செவ்வியல் நாட்டியம் கண்டியன் நடனம்


ஓவ்வொரு நாட்டிலும் கிராமங்களிலும் தங்களை அறிமுகப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வாழ்க்கை முறைறையை பிரதிபலிக்கவும் தேவைப்படுவது கலைகளே சிங்கள மக்களின் வாழ்க்கை முறை பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றை தாங்கி பல நடனங்கள் உள்ளன. றுகுணு பிரதேசத்தை அண்டி வளர்ந்த சப்ரகமுவ நடனமும் மலையகத்தின் கண்டிப்பிரதேசத்தை அண்டி வளர்ந்த கண்டிய நடனமும் எமது நாட்டின் சிங்கள நடனம்.

இவை ஆட்ட முறையிலும் உடை ஒப்பனையிலும் சிரமமானதும் வேறுபட்டதுமாக காணப்படுகின்றது. அதனால் ஆரம்பத்தில் இந்நடனம் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. காரணம் விரைவான சுற்றுதல், பாய்ச்சல்கள், குதித்தல், தாண்டல் என்பன அதிகமாக இடம்பெறும் இதில் கண்டிய நடனம் சாஸ்திரீயமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவான நடனங்களை போல இதுவும் ஒருவகையில் சடங்கு சம்பிரதாயம் என்ற கட்டுப்பாட்டிற்குறள் தான் நிற்கின்றது. இயற்கை வழிபாடும் தெய்வங்களைத் திருப்திப்பதுத்தவும் நோய் வறுமையை போக்கவும் மந்திரங்களில் பிறந்த நம்பிக்கை, சடங்குகளுக்காக என தோற்றம் பெற்றதே இக் கண்டிய நடனம்.

கண்டிய நடனம் சிங்கள நடனம் என்பதற்கு சிலப்பதிகாரம் சான்றாகின்றது. கண்டிய நடனத்தின் பாடல்கள் புத்தபிரானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நிகழ்வுகளை தழுவியதாகவே இருக்கும்.

மெய்க்கூத்தின் வகையில் தேசி, வடுகு, சிங்களம் என்பன அடங்குகின்றன இதில் சிங்களம் என்பது மொழிக்குரிய ஆட்டம் என்று சிலம்பு கூறுகின்றது. மலை நாட்டிற்கு அருகில் தோற்றம் பெற்றதால் மலையக நடனம் “உடறட்ட நட்டும்” என்ற பெயர் பொதுவாக உண்டு.

இக் கண்டிய நடனம் இரண்டு பார்வையில் பொதுவாக பார்வையாளர் மத்தியில் பார்க்கப்படுகின்றது. உலகியல் ரீதியானது அதாவது கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தவும் விஸ்தீரணமான இடம் கொடுக்கின்றது. ஆடுபவர் தனது முழதாள் தாள, லய கெட்டித்தனத்தையும் அபினயத்தையும் அசைவையும் இதன்மூலம் வெளிப்படுத்த முடியும் அடுத்தது சமயரீதியானது இறையம்சம் நிறைந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவது.

இக்கண்டிய செவ்வியல் நடனமானது ஆடல் அமைப்பு ஆடை அணி கதைக்கரு என்பவற்றின் அடிப்படையில் ஐந்து வகைப்படும் இவை ஐந்தும் சில விசேட அம்சங்களுடன் தனித்துவமாக விளங்குகின்றது

வெஸ்நடனம்- விசேடமாகத் தலையணியைக் குறிக்கும் ஆடலின் நோக்கம் தலைணியாலே விளக்கப்படுவதால் வெஸ்நடனம் எனப்பெயர் பெற்றது தீய சக்திகளை விரட்டவும் நோயிலிருந்து விடுபடவும் இத்தலையணியை அணிந்து ஆடவரார்கள் கண்டிய நடனத்திற்கான பொதுவான அம்சங்களை இந்நடனத்திலே காணலாம்.

நையாண்டி- ஆரம்பத்தில் சிங்கள மன்னர்களின் அரசசபை நடனமாக விளங்கியது. இதில் வேறுபட்ட அலங்காரங்கள் முக்கியப்படும் நையாண்டி எனும் சொற்பதம் தமிழ்ப்பதம் தமிழ்க்கிராமிய கலைகளில் நையாண்டி மேளம் பயன்படுத்த பட்டது அறிந்ததே.

உடக்கி- உடக்கி என்பது இந்நடனத்திpல் பயன்படுத்தப்படும் சிறு வாத்தியக்கருவி இது உடுக்கைப்போன்ற அமைப்பில் காணப்படும். இதில் சிறப்பு என்னவெள்றால் இவ்வாத்தியத்தை வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் நடனமாடுவார்கள். உடக்கி சிவனின் கைகளிலுள்ள உடுக்கைப்போன்று அமைந்துள்ளது.

பந்தேரு- இதன் முக்கியத்துவம் சிலம்பு ஆடபவரது கையில் சிலம்பு காணப்படும் சிலம்பினை சுழற்றிக்கொண்டும் கைகளில் மாறி மாறிப்பிடி;துக்கொண்டும் ஆடுவார்கள். இதில் கண்ணகி கோவலன் கதையின் தாக்கம் இருக்கம் அத்துடன் சிலம்பாட்டத்தின் தாக்கத்திலும் இந் நடனம் தோண்றியிருக்கலாம்.

வண்ணம்- பிற்கால கண்டிய நடன வள்ர்ச்சியில் ஓர் அங்கம் அதனால் சைவம் வைஷ்ண சமய தாக்கங்களை காணலாம். இது தமிழ் கலையுடன் ஒத்துப்போவது அறிந்ததே அதாவது ஹனுமான் வண்ணம் கணேச வண்ணம் மயூரவண்ணம் ஈஸ்வர வண்ணம் என்பன இந்து சமயக்கடவுள்களுடன் ஒத்துப்போவதாக காணப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நெருங்கிய தொடர்பு கலைவடிவங்களில் தெளிவாக அறியலாம். இக் கண்டிய வெஸ் நடனமானது தென்இந்திய கதகளி தலையணியின் சாயலும் கேரள மாந்திரீக முறைகளையும் ஞாபகப்படுத்தும்.

கண்டிய நடனமானது பெரஹரா ஊர்வலங்கள் அரச வைபவங்கள் கோயில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அதிகமாக நிகழ்த்தப்படுகின்றன. பெரஹரா நிகழ்வின் போது இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் விஸ்ணு, முருகன் போன்ற தெய்வங்களின் வழிபாடுகளும் நடைபெறுவதை அவதானிக்கலாம்

எனினும் கண்டிய நடனமானது ஒருவகை கூட்டுக் கலையாகவும் செம்மை பெற்ற சிங்கள நடனமாகவும் விளங்குகின்றது.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..