புரிந்துணர்வின்மையும் ஒருவகை பிரிவு தான்!!

பொதுவிலேயே எந்த வயதினரா இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் என்ற வகையில் ஏதோ ஒரு வகையீர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இருப்பினும் சில ஆண்களுக்கு பெண்களையும் பெண்களுக்கு ஆண்களையும் பிடிக்காமல் போவதும் இல்லாமல் இல்லை. இந்த நவீன உலகத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக பழகும் இந்த காலத்தில் கணவன் மனைவி என்றில்லாமல் வேலை பார்க்கும் இடம், சந்தை, கோவில் என பல இடங்களில் சந்திக்க நேரிடும் அவ்வாறு சந்திக்கும் பொழுது அவர்களுக்கான ஒருவகை பொதுவான புரிந்துணர்வு ஏற்படும்.


எது எவ்வாறு இருப்பினும் ஒவ்வாமை என்ற கருத்து அரை வீதம் உண்மையாகவே இருக்கின்றது. முகநூல் வாயிலாக இருக்கும் பல வகை நபர்களை அவர்களுக்கே தெரியாமல் ஒன்றினைத்து கேட்ட போது பலரிடம் இருந்து பல வகையான பதில்கள் வெளிவந்தன. சில பதில்கள் காமடியாக இருந்தாலும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது. என் கேள்வியில் ஆரம்பத்தில் ஒருவகை தடுமாற்றம் இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியான பெண்களை பிடிக்காது என்று ஆண்களிடமும், ஆண்களுக்கு பிடிக்காமல் போக வேண்டும் என்றால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்களிடமும் கேட்டேன். பின்னர் அவர்களுக்கு ஏற்றமாதிரி என் கேள்வி மாறியதே தவிர நோக்கம் மாறவில்லை பதில்கள் ஒருவகை சுவாரஸ்யம் தான்.

ஆண்களிடம் இருந்து வந்த பதில்களை முதலில் சொன்னால் பெண்களுக்கு கோவம் வரும் என்று தான் நான் நினைக்கிறேன் நானும் ஒரு பெண் தானே?
பஸங்களுக்கு பிடிக்காமல் போகனும் என்டால் பொண்ணுங்க எப்பிடி இருக்கனும்?

காரைக்காலம்மையார் மாதிரி இருந்தா பஸங்களுக்கு பிடிக்காதம்மா என்று ஆரம்பித்தது ஒரு ஆண் மகனின் பதில் ஆரம்பமே அசத்தல் தான்.

எனக்கு என் தங்கை மாதிரியான பொண்ணுங்கள பிடிக்காது ஏன்னா அவள் றொம்ப திமிர் பிடிச்ச பொண்ணு எது சொன்னாலும் கேக்கிறதில்லை யார் என்ன சொன்னாலும் திருப்பி கதை சொல்றது அப்பிடி வாய் காட்டி அடிக்க போனால் ஒரு கதை சொல்லுவாள் அதுக்கு மேல எதுவுமே கதைக்க தோணாது "டேய் பஸங்களால என்னடா முடியும் முடிஞ்சா அடிக்கிறது இல்லனா உடம்புக்கு அலையிறவங்க தானே ஏதாவது சாதிச்சு காட்டுங்க பாப்பம் கிழட்டு வயது வந்தாலும் சின்ன பொண்ணுங்க தேவைப்படும்" என்று எங்கையோ கதையை கொண்டு போய் நிப்பாட்டுவாள் வேணாம் சாமி என்றாகிடும் இருந்தாலும் யோசிப்பன் யாரோ ஒரு பெடியன் அவளை கட்ட தானே போறான் அவன் நிலை என்னாகுமோ என்டு.

எனக்கு என் அம்மா மாதிரியான பொண்ணுங்கள தான் பிடிக்கும் சுஜி மற்ற பொண்ணுங்கள பிடிக்காது என்று சாதாரணமாக பதில் சொன்னவர் மீது எனக்கு கோவம் வந்ததில் எந்த தவறும் இருக்காது என்டு நினைக்கிறன். எனக்கு என் அம்மா தான் தெய்வம் எல்லாருக்கும் அவங்க அவங்க அம்மா தானே தெய்வம் பிறகு எப்பிடி பொண்ணுங்கள பிடிக்காமல் போகும் அப்பிடி பாத்தால் ஒவ்வொரு பெண்ணும் ஏதொ ஒரு வகையில் தாய் தான்.

எனக்கு பிடிக்காது என்டு சொல்ல முடியாது சுஜி ஆனால் சில பெண்களிடம் இருக்கும் சில சின்ன பிள்ளைத்தனமான குணங்கள அருவருப்பை ஏற்படுத்தும் அதுக்கு நாம் என்ன செய்யிறது என்டு பேசாமல் போக வேண்டியது தான். அவரவர் குணம் அவர்களோடு இதில பெண்கள குற்றம் சொல்ல பஸங்க தப்பு பண்ணாதவங்களா இருக்கனும்.


எனக்கு சீன் போடுற பொண்ணுங்கள கண்ணில காட்டக்கூடாது நான் ஒருத்தியை காதலிக்கிறேன் அவளுக்கு என்னைக்கண்டால் சீன் போடுறத தவிர வேற வேலையில்லை. நான் என்ன கேட்டாலும் முதல்ல சீன் போட்டு தான் கேட்ட வேலை நடக்கும் சீன் போடும் போது கெஞ்சனும் இல்லாட்டி போச்சு ஆனாலும் எனக்கு அவள றொம்ப பிடிக்கும். அவங்கிட்ட எனக்கு கேட்க தோணின ஒரேயொரு கேள்வி "நீயெல்லாம் ஏன்டா இன்னும் உயிரோட இருக்கிறாய் என்டு தான்". எனக்கு ஏன் வம்ப என்டு கேள்விய மாத்தி கேட்டன் உங்க லவ்வர் நீங்க ஏதாவது கேட்டு உடனயே செய்து தந்தால் உங்களுக்கு ஓகேயா என்டு அதுக்கு அவங்க சொன்னாங்க சில நேரத்தில கேட்டால் உடனே உதவிய செய்திடுவாள் அதுக்கு காரணம் ஏதாவது தப்பு பண்ணியிருப்பாள் மன்னிப்பு கேக்க வேற வழியில்லாமல் செய்து தந்திடுவாள் என்டு. அவங்கட காதலி என்னோடு முகநூலில் இருக்காங்க பிரிச்சுடுவமோ என்டு தான் நினைக்க தோனிச்சு.

எனக்கு உன்ன மாதிரியான பொண்ணுங்கள பிடிக்கும் சுஜி எப்பவுமே ஒரு அமைதி எது தெரிஞ்சாலும் காட்டிக்காத தன்னடக்கம் "ஹா ஹா ஹா" சிரிச்சா போச்சு இப்பிடி சொன்னவருக்கு என்ன முகநூல்ல மட்டும் தான் தெரியும்

காதலிக்கிற என்டு சொல்லி ஏமாத்திற பொண்ணுங்கள எனக்கு கண்ணிலயும் காட்டக்கூடாதுங்க அவங்களுக்கெல்லாம் எப்பிடி தான் மனசு வருதோ தெரியாது என்று கூறினவரிடம் கேட்டேன் நீங்க இதுவரை எத்தின பொண்ணுங்களிட்ட ஏமாந்துட்டீங்க என்டு அதுக்கு அவர் இது என் நண்பனின் அனுபவமுங்க எங்களையெல்லாம் ஏமாத்த முடியுமா நாங்க யாரு என்று வீராப்பாக கூறினார் இவர் ஏமாந்த கதையை இதுக்கு மேல நான் கேட்டு ஏன் நான் கஸ்ரப்படனும்.

அதிகமா தேவையில்லாம கதைக்கிற பொண்ணுங்கள எப்பிடி சுஜி பிடிக்கும் இதில தன்னத்தானே புகழ்ந்து தள்ளுவாங்க கேட்டா வெறுப்பு தான் வரும்.

ஒருவர் சந்தையில போய் மரக்கறி வாங்க சொன்ன மாதிரி ஒரு பட்டியலே போட்டார் அது தனி சுவாரஸ்யம் தான்
அதிகமா சிரிக்கிற பொண்ணங்கள பிடிக்காது
பொய் சொல்ற பொண்ணுங்கள பிடிக்காது
மேக்கப் போடுற பொண்ணுங்கள பிடிக்காது
அதிகமா நகை பாவிக்கிற பொண்ணுங்கள பிடிக்காது
விதம் விதமா ஆடை அணியிற பொண்ணுங்கள பிடிக்காது
எல்லா பஸங்களோடயும் கதைக்கிற பொண்ணங்கள பிடிக்காது
நகம் வளக்கிற பொண்ணுங்கள பிடிக்காது
அமைதியா இருந்து நடிக்கிறது வீட்டில போய் பாத்தா பேய் கணக்கில கத்திறது
வெளியில சாப்பிடும் போது அடக்கமா பல்லுக்கூட தெரியாமல் சாப்பிடுறது வீட்டில போய் பாத்தா தெரியும் தண்டவாளம்
யாரா இருந்தாலும் சில பொண்ணுங்க உடன வாய் காட்டுவாங்க அப்பிடியான பொண்ணுங்கள பிடிக்காது
வீட்டில வேலை செய்ய தெரியாத பொண்ணுங்கள பிடிக்காது இப்பிடியே அடுக்கிக்கொண்டு போனார் அப்பிடி சொன்னவர எனக்கு றொம்ப பிடிச்சுது ஏன்னா இவருக்கு இந்த ஜென்மத்தில திருமணம் நடக்க போறதில்ல ஒரு பொண்ணு வாழ்க்கை தப்பிச்சு என்டு பெருமூச்சு விட்டன்.


இந்த கேள்விய பொண்ணுங்களிட்ட கேட்டால் அது படு சுவாரஸ்யம்
பஸங்களுக்கு பிடிக்காமல் போகனும் என்டா பொண்ணுங்க எப்பிடி இருக்கனும்? தனி தனியா சொல்ல முடியாது ஏன்னா பல பெண்களிட்ட இருந்து ஒரே மாதிரி தான் பதிலே வந்திச்சு

அதுவா சுஜி எப்ப பாத்தாலும் கதைச்சுக்கொண்டிருந்தால் போதும் கறிச்சந்தை என்டு சொல்லிற்று போடுவாங்க, சம்பந்தமில்லாமல் கதை சொல்லிக்கொண்டே இருந்தா பிடிக்காது, அவங்களுக்கு பிடிக்காத பஸங்க கூட அதிகமா சிரிச்சு சிரிச்சு கதைச்சா எப்பிடி பிக்கும், சீன் போட்டு பார் யாருக்குமே பிடிக்காது, எதாவது கதை கேட்டால் வாய்க்குள்ள சிரிச்சு சமாளிச்சால் போதும், சந்தேகம் வாற மாதிரி ஏதாவது ஒரு காரணம் செய்தா போதும் நம்மளுக்கு எவள் எதிரியோ அங்க போய் ஒட்டிக்கொண்டிடுவாங்க, அவங்க ஏதாவது செய்ய சொன்னா செய்யாமல் இரு, வேற பஸங்கள பற்றி எப்பவுமே பேசிக்கொண்டிருந்தா பிடிக்காம போகும் மச்சி, வேற பஸங்களோட குளோசா பழகனும் ஆனா எனக்கு சொல்ல தெரியல, அவங்கள அலட்சியம் செய்து பார் இத விட பிடிக்காம போக ஒரு காரணமும் தேவையில்லை, அவங்களுக்கு பிடிச்ச எந்த விசயமும் பிடிக்காத என்டு சொல்லு, அவங்க அம்மாவ பற்றி அல்லது அக்கா இருந்தா அக்காவ பற்றி குறை சொல்லிக்கொண்டே இரு கட்டாயம் பிடிக்காம போகும், காதலிக்கிறியா என்டு கேக்கும் வரைக்கும் பழகிற்று அண்ணா என்டு சொல்லு, எது சொன்னாலும் கேக்கிற மாதிரி கேட்டுட்டு கடசியில கேவலமான ஒரு சிரிப்பு சிரி, அவனுக்கு மட்டுமே ரகசியம் தெரிஞ்ச மாதிரி கதைச்சிட்டு பப்ளிக்ல வைச்சு எல்லாரிட்டயும் சொல்லிடு போதும், அவன் செல்ற எல்லா கதையையும் எல்லாரிட்டயும் சொல்லிற்று திரி இத விட ஒரு காரணம் தேவையே இல்லை, அவன் என்ன செய்தாலும் தப்பே சொல்லாத நேரம் வரும் போது எல்லா விசயத்தையும் போட்டு உடைச்சுடு ஏதாவது பொருள் வேணும் என்டு தொடந்து கேட்டுக்கொண்டே இரு.

பொண்ணுங்க விபரமா தான் இருக்காங்க இந்த பதில் எல்லாம் நான் லவ் பன்றன் அவனுக்கு எப்பிடி என்ன பிடிக்காம போறது என்டு கேட்ட கேள்விக்கு பதில் மாதிரி இருந்திச்சு. இருந்தாலும் எனக்கு தேவை அவங்கட மனசில என்ன இருக்கு என்டு தானே பறவாயில்லை.

அதிலயும் என் தோழி ஒருத்தி அந்த நபர் யார் என்டு கேட்டுக்கொண்டே இருந்தாள் நானும் இல்லை இல்லை என்டு சொல்லி பாத்தன் கேக்கல தனக்கு தெரியும் என்டு வேற ஒரு பீலா. (குரங்குக்கு வாழ்க்கை பட்டா சமாளிச்சு தானே ஆகனும்) சரி விடு மச்சி.
என்ன தான் நம்ம பொண்ணுங்கள பஸங்களுக்கும் பஸங்கள பொண்ணுங்களுக்கும் பிடிக்காம போனாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தற்காக சமாளிச்சுட்டு தான் போறாங்க இல்லனா உலக வேகத்துக்கு ஓட முடியாது தானே.





 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..