ஆழகான கதையை ஆழமாக கொண்டு நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
காதலியாக அறிமுகமாகி பொலிஸாக திமிராண முகத்துடன் தோன்றி மனைவியாக அழகாய் நடித்திருக்கிறார் அமலாபால்.
அண்ணாவாக வரும் சத்தியராஜ், மகனாக வரும் விஜய், நண்பனாக வரும் சந்தானம் சுற்றியுள்ள பாத்திரங்கள் என கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் அவரவர் தம் திறமையோடு நடித்திருக்கின்றனர்.
கூட இருந்தே குழி பறிப்பதும். கூட இருந்தே குழி பறிப்பவன் புற முதுகில் தான் குத்துவான் என்பதையும் தலைவா படம் அழகாக காட்டியுள்ளது.
நடன ஆசிரியராக வரும் விஜய்க்கு இப்படத்தில் நடனம் போதாது என்றே செல்லலாம்.
குருவி, துப்பாக்கி, போக்கிரி என அதிரடியாக வந்த படங்களை பார்க்கும் போது தலைவாவில் சாந்தமாக தென்படுகின்றார் விஜய்.
இக் கதையை ஒரு சாதாரண ஹீரோவை வைத்து படம் எடுத்திருந்தாலோ அல்லது புதுமுக நாயகன் ஒருவனை அறிமுகப்படுத்தியிருந்தாலோ கதை வெற்றி பெற்றிருக்கும் தளபதிக்கான கதையில்லை தலைவா என்டு தான் சொல்ல வேண்டும்.