மனிதர்களிடம் உள்ள குணங்களோ பல தரப்பட்டது. ஒருவரது குணம் எப்படி என்று யாராலும் அடையாளப்படுத்த முடிவதில்லை மனம் ஒரு குரங்கு அப்பப்போ தாவும் இதில் இருந்து தப்ப யாராலும் முடிவதில்லை இன்றைய உலகில் எவ்வளவு தான் உயர் பதவியில் வகித்தாலும் முக்கியமாக தாழ்வு மனப் பாங்கில் சிக்குண்டு மீழ முடியாமல் தவித்துக் கொண்டு தான் உள்ளார்கள்.இதில் பல வகை உண்டு சிறு வயதில் இருந்தே சிலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அதாவது அவர்களை பார்த்த சில செயல்கள் அல்லது அவர்கள் முன்னோ தொலைவிலோ நடந்ததாக கேழ்விப்படும் சம்பவங்கள் முன் ஜென்மத்தில் பாதித்த பாதிப்புக்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு நடந்த சம்பவங்கள் என பல தரப்பட்ட விடயங்களில் உணர்வுகள் பாதிக்கப்பட்டமையை குறிப்பிடலாம்.
ஒரு குழந்தையை வளர்க்கும் போது பெற்றோரோ அல்லது சுற்றத்தாரோ அறிவதில்லை இவ் விடயத்தால் இக்குழந்தை பாதிக்கப்படும் என்று அத்துடன் ஒரு குழந்தையை அடக்கி ஒடுக்கித் தவறான முறையில் வளர்க்கும் போது வளர்ந்து பெரியவனாகியதும் செயற்பாடுகளில் பல்வேறு பட்ட மாற்றங்களை நாம் அவதானிக்க்ககூடியதாக உள்ளது. இன்று நாம் இவ்விடயங்களை முழமையாக அறிந்து நோக்குவொமேயானால் இலகுவாக அறிய முடியும் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை.
அதாவது பிறரோடு கதைப்பதில் தயக்கம் காட்டுதல், எதிலும் முன் வராமை ஒதுங்கி இருத்தல், தன் உணர்வுகளை மறைத்தல், அழுதல், தன்னைப்பற்றி குறைவாக எண்ணிக்கொள்ளல், எதையும் ஒரு வித சலிப்புடன் எதிர்கொள்ளல், எந்தச்செயலை செய்யும் போதும் ஒருவித படபடப்புடன் செயற்படல் போன்ற அறிகுறிகளை நாம் காண முடியும்.
இவற்றுக்கு முக்கிய காரணம் மனதுக்குள் பதுங்கி பயந்து கிடக்கும் பயங்களே நான் முன் சென்றால் தவறு நடக்குமோ அவர்கள் தவறாக எண்ணுவார்களோ நான் பார்க்கும் போது தவறு ஏற்படுமோ நம்முடன் சேர்ந்திருப்பவர்கள் நமக்கு துறோகம் செய்து விடுவார்களோ நாம் தொடங்கும் இந்த வேலை தோல்வியில் முடியுமோ என சிந்தித்து செய்யாமல் விடுதல் நாம் அழகாக இல்லையோ என தம் விதியின் மேல் பழியை போட்டு தமக்குள்ளே ஒருவித தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறானவரகளை அடையாளங்கண்டு தீர்வு வளங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் தான் வழங்க வேண்டும். யாரும் வெற்றி பெறும் சம்பவங்களையும் சந்தோசமான நிகழ்வுகளையும் நினைத்துப்பார்ப்பதில்லை தோல்வி பெற்ற சம்பவங்களையும் மறக்க நினைக்கும் விடயங்களையும் தான் நினைத்துப் பார்க்கிறார்கள். சிறு தவறு ஏற்பட்டு விட்டாலும் தம் தன்மானம் பாதிக்கப்படுவதாகவே எண்ணிக்கொண்டு தாழ்வு மனப்பான’மையை தம் வசப்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கைளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குறைபாடுகளால் தமக்குள்ளே தம்மை தாழ்வுபடுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறானவர்களிடம் ஏரானமான திறமைகள் இருக்கும் ஆனால் இவர்களோ இந்த உலகிலே வாழ முடியாது என்று விடுபடவோ விலகி இருக்கவோ விரும்புகின்றனர்.
இந்த உலகில் யாவருக்கும் குறைபாடுகள் இருப்பது இயல்பு. இவ்வாறானவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் உங்கள் அனைவரிடமும் ஒவ்வொரு தனித்திறமைகள் ஒழிந்திருக்கின்றன அதனை வெளியில் கொண்டுவர உங்களால் மட்டும் தான் முடியும் இதற்கான முயற்சி நீங்கள் எடுத்தால் தான் பிறர் உதவுவார்கள். உங்களைப்போன்ற பலருக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களுக்கு ஆறதல் சொல்லும் ஒருவராக நீங்கள் இருக்க்கூடாது.

Time in Colombo .jpg)