காத்திரமாண நிகழ்ச்சிகளால் காண்போரை மகிழ்வித்த கலை விழா



 “ஆற்றில் போட்டாலும் அளத்து போட வேண்டும் கூத்தில் போட்டாலும் அடவு போட வேண்டும்”

 தமிழர்களின் நாட்டுப்புற கலைகளில் உண்மையை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு அவற்றில் முக்கியமாணது எந்தக்கலை என்று சொல்ல எவராலும் முடிவதில்லை.

   21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலாணவர்களுக்கு எத்தனை வகையாண ஆட்டங்கள் உண்டு என கேட்டால் யாரிடமிருந்தும் முழுமையாண பதில்கள் வராது. மிருதங்கத்தை பக்கவாத்தியமாக கொண்ட பரதநாட்டிய அரங்கேற்றங்கள் ஆங்காங்கே இடம் பெற்று வருகின்றது. யுத்த காலத்தின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் நாட்டார் கலைகள் அரங்கேறியுள்ளன என்றால் மகிழ்ச்சியே.

  பொதுவாக பார்க்குமிடத்து இக்கலைகளின் அனைத்துத் தன்மைகளையும் ஆட்டங்கள் மூலமாக நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நாட்டுப்புற கலை வடிவங்கள்  தோன்றி சுமார் 5000 ஆண்டுகளாக இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆந்த வகையில் தமிழகத்திலிருந்து வருகை தந்து நாட்டார் கலைகளை எம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் ஆடலரசு வேணுகோபால். ஆத்துடன் இக்கலைகளை வெற்றி கரமாக பல இடங்களில் மேடையேற்றியுள்ளார்.

  கனதியாண குரல் வளமும் தெளிவாண உச்சரிப்பும் சுருதிலயம் வழுவாமல் கிராமிய மணம் கமழப்பாடும் திறனும் நாட்டார் இயலின் தோற்கருவிகளை அட்சரம் பிசகாமல் நல்லோசை எழ வாசிக்கும் ஆற்றலும் ஒருங்கே கைவரப்பெற்ற கலைஞர் ஆடலரசுவின் இன் நிகழ்ச்சியாணது எதிர்காலத்தில் கிராமிய கலை பண்பாட்டு விழாக்களின் ஓரு முன்னோட்டமாகும்.

  வேணுகோபால் ஆசிரியர் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், கும்மியாட்டம், ஆதிவாசியாட்டம் போன்ற ஆட்டவகைகளை எம் மாணவர்களுக்கு பழக்கி மேடையேற்றியுள்ளார். ஒரு வாரத்துக்குள் இவர்கள் பழகினார்கள் என்பது பலருக்குத் தெரியாத உண்மை.

  இதில் பங்கு பற்றிய மாணவர்கள் பழக்கிய ஆசிரியர் பார்வையாளர் என அனைவருடனும் சிறிது நேரம் உரையாடினேன் அவர்கள் தங்களுக்கே உரிய சிறப்பியல்புகளுடன் தமது அனுபவத்தைக் கூறினர். 



 “புதிய முயற்சிகளில் ஆரம்பமென்பது கடலில் நீச்சல் போட்டு மீன் பிடிப்பது போன்றது”
       



                            சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி ஆதித்தமிழன் விடுதலைக்காக உழகை;கின்ற ஓர் அமைப்பில் இயங்கக்கூடிய சமூகப்போராழியாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கலைக்குழு தலைவர் ஆடலரசு வெங்கடேசன் வேணுகோபால் கூறுகையில் 
     
     முறிச்சம்பேடு கிராமத்தில் தான் பிறந்தேன். என்னை மாமா தான் படிக்கவைத்தார் நான் சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) இதழியல் கற்றுக் கொண்டிருக்கின்றேன். அத்துடன் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்கின்றேன். ஏங்கள் கிராமத்தில் நான் தான் முதலாவது பட்டதாரி.

   2009ம் ஆண்டு யாழ் மண்ணிலிருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு கற்க வந்திருந்த தே.தேவானந்த் அங்கு “முற்றம்”  என்ற பெயரில் ஒரு கலைக்குழுவை ஆரம்பித்தார். இவ்வாறே எனக்கு இக்கலைக்குழுவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. தேவா அண்ணாவின் அறிமுகமும் கிடைத்தது என்று சொல்லத் தொடங்கிய ஆடலரசு தனது கலைப்பயனத்தை கூற ஆரம்பித்தார்.

   தாத்தா ஒரு கூத்துக்கலைஞர் ஆனால் அதன் தொடர்ச்சி எமக்குக் கிடைக்கவில்லை இடையில் அறுபட்டு போய்விட்டது. பின்னர் என் மாமாவின்               மூலமே இக் கலைகளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்;து. தாத்தாவிடம் தான் கற்றுக் கொண்டவற்றை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பல கலைஞர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி முக்கியமாக தப்புக்கலையையும் மற்றையவற்றை துணையாகவும் முறைப்படி கற்றுத்தந்தார்.

 சாதி மறுப்பு, மத மறுப்பு கொள்கையைத்தான் நாங்கள் வரிந்து கொண்டுள்ளோம். தொல்குடித் தமிழர்களின் அடையாளமாக தப்பு இசையை கருதுகின்றோம். அதனால் அதனை மீட்டுருவாக்கம் செய்வதோடு எம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றோம். பேச்சால் சொல்ல முடியாததை பாட்டாலும், இசையாலும் உணர்ச்சியுடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கமுடியும்.

 இன்றும் நிறையத் தடைகள் இருக்கின்றன தப்பு இசையை இன்றும் சாதிமறுப்பு, அரசகெடுபிடி என தாழ்வாக கருதும் நிலையுள்ளது. தவறான எடுத்து நோக்கும் தடைக்குக் காரணம் என்று கூறலாம்.

  யுhழ்ப்பாணம் வர வேண்டும் என்பது எனது கனவு. என் கனவை நினைவாக்கியுள்ள தேவா அண்ணாவிற்கு நன்றிகள். எமது கலை வடிவங்கள் யாழ் மண்ணிலும் கால் பதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனது வேர்வைத்துளி யாழ் மண்ணையும் நனைத்துள்ளது.

  இம் மாணவர்கள் பற்றி கூற வேணடும் மிகவும் ஆர்வமுள்ள மாணவர்கள். மிவும் குறுகிய நாட்களே ஒதுக்கப்பட்டது ஒரு வாரத்துக்குள் மேடையேற்ற முடிந்தமைக்கு காரணம் இவர்களது ஆர்வமும், ஒத்துழைப்புமே மகிழ்ச்சியாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்கள் கலையில் ஆர்வமுடையவர்கள். நாங்கள் மேடையேறிய அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களது ஆர்வத்தைப் பார்த்தபோதே அறிய முடிந்தது. மிகவும் மகிழ்சிசியாக உள்ளது என்றார்.

 


 ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் கூறுகையில் 

நாம் ஊடகப் பயணமாக தென்னிந்தியா சென்றிருந்த வேளை சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களால் இக்கலை நிகழ்த்தப் பட்டது. அப்போது நாமும் இவ்வாறாண கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் இருந்தது. ஆனால் முடியுமோ முடியாதோ என்ற தயக்கமும் எமக்குள் இருந்தது. ஆனால் இப்போது நாம் இவற்றை கற்றுக்கொண்டமையானது மகிழ்ச்சியாக உள்ளது. எமக்கு இவ்வாறான கலைகள் இருப்பதை அறிமுகம் செய்த தேவானநத் ஆசிரியருக்கும் எமக்கு பெறுமையாக கற்றுத்தந்த வேணு அண்ணாவிற்கும் நன்றிகள்.

  நாட்டுப்புறக்கலை என்பது பெரிய கடல் அக்கடலில் ஒரு நாயோ, பூனையோ சென்று நீர் குடித்தால் எவ்வளவைக் குடிக்க முடியுமோ அவ்வளவைத்தான் நாமும் கற்றுக் கொண்டுளோம் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. அத்துடன் எமக்கு ஓரு வாரமே ஒதுக்கப்பட்டது. குறித்த நேரத்திற்கு வர முடியாமல் போணமையால் எம்மால் எல்லா ஆட்டவகைகளையும் பழக முடியவில்லை. இதனை இத்துடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்தும் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.



                                                                                               செயற்திறன் அரங்க இயக்கத்தின்
மாணவர்கள் கூறுகையில் 

 தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்து எமக்கு இக்கலைகளை கற்றுத்தந்த வேணுகோபால் ஆசிரியருக்கு எமது நன்றிகள். ஒரு வாரத்துக்குள் இக்கலைகளை பழக்கி மேடையேற்றியுள்ளார். இத்துடன் நின்று விடாமல் மேலும் நிறைய கலை பயிற்சிகளை எமது ஆசிரியரிடம் பழக வேண்டும் என்ற ஆசை எமக்கு உண்டு.
 
  பல புதிய முகங்களுக்கு எம்மை அறிமுகப்படுத்தியுள்ளார். சினிமாவில் குத்து பாடல்களை கேட்கும் போது ஆட வேண்டும் என தோன்றியுள்ளது ; ஏன் ஆடியுள்ளோம் ஆனால் இவற்றை முறைப்படி கற்பிக்க ஒரு ஆசிரியர் கிடைக்க மாட்டாரா என நினைத்ததும் உண்டு. அத்தனையும் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பாக்கவில்லை மகிழ்ச்சியாக உள்ளது.

   வேணுகோபால் ஆசிரியரின் கலை ஆர்வம் திறமைகள் மென்மேலும் வளரவேண்டும். அத்துடன் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய நண்பர்களை மறக்க முடியாது. இதற்கு களம் அமைத்துத் தந்த செயற்திறன் அரங்க இயக்கத்திற்கும் எமது நன்றிகள். ஏன்று கூறினார்கள்.

               
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  கைலாசபதி அரங்கில் மேடை ஏற்றிய போது அரங்கிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் கூறுகையில்
“ஐந்து வகையான நடனங்கள் இடம்பெற்றன.
கும்மியாட்டம்,
ஒயிலாட்டம்
தப்பாட்டம்,
ஆதிவாசியாட்டம்,
சாட்டைக்குச்சியாட்டம்.இடையிடையே இவ்வாட்டங்களிற்கான விளக்கங்களும் நாட்டார் பாடல்களும் என அரங்கில் அமர்ந்திருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் பணன்படுத்தப்பட்டன.பூஜ்ஜியம் இல்லை என்றால் கணிதம் இல்லை.அதே போல் வாத்தியங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது இந்தத் தப்பு என்று வேணு அளித்த விளக்கம் வரவேற்க்கத்தக்கது.
இந்தக் கலைகளை எல்லோரும் பயில்வதன் மூலமே தமிழர் கலாசாரத்தை எமது பண்பாட்டை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.பல கலைகள் அழிந்து போகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது.இவை மென்மேலும் வளர வேண்டும்.இம் மாணவர்கள் மிகவும் அதிஸ்டம் செய்தவர்கள் என்றனர்.








கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அரங்கேற்றிய வேளை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கூறுகையில் 
“உணர்வுபூர்வமாக கூறுகின்றோம் விபரிக்க முடியாத மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறோம்.அழிந்து கொண்டுபோகும் பாரம்பரிய கலைக்கு உயிரூட்டியுள்ளீர்கள்.அத்துடன் தப்புக் கலை தொடர்பாக நல்லெண்ணத்தை வரவழைத்துள்ளீர்கள்.
நாட்டார் கலை என்பது தொன்று தொட்டு கலைக்கு கலைக்கு அடித்தளமிட்டதாயிருந்தாலும் நவீன காலத்தில் மழுங்கடிக்கப்பட்டு நவீனம் முதலிடம் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் நாட்டார் கலையை அடியொட்டியதே என்பதை வெளிப்படுத்தும் இந்த தென்னிற்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை சிறப்பிடம் பெற்றுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது.
   நவீனத்துவம், சினிமா மோகம் போன்றவற்றின் ஆதிக்கம் காரணமாக அழிந்து வரும் நாட்டார் கலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் காலத்தின் தேவை வரவேற்கத் தக்கது. ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எமக்கு சிறந்த களமாக மண்வாசனையை மீளவும் தட்டி எழுப்பியுள்ளது என்றனர்.





அதேவேளை யாழ்ப்பாணம் 
கல்வியற்கல்லூரியில் 
அரங்கேற்றியிருந்தனர். 
அந்த மாணவர்கள் கூறுகையில் 


 வேணுகோபால் சேர் மிகவும் திறமை வாய்ந்தவர். இக்கலைகளை ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எமக்கு கற்பிக்கப்படுமானால் இலகுவில் இவ்வாறாண கலைகளை வெளியில் கொண்டு செல்ல முடியும். இலகுவில் இளம் சமுதாயத்தை சென்றடையும்.
இவ்வாறாண கலைகளை மலையகப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் முடிந்தால் மலையகப் பகுதிகளிலும் மேடையேற்றுங்கள் என விண்ணப்பம் வைத்த அவர்கள் மேலும் கூறத்தொடங்கினர்.
இக்கலைகளை நேரில் பார்த்த பின்பு நாம் தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறோம் தேவானந் சேர், வேணுகோபால் சேர், நடனம் ஆடிய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
 பாரம்பரிய கலைகள் இன்றைய இளம் சந்ததியினரிடம் அருகிக்கொண்டிருக்கும் வேளை இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகும். இவை இத்துடன் நின்று விடாமல் மேலும் வளர வேண்டும் என்று கூறினார்கள்.






யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுன்கலைப்பீடமான மருதனாமடத்தில் அமைந்துள்ள இராமனாதன் நுன்கலைக் கழகத்தில் மேடையேற்றிய வேளை ஆடிய கால்கள் சும்மாவா இருக்கும் தப்பு இசையைக் கேட்டு சேர்ந்து ஆடிய நுண்கலை மாநவர்கள் கூறுகையில் 



 பறை தமிழன் வரலாற்றோடு சேர்ந்து வளர்ந்து வந்தது. தப்பாட்டம் என ஒரு வகை ஆடல் உண்டு என படித்திருக்கின்றோம் நேரில் பார்த்த போதே உணர முடிகிறது. பறை என்றாலே ஈமைச்சடங்கு தான் ஞாபகம் வரும் அனைருக்கும். இவ்வாறான கலைகள் தொடர்ந்தும் அரங்கேறினால் இவ்வாறாண எண்ணங்களை மாற்ற முடியும். யாழ்ப்பாணத்தில் சில காளி கோயில்களில் திருவிழாக்களின் போது மற்றும் விசேட விழாக்களிலுமே பறையடிக்கும் வழக்கம் உண்டு. இவை இத்துடன் நின்று விடாமல் மென்மேலும் வளரவேண்டும். என்று கூறினார்கள்.






இராமநாதன் நுன்கலை பேராசிரியரும் நடன 
ஆசிரியருமாண சாந்தினி மிஸ் கூறுகையில் 



கிராமிய ஆடல் வகைகளை நேரடியாக மேடையேற்றியமை வரவேற்கத் தக்கதாகும். நான் இக்கலைகளை தமிழ்நாட்டிற்கு சென்றிருந்த வேளை பார்த்திருக்கின்றேன். யாழ் மாணவர்களும் இக்கலைகள் தொடர்பாக அறிய வேண்டும் என நினைத்தேன் அது தற்போது நிறைவேறியுள்ளது.
 பறையாட்டம,; ஒயிலாட்டம், ஆதிவாசியாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், தப்பாட்டம் போன்ற ஆட்ட வகைகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர் இவை மட்டுமல்ல கிராமிய ரீதியில் இன்னும் பல ஆட்டவகைகள் உண்டு அவையும் வெளியில் வர வேண்டும்.
பரத நாட்டியக் கலையை பாரம்பரிய கலையாக கலைமாமணி மதிருக்மிணி அருண்டேல் மிளிரச் செய்தார். அதே போல் கிராமிய ஆட்டவகைகளும் தமது தன்மை மாறாமல் மிளிர வேண்டும். பரதநாட்டியம் ஆடும் போது உடல் இறுக்கமாக இருக்க வேண்டும். ஆனால் கிராமிய ஆட்டவகைகளை ஆடும் போது உடம்பு ஒரு தளர்வு நிலையில் இருக்கும் இயல்பான வளைவு நெளிவுடன் ஆடுவார்கள். ஆனால் இன்று பாடசாலைகளிலோ அல்லது விழாக்களின் போதோ கிராமிய நடனங்கள் என கும்மி, கரகம்;, காவடி, கோலாட்டம் என்பன அரங்கேறுவது வழக்கம். அவ்வாறு அரங்கேறும் போது கிராம மணம் வீசுவதில்லை தமது சுகத்திற்கு ஏற்ற மாதிரி வேறுபட்ட அசைவுகள் போட்டு அழகு படுத்துவதாக நினைத்து மங்கச்செய்கின்றனர்.
 பறையாட்டம்(தப்பாட்டம்) பற்றிக் கூற வேண்டும். பறை ஆனது தமி-ழர் வரலாற்றோடு சேர்ந்து வளர்ந்து வந்ததாகும். இன்றும் சில கோயில்களிலும், ஈமைச்சடங்கின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பறை என்றாலே செத்தவீடு தான் நினைவுக்கு வரும் அனைவருக்கும். அவ்வாறாணவர்களுக்கு இக்கலைகள் நிகழ்த்தப்பட்டமை ஒரு வரப்பிசாதாகும்.


கிராமிய ஆட்டங்கள் தொடர்பாண சரியாண தகவல்கள் மாணவர்களை சென்றடை வேண்டும். கிராமிய ஆட்டங்களுக்கிடையிலாண வேறு பாடுகளை உணர வேண்டும் கல்வி மூலம் இக்கலைகளை திணிக்கக் கூடாது. பல்கலைக்கழக மாணவர்கள் இக்கலைகள் தொடர்பாண ஆய்வுகள் எடுக்கிறார்கள். ஆனால் அவை படிப்போடு நின்று விடுகின்றனர். செய்முறையாக வருவதில்லை வரவேண்டும். இக்கலைகளை பயின்ற மாணவர்கள் பற்றிக் கூறவேண்டும். குறுகிய நாட்களுக்குள் ஆர்வமாக பழகி ஆடியுள்ளனர். பழகியதோடு நின்று விடாமல் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். உண்மையில் இவர்களது முயற்சி பாராட்டத்தக்கதாகும் என்றார்.





                                                      உண்மையிலே இக்கலை விழா தமிழர் பண்பாட்டின் பாரம் பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உணர்வு புர்வமாக நடந்தது என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. எதிர் காலத்தில் கிராமிய நடனங்கள் களைகட்டும் அதற்கு இவ்விழா ஒரு வெள்ளோட்டம் என்பதை மறுப்பதற்கில்லை.
யுத்தம் முடிவடைந்து தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைதி நிலை தோன்றியதையடுத்து இவ்வாறாண கலை நிகழ்ச்சிகள் நடந்தமை மகிழ்ச்சியே. எனவே இவ்வாறான கலை நிகழ்வுகள் இத்துடன் நின்று விடாமல் தொடர்ந்தும் வளர்க்கப்பட வேண்டும். 
 இவ் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற காரணமாயிருந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய இயக்குனர் தே.தேவானந்த் பாரம்பரிய கலைகளை பழக்கிய தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த ஆடலரசு வேணுகோபால் மற்றும் இதில் பங்கு பற்றிய மாணவர்கள் துவாரகி, மெரின், சிந்து, சுகிர்தினி, அனோஜா, ஜஸ்வர்யா, தட்ஸா, சுரேஸ், தர்சன், கஸ்ரோ, ஜெனகன், ஜெகன், பிரதீபன் மற்றும் செயற்திறன் அரங்க இயக்க மாணவர்கள் திரைக்குப்பின்னால் உதவி புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.   







 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..