அபாத்திரா லக்ஷ்ணம்

ஒரு நடனமாடும் பெண்ணிற்கு இருக்கக்கூடாத குறைகள் செயல்களை கொண்டிருந்தால் அதனை அபாத்திரா லக்ஷ்ணம் என்று சொல்வர். தக்கரூபமற்ற அமைப்பு, அங்க குறைபாடு, பண்பு தவறிய நடையுடை ஆகியவை பற்றிக்கூறுவதாகும்.

செங்கண் பிளந்தவளாய், பெரிய தலை, பெரிய கை கால், அரசனுக்கு பின் காட்டுதல் முகத்தில் பெருகும் வியர்வையை துடைத்தல், கண் பிசைத்தல், தடித்த மெய், தலை சொறிதல், சோம்பி உரு நெளிதல், நடுங்குதல், மிக இளைத்தல், பூ விழுந்த கண், கூந்தலின்மை உதட்டைக்கடித்தல், இரு குரலுடமை, உதட்டை நாக்கால் தடவுதல், தரையில் விழுந்த ஆபரணங்களைத்தேடுதல் ஆகிய சபைக் குற்றங்கள் உள்ள பெண் நடனமாடத் தகுதியற்றவளாகின்றாள்.

மேலும் கல்வியறிவு இல்லாமை, குறிப்பறிய முடியாமை, பொறுமையின்மை, ஒரு கண் உடமை, குருவின் சொல் மீறிய நடையுடை, வாத்தியம் கானம் நிருத்தம் இவற்றின விளக்கங்களை அறியாமை இவ்வகையான குணங்களுடன் கறுப்பு நிறம், செவிடு, கழுத்து நீளம், முகநீளம், மாறுகண், முளிக்கண்,
மாலைக்கண் ஆகிய கண் குறைபாடு உள்ள பெண்ணும் நடனமாடத் தகுதியற்றவள் ஆகிறாள். இவ்வகையான ஒரு பாத்திரம் கொண்டிருக்காத லக்ஷ்ணங்களே அபாத்திரா லக்ஷ்ணம் ஆகும்.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..