் என்று காதல் திருமணம் தவறென்று எதிரணியில் வாதாட வந்திருப்போரை நினைத்தால் சற்று வருத்தமாகதான் இருக்கிறது. இருப்பினும் எம்மை இவ்விடத்தில் நிலை நாட்டிக் கொள்ள அவர்களின் தொகை எமக்கு மிக முக்கியம்.

காதல் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்து எம்மோடு நடைபோடுகின்றது. என்பதை பல வரலாறுகள் கூறுகின்றது. அங்கிருந்தே பிரச்சினைகளும் இருந்துள்ளன அந்தக்கால காதலுக்கும் இந்தக்கால காதலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. அவை காதல் காதலாக நகர்ந்தன. இப்போது காமத்துடனும் ஏமாற்றத்துடனும் நடைபோடுகின்றது.

7ம் 9ம் வகுப்புபடிக்கும் சிறுசுகள் தனியாகநின்று கதைத்தாலோ சிரிசிச்சுப்பேசினாலோ சுற்றி இருப்போர் சொல்லும் வார்த்தை இதுகள் பிஞ்சில பழுத்ததுகள், தாய் தகப்பனிட்ட சொல்லனும், இந்தவயசில் காதலும் கத்தரிக்காயும் என்று பலகதைகளை சொல்லி எதுவுமே இல்லாத நிலையில் அவையே அதை காதல் என்று நம்பும் ஒரு நிலையும் ஏற்படும் கேட்டால் முதல் காதல் என்று பெயர் வேறு.


அதிகம் பேச விரும்பவில்லை எமது தலைப்புக்குள் வருவோம் காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது? நிச்சயம் காதல் திருமணம் தான் என்று அடித்துக் கூறலாம் காரணம் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் போது இரு குடும்பங்களின் சாதி, குலம், கோத்திரம், மதம், ஜாதகம் இவைகளை மட்டும் தான் பார்ப்பார்கள்.

 ஒரு குடும்ப வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமானதல்ல பெற்றோர் பார்க்கும் திருமணம் என்பது ஒரு வீட்டிற்கு வெளிப்பூச்சு பூசுவதைப் போல் தான் வீட்டிற்குள் இருக்கும் எதுவும் தெரியாது திருமணம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது சில காலம் கழித்து தான் தெரியவரும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே ஓரளவு மட்டுமே பெண் பற்றியோ அல்லது ஆண் பற்றியோ விசாரிப்பார்கள் (என்னபடிப்பு? என்னஜாதி? சீதனம்?) திருமணம் முடிந்தபின் தான் இரண்டு தரப்பிலும் இருக்கும் பல உண்மைகள் வெளியில் தெரியவரும். அவ்வாறு தெரியவரும் போது இருவருக் கிடையிலும் விரிசல் ஏற்படும் அதிலும் தப்பித்தவறி வாழ்பவர்கள் அதை விதியென்று நினைப்பவர்களும், அம்மா அப்பா கஸ்ரப்பட்டு செய்துவைத்தார்கள் அல்லது போலிக் கௌரவம் என்று நினைப்பவர்களும்;, தண்ணிக்க குதிச்சாச்சு இனி நீந்தித்தானே ஆகணும் என்பவர்களும் பகலில வேலைக்குபோறம் இரவில் மட்டும் தானே சந்திக்கப்போறம் என்று சிந்திக்கிற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருப்போர் மட்டும் தான் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சேர்ந்திருப்பார்கள் மிச்சமெல்லாம் விவாகரத்து அல்லது பிரிந்திருப்பர்.

ஆனால் காதல் திருமணத்தில் அப்படியல்ல இருவர் பற்றிய புரிந்துணர்வு அதிகமாக இருக்கும் சிறு பிரச்சினை வந்தாலும் யார் முதலில் விட்டுக் கொடுப்பது பிரச்சினை எங்கு இருந்து ஆரம்பித்தது என்ற தெளிவு இருக்கும் அவள் அப்படிதான் அல்லது அவன் அப்படிதான் என்ற எப்படி எனும் தெளிவு இருக்கும். தமக்குள் ஏற்படும் எந்தப் பிரச்சனைக்குள்ளும் பெற்றோரோ அல்லது அடுத்தவர்களோ தீர்வுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் தம்மை தாமே சமாளித்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக இருப்பர்.

அதிகமாக பலர் சொல்வது விவாகரத்தில் முடிவது காதல் திருமணம் என்று யார் சொன்னது காதல் திருமணம் என்று? அதிகமாக விவாகரத்தில் வந்து நிற்பது இளவயதுத்திருமணம் தான் அதிகபிரிவினை ஏற்படுத்துகின்றது.

காதலிப்பவர்கள் என்று இனங்காணப்படுவோர் செய்யும் வேலை என்னவென்றால் தம்மை தாம் முழமையாக அறிந்து கொள்ள முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர் ஒருவரை புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல காதலிக்க ஆரம்பித்ததும் செய்யும் திருமணத்திற்கும் நிச்யிக்கப்பட்ட திருமணத்திற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக இருப்பதில்லை.

இன்றைய காதல் தோல்விக்கு மிகமுக்கிய காரணம் வெளிநாட்டு மோகம் என்றும் சொல்லலாம் இருவரும் படிக்கும் வரையோ அல்லது வேலைக்கு போகும் வரையோ சேர்ந்து திரிவது இதற்கு ஊர் உலகம் கொடுக்கும் பெயர் காதல் பின் வீட்டில் வாழ்க்கை பற்றிய முடிவு எடுக்கும் போது பெண் என்றால் 95வீதம் வெளிநாட்டிலே தேடுவார்கள் அவளும் அதற்கு சம்மதித்து வெளிநாடு சென்று விடுவாள். இங்கு ஆண்கள் நாலு காதல் கவிதை எழுதி தாடியுடன் சுற்றித்திரிவர் யாராவது கேட்டால் அதில் ஒரு வீராப்பு வசனம் வேறு பொண்ணுங்களே இப்படிதான் ஏமாத்துங்கள் தாங்கள் செய்தது காதல் தானோ என்ற கேள்வி அவர்களுக்கு ஒரு குடும்பம் என்ற ஒன்று வரும் வரை முக்கியமாக தாங்களும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தெரியவே போவதில்லை.

காலில் தோற்ற ஆண்களிடம் சென்று கேட்டால் அவளுக்கு என்னை பிடிக்கலையாம். அவள்டவீட்ட காதல் திருமணத்த ஏத்துக்க மாட்டாங்களாம் என்டு தான் கடைசியா பேசும் போது சொன்னாள். நான் வடிவில்லையாம். என்னிடம் பணம் இல்லையாம் என பல காரணம் சொல்வார்கள். இதைவிட காதலில் தோற்ற பெண்களிடம் கேட்டால் ஆண் வர்க்கமே கேவலப்படும் சம்பவங்கள் பல நடந்திருக்கும் ஆனால் அவை பெரிதாக தெரியாது. பெண்கள் தம்மைகாத்துக் கொள்ள வருங்காலத்தை அவமதிக்காமல் இருக்க அவை மறைக்கப்பட்டதாக இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசம உரிமை கொடுக்கப்பட்டது போல் அவர்களது கருத்துக்கு சம உரிமை பார்வை கொடுக்கப்பட்டால் ஆண்கள் நிச்சயம் புடவைதான் கட்டநேரிடும்.

காதலுக்கு மறு பெயர் ஆழமான புரிந்துணர்வு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது சொந்தக்கருத்து ஒரு பெண் 28 வயதிலும் ஒரு ஆண் 30 வயதிலும் திருமணம் என்ற காலத்துக்குள் அடியெடுத்துவைக்கும் போதுகாதல் திருமணம் சிறந்தது என்பதை அவர்களே புரிந்து கொள்வர். காதல் 5 அல்லது 6 வருடம் தொடர்ந்தால் தவறு என்னவாக இருக்கும் என்பது புரியாத ஒன்று.

ஒருவரை காதலித்து இன்னொருவரை ஏற்க முடியாமல் தவிக்கும் இடத்தில் நிச்சயம் உண்மையான காதல் இருக்கும் ஆனால் தற்காலத்தில் அப்படி சொல்ல முடியாது. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதது தான் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போதைய காதல்கள் தற்கொலையில் முடியக்காரணம் காதல் தோல்வி அல்ல ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமையும் அதை வெளியில் சொல்ல முடியாத வெட்கமும் என்று தான் சொல்ல வேண்டும். இது தான் காதல் என்றால் எதிரணியில் வாதாட வந்திருப்போரை நான் வரவேற்கிறேன் முதலில் காதல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் பிறகு எதிர்த்து வாதாடுவதை பற்றி சிந்திக்கலாம்.


நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எத்தனை பெண்கள் கணவனை அனுசரித்துப் போகின்றனர் கணவனின் பெற்றோரை சகோதரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல முதல் உரிமை எப்போதும் பெற்றோருக்கே கொடுக்கப்படும் பெற்றோர் பக்கமே அதிகம் சார்ந்திருப்பர் காரணம் கேட்டால் இவள் நேற்றுவந்தவள் தானே எனக்கு பெற்றோர் தான் முக்கியம் என்பர்.

ஆண் பெண் மனங்கள் விருப்பு வெறுப்பு என்பன ஒரே மாதிரி தான் படைக்கப்பட்டது ஆனால் பெண்களுக்கென வந்த பல அடக்கு முறைகள் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. அந்த முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றவுடன் கட்டாயம் தலை தூக்கத் தொடங்கும் பெண் தமது விருப்பங்களை சொல்லமுடியுமே தவிர அவை ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லது ஆண் பெண்ணுக்கு அடிமையாக இருக்கும் காரணம் கேட்டால் இவன் சீதனம் வாங்கித்தானே செய்தவன் இவனுக்கு நான் என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்பர்.

இத் தலைப்புக்கு நான் நினைப்பது இதில் தற்தோதைய இளைஞர்களின் சொந்தக்கருத்துக்களை கேட்பதைவிட அவர்களது அம்மா அப்பாக்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையையும் அவர்களது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற வினாக்களை கேட்கும் போது இதற்கு சரியான பதில் கிடைக்கும். சில இடங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடந்திருக்கும் அங்கு அம்மா அப்பாக்களுக்கிடையிலான பேச்சுவார்ததை கிடையாது. நடுவில் பிள்ளைகள் தான் இருப்பார்கள் அப்பா சொல்வார் ஏதும் ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு இதை அம்மாட்ட சொல்லு அதற்கு அம்மா மட்டும் சளைத்தவர் இல்லை சமைச்சாச்சு சாப்பிட்டு போகச் சொல்லு இதுக்க பிள்ளையள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

காதல் திருமணத்தில் பெரும்பாலும் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியமும் திறமையும் அவர்களிடம் இருக்கும் காரணம் விரும்பிதானே செய்தாய் உன் பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று பெற்றோர் சொல்வது. காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாமையால் பிரிந்துபோகும் எத்தனையோ காதல் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமை என்பது தவறு  காதலை சரியானமுறையில் எடுத்துரைக்கவில்லை அல்லது நீங்கள் தெரிவு செய்த நபர் உங்களுக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் சொல்லலாம் காதலில் நமது தெரிவு தவறாக இருக்கும் படசத்தில் வேறு வழி கிடைப்பதில்லை.

ஏந்தப்பெற்றோரும் முதலில் காதல் திருமணத்தை ஏற்காவிட்டாலும் பின் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வருவார்கள் காரணம் எந்த பிள்ளைகளும் கஸ்ரப்படும் போது பெத்தவங்க சந்தோசப்படப்போவதில்லை எமது தெரிவு சரியானதாக நல்லதாக இருக்கும் பட்சத்தில் முதலில் எதிர்த்தாலும் பிறகு ஏற்கும் மனநிலைக்கு பெற்றோர்கள் வருவார்கள். எனவே எனது தெரிவு காதல் திருமணமே சிறந்தது என்பது தான்.

இது பட்டிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட இரு தலைப்பில் ஒன்றை தெரிவு செய்து வாதாட வேண்டுமென்பதற்காக எடுத்த தலைப்பு மற்றபடி சொந்தக்கருத்து எதுவும் கிடையாது எந்த திருமணமாக இருந்தாலும் சரியான புரிந்துணர்வும் விட்டுக்கொடுக்கும் மனநிலையும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.




READ MORE - காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?

செவ்வியல் நாட்டியம் கண்டியன் நடனம்


ஓவ்வொரு நாட்டிலும் கிராமங்களிலும் தங்களை அறிமுகப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வாழ்க்கை முறைறையை பிரதிபலிக்கவும் தேவைப்படுவது கலைகளே சிங்கள மக்களின் வாழ்க்கை முறை பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றை தாங்கி பல நடனங்கள் உள்ளன. றுகுணு பிரதேசத்தை அண்டி வளர்ந்த சப்ரகமுவ நடனமும் மலையகத்தின் கண்டிப்பிரதேசத்தை அண்டி வளர்ந்த கண்டிய நடனமும் எமது நாட்டின் சிங்கள நடனம்.

இவை ஆட்ட முறையிலும் உடை ஒப்பனையிலும் சிரமமானதும் வேறுபட்டதுமாக காணப்படுகின்றது. அதனால் ஆரம்பத்தில் இந்நடனம் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. காரணம் விரைவான சுற்றுதல், பாய்ச்சல்கள், குதித்தல், தாண்டல் என்பன அதிகமாக இடம்பெறும் இதில் கண்டிய நடனம் சாஸ்திரீயமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவான நடனங்களை போல இதுவும் ஒருவகையில் சடங்கு சம்பிரதாயம் என்ற கட்டுப்பாட்டிற்குறள் தான் நிற்கின்றது. இயற்கை வழிபாடும் தெய்வங்களைத் திருப்திப்பதுத்தவும் நோய் வறுமையை போக்கவும் மந்திரங்களில் பிறந்த நம்பிக்கை, சடங்குகளுக்காக என தோற்றம் பெற்றதே இக் கண்டிய நடனம்.

கண்டிய நடனம் சிங்கள நடனம் என்பதற்கு சிலப்பதிகாரம் சான்றாகின்றது. கண்டிய நடனத்தின் பாடல்கள் புத்தபிரானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நிகழ்வுகளை தழுவியதாகவே இருக்கும்.

மெய்க்கூத்தின் வகையில் தேசி, வடுகு, சிங்களம் என்பன அடங்குகின்றன இதில் சிங்களம் என்பது மொழிக்குரிய ஆட்டம் என்று சிலம்பு கூறுகின்றது. மலை நாட்டிற்கு அருகில் தோற்றம் பெற்றதால் மலையக நடனம் “உடறட்ட நட்டும்” என்ற பெயர் பொதுவாக உண்டு.

இக் கண்டிய நடனம் இரண்டு பார்வையில் பொதுவாக பார்வையாளர் மத்தியில் பார்க்கப்படுகின்றது. உலகியல் ரீதியானது அதாவது கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தவும் விஸ்தீரணமான இடம் கொடுக்கின்றது. ஆடுபவர் தனது முழதாள் தாள, லய கெட்டித்தனத்தையும் அபினயத்தையும் அசைவையும் இதன்மூலம் வெளிப்படுத்த முடியும் அடுத்தது சமயரீதியானது இறையம்சம் நிறைந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவது.

இக்கண்டிய செவ்வியல் நடனமானது ஆடல் அமைப்பு ஆடை அணி கதைக்கரு என்பவற்றின் அடிப்படையில் ஐந்து வகைப்படும் இவை ஐந்தும் சில விசேட அம்சங்களுடன் தனித்துவமாக விளங்குகின்றது

வெஸ்நடனம்- விசேடமாகத் தலையணியைக் குறிக்கும் ஆடலின் நோக்கம் தலைணியாலே விளக்கப்படுவதால் வெஸ்நடனம் எனப்பெயர் பெற்றது தீய சக்திகளை விரட்டவும் நோயிலிருந்து விடுபடவும் இத்தலையணியை அணிந்து ஆடவரார்கள் கண்டிய நடனத்திற்கான பொதுவான அம்சங்களை இந்நடனத்திலே காணலாம்.

நையாண்டி- ஆரம்பத்தில் சிங்கள மன்னர்களின் அரசசபை நடனமாக விளங்கியது. இதில் வேறுபட்ட அலங்காரங்கள் முக்கியப்படும் நையாண்டி எனும் சொற்பதம் தமிழ்ப்பதம் தமிழ்க்கிராமிய கலைகளில் நையாண்டி மேளம் பயன்படுத்த பட்டது அறிந்ததே.

உடக்கி- உடக்கி என்பது இந்நடனத்திpல் பயன்படுத்தப்படும் சிறு வாத்தியக்கருவி இது உடுக்கைப்போன்ற அமைப்பில் காணப்படும். இதில் சிறப்பு என்னவெள்றால் இவ்வாத்தியத்தை வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் நடனமாடுவார்கள். உடக்கி சிவனின் கைகளிலுள்ள உடுக்கைப்போன்று அமைந்துள்ளது.

பந்தேரு- இதன் முக்கியத்துவம் சிலம்பு ஆடபவரது கையில் சிலம்பு காணப்படும் சிலம்பினை சுழற்றிக்கொண்டும் கைகளில் மாறி மாறிப்பிடி;துக்கொண்டும் ஆடுவார்கள். இதில் கண்ணகி கோவலன் கதையின் தாக்கம் இருக்கம் அத்துடன் சிலம்பாட்டத்தின் தாக்கத்திலும் இந் நடனம் தோண்றியிருக்கலாம்.

வண்ணம்- பிற்கால கண்டிய நடன வள்ர்ச்சியில் ஓர் அங்கம் அதனால் சைவம் வைஷ்ண சமய தாக்கங்களை காணலாம். இது தமிழ் கலையுடன் ஒத்துப்போவது அறிந்ததே அதாவது ஹனுமான் வண்ணம் கணேச வண்ணம் மயூரவண்ணம் ஈஸ்வர வண்ணம் என்பன இந்து சமயக்கடவுள்களுடன் ஒத்துப்போவதாக காணப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நெருங்கிய தொடர்பு கலைவடிவங்களில் தெளிவாக அறியலாம். இக் கண்டிய வெஸ் நடனமானது தென்இந்திய கதகளி தலையணியின் சாயலும் கேரள மாந்திரீக முறைகளையும் ஞாபகப்படுத்தும்.

கண்டிய நடனமானது பெரஹரா ஊர்வலங்கள் அரச வைபவங்கள் கோயில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அதிகமாக நிகழ்த்தப்படுகின்றன. பெரஹரா நிகழ்வின் போது இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் விஸ்ணு, முருகன் போன்ற தெய்வங்களின் வழிபாடுகளும் நடைபெறுவதை அவதானிக்கலாம்

எனினும் கண்டிய நடனமானது ஒருவகை கூட்டுக் கலையாகவும் செம்மை பெற்ற சிங்கள நடனமாகவும் விளங்குகின்றது.

READ MORE - செவ்வியல் நாட்டியம் கண்டியன் நடனம்

அழகென்றால் அவள்ள தானா

அழகு என்பது இறைவனது படைப்பிலே இயற்கையாகவே கொடுக்கப்பட்டது ஆனால் இவ் நாகரீகமான உலகில் அழகு என்பது அன்றாட தேவைகளை போல ஒன்றாகிவிட்டது பெண்கள் தம்மைத்தாமே அழகு படுத்திக்கொள்வதில் தமது நேரத்தையே வீணடிக்கின்றனர். ஓவ்வொருத்தரும் தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறும் காலநிலைக்கு ஏற்றவாறும் பேஷியல் செய்கின்றனர் நம் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் தரங்களும் தாக்கங்களும் அதிகரித்து செல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அத்தோடு பேஷியல் செய்வதனால் மன அமைதி ஏற்படுகின்றது என்றும் சொல்லலாம். கர்ப்பிணிப் பெண்கள் பேஷியல் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. பொதுவாகவே யாரையும் அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் இருக்கச் சொன்னால் இருக்க மாட்டார்கள் ஆனால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேஷியல் செய்வதற்கு பெண்கள் கதைக்காமல் கண்களை மூடி அமைதியாக இருக்கின்றனர். பேஷியல் செய்யும் போது மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம் மற்றவர்களால் றிலாக்சேஷன்(மசாச்)  கொடுக்கும் போது தானாகவே மனம் நிம்மதி அடையும் அது உடலுக்கு நிச்சயம் நல்ல பலனை தரும் என்பது யாராலும் மறுக்க முடியாது அத்துடன் பேஷியல் செய்வதற்கென இருக்கும் இடங்களை பார்த்தோம் ஆனால் அவை பொருவாக மங்கலான நிறங்களை உடையனவாகவே இருக்கும்.

முன்னைய காலத்திலும் பெண்கள் தங்களை அழகு படுத்த துளசி, தக்காளை, வேப்பந்துளிர், மஞ்சள்  போன்ற பலவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர் அவை அப்போது எந்த விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் திறமையானது மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும். போட்டி போட்டுக்கொண்டு தமது வியாபாரத்திற்காக தயாரித்து விளம்பரத்திற்காக பிரபலமானவர்களை நாடி விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் பாதிப்பு என்பது உபயோகிக்கும் போதும் அதன் பலன் வெளிப்படும் போதும் தெரிவதில்லை அதன் விழைவானது பல நாட்களின் பின்போ அல்லது இனி தேவையில்லை என்று பாவிக்காமல் விடும் போதோ வெளிப்படுகின்றது அவர்களுக்கே தெரியாமல் முகம் மாறிப்போகின்றது.

இதில் தவறு என்னவென்றால் சரியான முறையை கையாளாமை என்று சொல்லலாம் கவர்ச்சியான உடலமைப்பும் முக அழகும் வேண்டும் என்று சில காலகட்டத்தில் நினைக்கும் பெண்கள் சரியான ஆலோசனை பெறாமல் தாமாக ஒரு விடயத்தில் முடிவெடுத்து  விளைவுகளை காசுகொடுத்து வாங்குகின்றனர். இதனால் சிலருக்கு ஒவ்வாமை புற்றுநோய் ஏற்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் பெண்மையை இழக்கச் செய்கின்றது இராசயனக்கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லப்படுகின்றது
முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்கள் தங்கள் கால நிலைக்கு தகுந்தாற் போல் பாவிக்கும் சில அழகுப்பொருட்களை இங்கு இருப்பவர்களுக்கு கொடுக்கும் போது அவர்கள் அதனை பயன்படுத்தும் ஒரு நிலை ஏற்படுகின்றது இதன் போது பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.


அத்துடன் தலைமுடியை அழகு படுத்த என மிஷின்களை பயன்படுத்துவது என்பது ஒருவகையான மோகமாகவே உள்ளது. அது மட்டுமில்லாமல் தலைமுடி வளர வேண்டும் என பாவிக்கும் ஒயில்கள் தமக்கு பொருந்துமா இல்லையா என்று கூட யோசிப்பதில்லை உதட்டுக்கு பூசப்படும் லிப்டிக்ஸ் வாய்க்குள் போகும் போது எவ்விதமான நோய்களை உருவாக்கும்  என்பது பலருக்கு தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் பாவிக்கிறார்கள் நாமும் பாவித்தால் என்ன என்று தாமாக சிந்தித்து பாவிக்க தொடங்குகின்றனர்.

அழகு சாலைகள் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த வெளிநாட்டு மோகம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணமாகுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று பேஷியல் வகுப்புகளுக்கு செல்கின்றனர். பேஷியல் வகுப்பொன்றில் கல்வி கற்கு மாணவர்களிடம் போய் கதைத்து பார்த்தால் அதிகமாணவர்கள் சொல்லும் பதில் எனக்கு வெளிநாட்டில் திருமணமாகி விட்டது நான் இன்னும் சில மாதங்களில் சென்று விடுவேன் எனக்கு இவை தேவை தானே அதனால் தான் படிக்கிறேன் என்பார்கள். பிறகு சில சமயங்களில் அவர்களால் போக முடியாமல் போகும் பட்சத்தில் அவர்கள் சொந்தமாக ஒரு அழகுநிலையம் தொடங்குவார்கள் இப்படி பலரும் தொடங்கும் பட்சத்தில் போட்டி அதிகமாகுமே தவிர யாரும் அழகாக போவதில்லை.

இயற்கை மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எந்த பாதிப்பும் வராது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அவையை இனங்கான்பதென்பது நம் இளம் சமூகத்தினர் மத்தியில் பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கின்றது இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் சில அழகுசாதனப் பொருட்களும் பல இராசாயனங்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது இதன் காரணமாக இருக்கலாம். அத்துடன் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு வகையான உணவுகளும் எமக்கு அழகினை சேர்ப்பது என்றே சொல்லலாம்
இயற்கை அழகு யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை ஒருவர் அழகாக இருப்பதற்கு மனம் தான் முக்கிய காரணம் மனம் சந்தோசமாகவும் அழகான சூழல், சுற்றத்தார் கிடைத்தால் போதும் ஒருவர் இயற்கை அழகாக இருந்து விடலாம்..


 பலரின் மன அழகுச்சாலைகள் திறந்தால் போதும் அதிகரிக்கும் அழகுநிலையங்கள் தானாக மூடிக்கொள்ளும்.

READ MORE - அழகென்றால் அவள்ள தானா

நடனமும் நானும்

சிறுவயதில் இருந்தே நடனம் என்றால் ஒரு வகையான ஆர்வமாகவே இருந்து விட்டது. 3ம் வகுப்பு படிக்கும் போது தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் மேடையேறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது வரை நடனம் என்றாலே என்வென்று தெரியாது அந்தப்பக்கமே போனதில்லை. முதல் மேடை முதல் அனுபவம் இரண்டு நாள் பழகி மூன்றாம் நாள் மேடையேறுவதென்பது சற்று சிரமமாக தான் இருக்கும். அன்று எனக்கு எப்படி தைரியம் வந்ததோ தெரியவில்லை இன்று அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால் நிச்சயம் மேடையேறவே மாட்டேன். ஆனால் அன்று எனக்கு அவ்வாறு இருக்கவில்லை பலரின் பாராட்டினை முதல் மேடை வாங்கி குவித்தது. ஆனால் என் நடனத்தினை பார்க்க என் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை அன்று என் அப்பா என்னிடம் கூறிய வார்த்தை “உந்த ஆட்டமெல்லாம் உதோட நிப்பாட்டனும் இனி ஆட்டம் கீட்டம் என்டெல்லாம் திரியாம படிக்கிற வேலைய பாருங்கோ” செய்யாதே என்டா எப்படி செய்யாமல் இருக்க முடியும் நடக்கிற காரியமா இதெல்லாம்.
கும்மி, கோலாட்டம், கரகம், காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம், செம்புநடனம், புரவியாட்டம், தெருக்கூத்து, நிழலாட்டம், உழத்தி நடனம்,  குறத்தி நடனம்,  பிச்சக்காரி நடனம்,  மீனவ நடனம், அரிவுவெட்டு நடனம், மந்தைவளர்ப்பு நடனம், உளக்கை நடனம்(தானியம் இடிக்கும் போது), தொழிலாளர் நடனம், வள்ளி, நடனமாதர், உமாதேவி, கோப்பெருந்தேவி, பரதம், ஒடிசி என பல வேடம் போட்டாச்சு. 63 மேடை ஏறியாச்சு இன்று வரை என் குடும்பத்தில் யாரும் வந்து பார்த்ததில்லை ஏக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அதை நினைத்து வருந்தியதில்லை.
அனைத்து சந்தர்ப்பத்திலும் மேடையேறும் போதும் தட்டிக்கொடுத்தது தோழியின் வார்த்தைகள் தான். இருப்பினும் என் டயறியோடு மட்டும் பேசி உறைந்து போன கதைகள் ஏராளம். இன்று அவள் ஒரு சங்கீத ஆசிரியர் எனக்குள்ளும் ஓர் பெருமிதம் தான். இதுவரை எத்தனையோ மேடைகள் பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் வாங்கி தந்தது சான்றிதழ்கள் மட்டுமே என்னிடம் உள்ளன எந்த பரிசினையும் நான் வீட்டிற்கு கொண்டு வந்ததில்லை முதல்முதலில் எனக்கு தெரிந்து நடனப்பரிசாக கிடைத்தது நிறைகுடம் சிறுபிள்ளை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது அதனால் அருகில் இருந்த தோழியின் வீட்டில் வைத்து பல நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு கொண்டு சென்றேன். வீட்டில் யாரும் அது எனக்கு கிடைத்த பரிசு எனும் போது நம்பவில்லை நம்பவைக்க வார்த்தைகளும் என்னிடம் வலிமையாய் இருக்கவில்லை அனாலும் இன்று என்னிடம் தான் உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு கிடைத்த எந்த பரிசையும் வாங்குவதற்கு நான் மேடையேறியது இல்லை. சான்றிதழை தவிர எதையும் வீட்டிற்கு கொண்டு சென்றதில்லை இன்றும் என் நண்பியின் வீட்டில் என்னுடைய சிறு சம்பியன் அவளது கண்ணாடி அலுமாரியில் சிரித்து கொண்டு தான் இருக்கின்றது.
நான் இன்று ஒரு 35 மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கின்ற போதும் தவிர்க்க முடியாத சூழ்நிலை எனக்குள்ளும் இருக்கம் ஒரு சிறு குற்ற உணர்வு என்னை இக்கலையை விட்டு விலகச் செய்கின்றது. என்னிடம் நடனம் பயின்ற மாணவனை என்னிடத்தில் குருவாக்கி விட்டு இன்றுடன் விலத்துகின்றேன்
என்னை வளர்த்து விட்ட பெற்றோருக்கும், ஆசிரியர்கள், தோழர்கள் என்னை தட்டிக்கொடுத்த அத்தனை மேடைகளுக்கும், பல பரிசுகள் பாராட்டுக்கள் கைதட்டுக்களை வாங்கி தந்த பாத்திரங்களுக்கும், என் பாதத்தின் வலிகளை பொறுத்துக்கொண்ட பூமாதேவிக்கும், என்னை நலமுடன் நடமாட விட்ட இறைவனும்கும் பல கோடி நண்றிகள்.
 

READ MORE - நடனமும் நானும்

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..