நடனமும் நானும்

சிறுவயதில் இருந்தே நடனம் என்றால் ஒரு வகையான ஆர்வமாகவே இருந்து விட்டது. 3ம் வகுப்பு படிக்கும் போது தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் மேடையேறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது வரை நடனம் என்றாலே என்வென்று தெரியாது அந்தப்பக்கமே போனதில்லை. முதல் மேடை முதல் அனுபவம் இரண்டு நாள் பழகி மூன்றாம் நாள் மேடையேறுவதென்பது சற்று சிரமமாக தான் இருக்கும். அன்று எனக்கு எப்படி தைரியம் வந்ததோ தெரியவில்லை இன்று அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால் நிச்சயம் மேடையேறவே மாட்டேன். ஆனால் அன்று எனக்கு அவ்வாறு இருக்கவில்லை பலரின் பாராட்டினை முதல் மேடை வாங்கி குவித்தது. ஆனால் என் நடனத்தினை பார்க்க என் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை அன்று என் அப்பா என்னிடம் கூறிய வார்த்தை “உந்த ஆட்டமெல்லாம் உதோட நிப்பாட்டனும் இனி ஆட்டம் கீட்டம் என்டெல்லாம் திரியாம படிக்கிற வேலைய பாருங்கோ” செய்யாதே என்டா எப்படி செய்யாமல் இருக்க முடியும் நடக்கிற காரியமா இதெல்லாம்.
கும்மி, கோலாட்டம், கரகம், காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம், செம்புநடனம், புரவியாட்டம், தெருக்கூத்து, நிழலாட்டம், உழத்தி நடனம்,  குறத்தி நடனம்,  பிச்சக்காரி நடனம்,  மீனவ நடனம், அரிவுவெட்டு நடனம், மந்தைவளர்ப்பு நடனம், உளக்கை நடனம்(தானியம் இடிக்கும் போது), தொழிலாளர் நடனம், வள்ளி, நடனமாதர், உமாதேவி, கோப்பெருந்தேவி, பரதம், ஒடிசி என பல வேடம் போட்டாச்சு. 63 மேடை ஏறியாச்சு இன்று வரை என் குடும்பத்தில் யாரும் வந்து பார்த்ததில்லை ஏக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அதை நினைத்து வருந்தியதில்லை.
அனைத்து சந்தர்ப்பத்திலும் மேடையேறும் போதும் தட்டிக்கொடுத்தது தோழியின் வார்த்தைகள் தான். இருப்பினும் என் டயறியோடு மட்டும் பேசி உறைந்து போன கதைகள் ஏராளம். இன்று அவள் ஒரு சங்கீத ஆசிரியர் எனக்குள்ளும் ஓர் பெருமிதம் தான். இதுவரை எத்தனையோ மேடைகள் பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் வாங்கி தந்தது சான்றிதழ்கள் மட்டுமே என்னிடம் உள்ளன எந்த பரிசினையும் நான் வீட்டிற்கு கொண்டு வந்ததில்லை முதல்முதலில் எனக்கு தெரிந்து நடனப்பரிசாக கிடைத்தது நிறைகுடம் சிறுபிள்ளை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாது அதனால் அருகில் இருந்த தோழியின் வீட்டில் வைத்து பல நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு கொண்டு சென்றேன். வீட்டில் யாரும் அது எனக்கு கிடைத்த பரிசு எனும் போது நம்பவில்லை நம்பவைக்க வார்த்தைகளும் என்னிடம் வலிமையாய் இருக்கவில்லை அனாலும் இன்று என்னிடம் தான் உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு கிடைத்த எந்த பரிசையும் வாங்குவதற்கு நான் மேடையேறியது இல்லை. சான்றிதழை தவிர எதையும் வீட்டிற்கு கொண்டு சென்றதில்லை இன்றும் என் நண்பியின் வீட்டில் என்னுடைய சிறு சம்பியன் அவளது கண்ணாடி அலுமாரியில் சிரித்து கொண்டு தான் இருக்கின்றது.
நான் இன்று ஒரு 35 மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்கின்ற போதும் தவிர்க்க முடியாத சூழ்நிலை எனக்குள்ளும் இருக்கம் ஒரு சிறு குற்ற உணர்வு என்னை இக்கலையை விட்டு விலகச் செய்கின்றது. என்னிடம் நடனம் பயின்ற மாணவனை என்னிடத்தில் குருவாக்கி விட்டு இன்றுடன் விலத்துகின்றேன்
என்னை வளர்த்து விட்ட பெற்றோருக்கும், ஆசிரியர்கள், தோழர்கள் என்னை தட்டிக்கொடுத்த அத்தனை மேடைகளுக்கும், பல பரிசுகள் பாராட்டுக்கள் கைதட்டுக்களை வாங்கி தந்த பாத்திரங்களுக்கும், என் பாதத்தின் வலிகளை பொறுத்துக்கொண்ட பூமாதேவிக்கும், என்னை நலமுடன் நடமாட விட்ட இறைவனும்கும் பல கோடி நண்றிகள்.
 

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..