புதுக்குடியிருப்புக்கு தெற்கு புறமான அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பிரதான பயங்கரவாதி வாழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் வீடானது மேலிருந்து நோக்கும் போது சாதாரண இல்லம் போல காட்சியளிக்கும். அதே வேளை நிலத்துக்கு கீழாக (04) அடக்குகளை கொண்டதாக இருப்பதுடன் நான்காம் தளத்தில் இருந்து தப்பிச்செல்வதற்கு வசதியான சுரங்க வழியையும் கொண்டுள்ளது. இந்த நிலக்கீழ் இல்லத்தின் சுவர்கள் மாரிகாலத்தில் மழையினால் ஏற்படும் நீர்க்கசிவையும் தடுக்கவல்லதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புற பாதுகாப்புக்காக காவலரன்களுடன் கூடிய ஆறு சுற்று கம்பிவேலிகளையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் பிரவேசிக்க முயலுபவர்களை இனம் கண்டு கொள்வதற்காக பழக்கப்பட்ட நாய்கள் இந்த பாதுகாப்பு எல்லையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் கடுமையான தாக்குதலின் பின் கண்டறியப்பட்ட இந்த இல்லமானது பிரதான பயங்கரவாயத்துடன் மறைந்து வாழ்ந்த இடமாக குறிப்பிடப்படுகின்றது.