இந்நிகழ்வில்
உதவிப்பதிவாளர் நாயகம் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம்,
லீட்ஸ் நிறுவனத்தின் யாழ், கிளிநெச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு பொறுப்பு வகிக்கும் மாவட்ட அதிகாரி திரு.குகதாஸ் ஜனேந்திரன், மற்றும் சிறுவர் பாதுகாப்பு செயற்திட்ட இணைப்பாளர் ஜே.பி.ஏ.றஞ்சித்குமார் ,
மாவட்ட செயலாளர் அருமை நாயகம்,
சமுத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.ரகுநாதன்,
யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு வழக்குகளில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி திரு.கனகரத்தினம் சுகாஸ் மற்றும் உள-சமூக இணைப்பாளர் திரு.கு.கௌதமன் ,
வைத்தியர் சிவஜோகன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களைப்பாதிக்கும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் சுதந்திரமாகப் பேசுவதற்கு உரித்துடையவர்கள் என்கின்ற சிறுவர் சமவாயத்தின் உறுப்புரை 12ற்கு அமைவாக பிள்ளைகளின் பங்குபற்றும் உரிமையை வழங்கும் ஒரு நிகழ்வாகும். அத்துடன் இந்நிகழ்வின் போது அவர்களைப்பறிறி அவர்கள் என்ன சிந்திக்கின்றனர் என்பதை அவர்களின் விவாதங்கள் மூலமே அறிந்து கொள்ள முடிந்தது.