கண்ட இடங்களில் ஆடுவது கலையில்லை

பாரம்பரியங்கள் கலைகள் என்பது ஒரு காலத்தில் உயிரை விட மேலாக மதிக்கப்பட்டு வந்தது ஆனால் இன்று அந்த மதிப்பெல்லாம் மண்ணுக்குள்ளே குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது என்றே சொல்ல வேண்டும். கலை என்பது ஒரு வகை ரத்தத்தோடு ஊறிப்போனது. கலையை பற்றி எவன் தவறாகவே அல்லது எதிராகவோ கதைத்தாலும் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் இறுதியில் வாக்கு வாதத்திலே முடியும். ஆனால் இன்று அந்த நிலை முற்றாக மாறிப்போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

தென்னிந்தியாதான் இக்கலைகளுக்கு தாய் என்று சொல்லலாம் ஆனால் இன்று இக் கலைகள் மங்கிப்பேவதற்கு காரணமும் தென்னிந்திய என்று தான் சொல்ல வேண்டும். தென்னிந்திய தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய திரையுலகில் இன்று கலைக்கான இடம் என்பது இல்லை என்றே சொல்லலாம். கண்ட இடங்களில் ஆடுவது கலையில்லை என்ற காலம் போய் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது எந்தவொரு சினிமா பாடலாக இருந்தாலும் அந்த பாடலில் ஏதோ ஒரு வகையான கலையை நினைவு படுத்துவதாக ஆடை அமைப்புக்கள் அமைந்திருக்கின்றன இல்லையென்றால் அந்த சினிமா பாடலோ அல்லது படமோ வெற்றி பெறாது என்பது அவர்களின் ஜதீகமாக மாறி வருகின்றது.

கலைக்கென இருக்கும் மரியாதை இன்று குறைந்து கொண்டு வருகின்றது என்பது யாரும் மறுக்க முடியாது.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..