சிங்கம் படத்தின் 2ம் பாகம். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை கதை விறுவிறுப்பாகவே நகருகின்றது. ஏற்கனவே சிங்கம் படத்தில் பார்த்த பாத்திரங்கள் தான் இருந்தாலும் பிரகாஷ்ராஜ் இல்லாமல் போனது ஒருவகை வருத்தம் ரசிகர்களுக்ககு இருந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் நினைவுக்கட்டத்தில் வந்து போகிறார்.
புதிதாக இணைக்கப்பட்டுள் ஹன்சிகா, சந்தானம் அவரவர்களுக்கு குடுத்த பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்காக நடனத்திற்கென வந்து செல்லும் அஞ்சலி, பருவக்காதலியாக வரும் ஹன்சிகா, காத்திருக்கும் காதலியாக வரும் அனுஷ்கா என படத்தில் மூன்று நாயகிகளை இணைத்திருப்பதும் ஒரு வெற்றி தான்.
அழகான பெண்ணாக வந்து போகிறார் ஹன்சிகா. சூர்யாவை காதலிக்கும் காட்சியில் இப்படி ஒருவனை எந்தப்பெண்ணுக்கு தான் பிடிக்காமல் போகும் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். தனது பாடசாலை ஆசிரியர் துரைசிங்கம் மீது உள்ள காதலால் பாடசாலையை விட்டு நிற்பதும் துரைசிங்கம் பொலிஸாக மாறியதும் பாடசாலை போக தொடங்குவதும் (நீங்க எப்ப உங்க யூனிபோத்த போட்டீங்களோ அப்பவே நானும் ஸ்கூல் யூனிபோத்த போட்டுட்டன்) என்று சொல்வது சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் ஏதோ ஒரு அழகு தான். இறுதியில் மரணத்தில் முடித்திருப்பது ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்ற தான் சொல்ல முடிகின்றது.
அழகாக குடும்பப்பெண்ணாகவும், அடக்கமாகவும், நல்ல காதலியாகவும் வந்து போகிறார் அனுஷ்கா. அனுஷ்காவின் அறிமுகம் என்னமோ என்னை கவர்ந்துள்ளது. இவ்வளோ பெரிய வேலையை விட்டுட்டு நீங்க இங்க வந்து இருக்கீங்க எண்டா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் அதை என்கிட்ட சொல்லனும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லும் போதும், திருமணத்திற்கு இன்னும் மூன்று நாள் தான் இருக்கு நீங்க போய் வாங்க என்டு துரைசிங்கத்தை டாணியை பிடிக்க அனுப்பும் காட்சியிலும் அழகாக தென்படுகிறார் அனுஷ்கா.
சந்தானம் படித்தின் இறுதி வரை வந்திருக்கிறார். நல்லகாலம் பிறக்கப்போகுது என்பதற்கு பதிலாக சாயங்காலம் பிறக்கப்போகுது என குடுகுடுப்பை காரன் போல் கோசமிடும் காட்சியில் கலக்கியிருக்கிறார். பக்கி என்று சொல்வது சந்தானத்தின் செல்லப் பெயராக மாறியிருக்கின்றது சிங்கம் 2ல். குதிரைய காட்டில பாத்திருப்பாய் TV யில பாத்திருப்பாய் சுடிதார் போட்டு வீதியில பாத்திருக்கியா என்டு அனுஷ்காவை காதலிக்கும் கட்டத்தில் அசத்தியிருக்கிறார் சந்தானம்.
வில்லன்கள் தான் கதையை கொண்டு நகர்த்தியிருக்கிறார்கள் இதில் யார் வில்லன் என்டு தெரியாமலே கதையை நகர்த்தியிருப்பது சுவாரஸ்யம் தான்.
கொழும்பில் இருந்து ஒரு சிங்ளவனை வரவைப்போம் அவ சத்தம் இல்லாமல் போட்டு தள்ளிற்று போயிட்டே இருப்பான் என்று கூறும் வசனம் ரசிகர்களுக்கு முக்கியமாக யாழ்ப்பாண ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். சிலோனில் இருந்து ஒரு சிங்களவனை கொண்டுவந்து துரைசிங்கத்தை போட்டுத்தள்ள போடும் திட்டத்தில் ஒரு உணர்வு வரத்தான் செய்கின்றது அதைவிட சிங்களவனுக்கென படித்தில் ஒரு சிறு இடம் கொடுத்து நடிக்க வைத்திருந்தாலும் அந்த சிறு கட்டத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள் என்னமோ அதிகம் தான்.
யார் என்றே தெரியாமல் ஆபிரிக்கா பயங்கர வாதியை பிடித்து ஜெயிலில் அடைப்பது துரைசிங்கத்தின் பொலிஸ் வீரம். படம் விறுவிருப்பை ஏற்படுத்துகின்றது. வில்லனை தேடி வெளிநாடு போவதும் டானியை பிடித்து வருவதும் என நம்பமுடியா காட்சிகளுடன் கதை நகர்ந்தாலும் இப்படியெல்லாம் படம் எடுக்காவிட்டால் தமிழ் சினிமா நகராது என்றும் சொல்லலாம்.
சிங்கம் படத்தில் சென்ற விறுவிறுப்பை அதிகரிக்க சிங்கம் 2ல் காட்சிகள் கூட்டியிருந்தாலும் படம் என்னமோ ஒருவகை வெற்றி தான்.
அழகான ஒளிப்பதிவு வெளிநாட்டில் நடக்கும் அனைத்து பதிவுகளையும் ஒளிப்பதிவு அசத்தியிருக்கின்றது எடிட்டிங், பாடல்கள், கதாபாத்திரங்கள் பின்னணி என அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கின்றார்கள்.
மொத்தத்தில் சிங்கம் 2 காட்டுச்சிங்கம் ராஜா தான்.