வெள்ளைப்பூக்கள் குறுந் திரைப்படம் திரைவிமர்சனம்




கடந்த வியாழக்கிழமை வெளியாண நெடுந்திவு முகிலனின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெள்ளைப்பூக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இக் குறுந்திரைப்பட விழாவை நிக்சன் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் வாழ் நாள் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் கலந்து கொண்டார்.

நெடுந்தீவு முகிலனின் இயக்கத்தில் ரஜீவன் தயாரிக்க அமலனின் ஒளிப்பதிவில் நாயகன் கிருத்திகன் நாயகி இந்துவின் நடிப்பில் படத்தொகுப்பு பணியை சிவநேசன் வழங்க அழகாண மாலையாக உருவெடுத்துள்ளது வெள்ளைப்பூக்கள்.
விதவைப் பெண்களின் ஏக்கங்களையும் அவர்களது சூழலையும் சித்தரிப்பதாக அமைந்ததே வெள்ளைப்பூக்கள் திரைப்படம். ஆழகான கதையை ஆழமாக சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் முகிலன். ஆனாலும் மௌனப்படமாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் படத்திற்கு இசையின் பங்களிப்பு பக்கபலம் என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் தொடக்கத்திலே வரும் பாடலில் வரிகள், இசை, காட்சிகள், என்பன பார்வையாளரை கவர்ந்துள்ளது.
குடத்தை தூக்கி இடுப்பில் வைச்சாய்
என்னை எடுத்து நெஞ்நில வைச்சாய்

என்ற வரிகள் அநேகமானோரை, முக்கியமாக இளைஞர்களை கவர்ந்துள்ளது. படத்தின் முதற் காட்சியில் வீட்டை விட்டு ஓடிப்போகும் காதலர்கள் எங்கு சென்று தங்கியிருக்கிறார்கள், நாயகன் நாயகி கல் உடைக்கும் தொழிலுக்குப் போவதும், ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் போதும் நாயகன் மது போத்தலுடன் திரும்புவதும் என கதை நகருகிறது.


நாயகன் எவ்வாறு மரணிக்கிறார் என்பது திரைப்படத்தின் திருப்பமாக அமைவதுடன் அதன் பின் நாயகியின் நிலை என்ன? எவ்வாறு சூழலில் பயணிக்கிறாள் என்பது தான் கதையின் மிகுதி.
ஓடிப்போய் வீடு தேடும் காட்சிக்கு அடுத்ததாக நாயகன் வாயில் சிகரெட்டை காட்டுவது காதலர்களை, முக்கியமாக பெண்களை சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மாட்டுவண்டிச் சவாரி, பனை மரங்கள், தக்காளைச் செடிகள் என யாழ் மண்ணின் இயற்கை வனப்பை மேலும் அழகான காட்சிகளாக அமலனின் ஒளிப்பதிவு காட்டியுள்ளது. வழக்கமான தமிழ் சினிமா போல் காதல் காட்சிக்கு ஒரு மரத்தை சுற்றி நாயகன் நாயகி ஓடுவது போல் பாடல் காட்சி அமைந்திருந்தாலும் வரவேற்கத்தக்கது.
நாயகன் நாயகிக்கிடையில் காதல் வரும் காட்சியில் நாயகியின் நடிப்பு வரவேற்கத்தக்கது.


நாயகன் முரளி குடித்து விட்டு அயல் வீட்டுக்கதவைத் தட்டுவது நாயகி தேன்மொழி வேறொரு பக்கத்தில் இருந்து வந்து நாயகனை தம் வீட்டுக்குள் அழைத்துச் செல்வதும் என காட்சியில் சில நகைச்சுவைகளும் தலை காட்டுகின்றன.

படத்தில் 2வது பாடல் பார்வையாளரை மெய் சிலிர்க்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புது முகங்களின் அறிமுகத்தில் திரைப்படம் உருவாக்கப்பட்டாலும் அதன் தாக்கம் தெரியாமல் படத்தை இயக்கியிருப்பது பாராட்டத்தக்கது. யாழில் புதிய முயற்சியை நாம் வரவேற்பதுடன் கலைஞர்களை பாராட்டுவதும் எதிர்கால கலைஞர்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

மொத்தத்தில் வெள்ளைப்பூக்கள் வெற்றி நடைபோடும் வாசப்பூக்கள் தான்.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..