விதவைகளின் கண்ணீர்




துன்பம் இன்பம் என்பது அனைவரது வாழ்விலும் வருவது தான் ஆனால் சில துன்பங்களோ கடும் சித்திர வதைகள் தான். பெண்களுக்கோ கடும் சித்திர வதைகள் நடக்கும் அதிலும் கணவனை இழந்து தவிக்கும் பெண்களின் சித்திர வதைகளோ சொல்லிலடங்காதது.

பெண்களுக்கென சமுதாயத்தில் ஒருவரை நியமிக்க எப்போதும் சமுதாயம் தவறுவதில்லை இதற்கு கல்யாணம் என்ற பெயரில் பெரிய ஆடம்பரமே நடக்கும் என்ன தான் ஒரு பெண் தற்துணிவு கொண்டவளாக இருந்தாலும் இச் சமுதாயத்தில் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் நிலைநாட்டிக்கொள்ளவும் தன்னை அறிமுகப்படுத்தவும் நிறையவே போராட வேண்டி உள்ளது.
கணவனை இழந்த, விவாகரத்து செய்த பெண்களின் மீது எம் சமுதாயம் கொண்டுள்ள பார்வை வெளி உலகத்துக்கு அப்பாற்பட்டது வர்ணிக்கவே முடியாதது. மன ரீதியான பாதிப்பு என்றால் கூட தவாறாக தான் போய்விடும் இக்காலத்தில். இவ்வாறான பெண்களுக்கென ஒரு கட்டுப்பாட்டு விதியே இருக்கு.

யாருடனும் கதைக்கக்கூடாது, தலையில் மொட்டாக்கு போட வேண்டும், எதற்கும் முன்னுக்கு வரக்கூடாது, வெளியில் யாராவது போகும் போது முன்னுக்கு வரக்கூடாது, வண்ண ஆடைகள் அணியக்கூடாது கொஞசம் சிவப்பாக இருந்தால் கூட கட்டாதே, பொட்டு வைக்கக்கூடாது, நகைகள் போடக்கூடாது என அடுக்கிக் கொண்டே போகலாம்.  அவளும் பெண் தானே அவளுக்கு மட்டும் சுதந்திரம் கூடாது வீட்டோடு இருக்கட்டும் என்று கூறுபவர்களை எம்மால் என்ன தான் செய்ய முடியும்.

அவளுக்கு இன்றைய கால ஓட்டத்தின் தேவைக்கு ஏற்ப தேவைகள் பல இருக்கும். இப்படியான பெண்களுக்கு தான் முக்கியமாக மன ரீதியாக ஆறுதல் வேண்டும். ஆனால் நம்மில் யாரும் இதனை புரிந்து கொள்வதில்லை எம்மாலும் முடியுமானால் வார்த்தைகளை வீசி காயப்படுத்தவே தயாராகி விடுகிறோம்.

வேறு ஆண்களுடன் கதைத்து விட்டால் நடத்தை சரியில்லை இது எம் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு குணம் தான். தாங்கள் எப்படியோ தெரியாது ஆனால் பிறரை சொல்வதென்றால் தனித்துணிவு வந்து விடும். இன்றைய காலகட்டத்தில் யுத்தம் காரணமாகவோ விபத்து காரணமாகவோ கணவனை இழந்த பெண்கள் ஏராளம்.

 அவ்வாறான பெண் ஒருவரை நான் அண்மையில் சந்தித்தேன் வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்தில் இப்போது வசிக்கிறார். பெயர் கூற விரும்பாத அவர் நான் கதைத்து முடித்த பிறகு என்னை உன் சகோதரியாக நினைத்து கொள் எனது பெயர் இது தான் ஆனால் வெளியில் கூறாதே எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளாவது நாளை இச்சமுதாயத்தில் நடமாட வேண்டும் என்றாள் அச் சகோதரி.

''எனக்கு திருமணம் கட்டாயத்தின் உச்சத்தில் தான் நடந்தது திருமணமாகிய பின் அவரைக்காணவில்லை  காலையில் நடந்த கல்யாணக்கோலம் மாலையில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. அது வரை என் மகனின் உயிரை காப்பாற்று என்று என் காலில் விழாத குறையாக கத்திய அவரின் அம்மா என்ர பிள்ளை உன்ன கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தா எங்கயோ உயிரோடயாவது இருந்திருப்பான் என்று திட்ட தொடங்கினா. மகனை இழந்த ஆதங்கம் புரியுதுங்க நான் என்ன செய்தன் எதுக்கு அழுறது என்டே தெரியாமல் அழுதனுங்க ஆறதல் சொல்ல கூட யாரும் முன் வரல. இது கூட பறவாயில்லை ரெண்டு நாளும் போகல என் அம்மா எனக்கு ஆபத்து என்டு சொல்லி ஒருத்தன கட்டி வைச்சா அவனுக்கு என்ன நடந்தது என்டே தெரியாம பல மாதமா என் வாழ்க்கை ஓடிச்சு பிறகு ஒரு பத்து பதினைஞ்சு செத்த உடலுகள் கிடக்கு என்டு எல்லாரும் ஓடிப்போய் பர்தாங்கள் அதில எனக்கு ரென்டாவதா தாழி கட்டினவரும் என்டு அம்மா வந்து சொல்லித்தான் தெரிஞ்சது. எல்லாரும் ஓடிப்போய் பாத்தாங்கள் என்க்கு போக மனமில்லை நான் போகல.
                                                       இதோட நாங்களும் இடம்பேர வெளிக்கிட்டம் போற போக்கில ஓட்டம் என்டா ஒரு சந்தர்பத்தில் காலை மாலை என்டு இல்லாம் ஓடினம் அதில எ கூட வந்த எல்லாரையும் விட்டுட்டு நா ஓரு பக்கத்தால் ஓடி வந்தன் வார வழியில தாயை இழந்து பக்கத்தில கிடந்து ஒரு கைக்குழந்தை கத்திக்கொண்டு இருந்திச்சு யாருமே தூக்கவில்லை நானே தப்புவனோ தெரியாது தூக்கி என்ன செய்யிறது என்டு எல்லாரும் போனாங்க எனக்கு மனங்கேக்கல மனதுக்க நா அழுதிட்டு தானே இருந்தேன் அதனாலையும் என் உயிர் போனா என்ன அங்கால வேற யாராவது தூக்குவாங்கள் எண்ட நம்பிக்கையும் இருந்திச்சு அந்த குழந்தைய தூக்கிற்று ஓடி வந்துட்டன். பல மாதமா என் உறவுகள் எல்லாரும் இருக்கிறாங்களோ என்டு கூட தெரியாம இருந்தன் தேட வெளியில போக முடியாது போனா பயம். பிறகு ஏதோ சந்தர்பத்தில  சந்தித்தன். ஆனா யாரும் நம்பலங்க இது எனக்கு பிறந்த குழந்தை என்டே கூற தொடங்கிற்றாங்க யோசிக்க தெரியாதவங்க ஒரு குழந்தையை சுமக்க பத்து மாதம் தேவை நான் என்ன கடவுளாங்க? நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டன் சொல்ல வெக்கமா இருக்கு உறவுகள் கூட என்ன நம்பலங்க முதலில பொடி வைச்சு தான் கதைச்சாங்க பிறகு நம்பினாங்க ஆனா எனக்கு பிடிக்கல. அங்க இருக்க முடியாது என்டு இங்கால வந்தவங்களோட சேந்து நானும் வந்துட்டன்.
                                      
வந்த புதுசில எனக்கு இங்க ஒரு இடமும் தெரியாது இப்ப தான் முதல் தடவையா யாழ்ப்பாணம் வந்திருக்கன. ஆனா வன்னியில இருந்து வந்த என்டதாலயோ தெரியாது இங்கத்த மக்களிட்ட நிறையவே மரியாதையும் உதவியும் கிடைச்சுது. நிறையவே ஆதரவு தந்தாங்க யாரையும் என்னால மறக்க முடியாது. முதல்ல சமைச்சு குடுத்தன் இப்ப சின்ன பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக்குடுக்கிறனான்.

இவள் என் பொண்ணு தான் நான் பெறா விட்டாலும் அம்மா என்று அழைக்கும் ஒரு சந்தோசம் சொன்னா புரியாது நீயும் ஒரு பொண்ணு தானே அனுபவிக்கும் போது எங்கிருந்தாலும் என்னை நினைத்துப்பார் அப்ப புரியும். இப்போது தான் இவளுக்கு மூன்று வயது இவளை எப்படியாவது வளர்த்து பெரியவளாக்க வேண்டும் அங்கிருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தான் இங்கு வந்து வசிக்கிறேன் என்று தன் ஆதங்கத்துடன் கூறி முடித்தாள் அச்சகோதரி நான் விழையாட்டாக கேட்ட கேள்விக்கு. 

நீங்க நல்லா படிச்சிருக்கீங்க பிறகு ஏன் இவ்வளவு கஷ்ரப்படுறீங்க?

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..