எல்லா வேலையும் செய்திட்டன் பிச்சை ஒன்னு தான் இன்னும் எடுக்கலை இதையும் செய்ய வைச்சிடுவாங்க 5 பிள்ளையள பெத்தன் ஒரு பலனும் இல்லை என கண்ணீர் மட்டும் தான் வரவில்லை கூறி முடித்தாள் இச்சேரியில் வசிக்கும் கறுப்பையா அல்லிராணி வயது 45.
19வயதில நான் திருமணம் செய்தன் 2007ம் ஆண்டு 35 வயசில் என் கணவனை இழந்தேன் இங்கு வசிக்கும் முக்காவாசி பெண்களுக்கு புருஸன் இல்லை குடி தானுங்க காரணம். நான் 2000ம் ஆண்டு நகரசபையில கூட்டுற வேலைக்கு சேர்ந்தனான் எவ்வளவு கஸரப்பட்டு நா உழைச்சு வந்து குடுத்தாலும் என்ர பிள்ளையளுக்கு படிக்க பஞ்சி மூத்தவன் தனக்கு பிடிச்ச புள்ளைய பாத்து கல்யாணம் செய்திற்று போனான். இப்ப கடன் அவன்ர கடனையும் நான் தான் அடைச்சன் மிச்ச பிள்ளைகளாவது படிக்கும் எண்டா அதுகளும் படிக்கல இவ்வாறு தாய் கூறும் போது அருகில் நின்ற மகள் சிந்துஜாவிடம் ஏன் பாடசாலை போவதில்லை படிக்க விருப்பமில்லையா அல்லது ஏதாவது பிரச்சனையா என கேட்டதற்கு பெரிய பெண் ஆனதும் நின்டவள்தான் இப்போதும் போக மாட்டன் என்று அடம்பிடிக்கிறாள் ரிவில பாட்டு பாக்கிறதும் தொடர் நாடகங்கள் பாக்கிறதும் இது தான் வேலை படங்களில பாக்கிற மாதிரி உடுப்பு உடுக்கனும் ஆடனும் பாடனும் மேக்கப் போடனும் இது மட்டும் தான் தெரியும் என கூறி முடித்தாள் தாய்.
இப்ப தானுங்க ஏதோ கொலைவெறி சுடிதாராம் வாங்கித்தா என்டு அடம்பிடிச்சு 8000ரூபாக்கு அதுக்கேற்ற காப்பு தோடு செருப்பு வாங்கி குடுத்தன். ஆனா வெளியில யாரும் கேட்டா அம்மா படிக்க விடல என்டு சொல்லிடுவாங்க ஆமாங்க நா படிச்சு டொக்டரா வந்திட்டன் இவங்க படிச்சு என்ன செய்யப்போறாங்க என்டு மறிச்சுட்டன் என தன் ஆதங்கத்தை கூறி முடித்தாள் அந்தத்தாய்.
அச்சேரிக்கு சென்றவுடன் குப்பைகள் தேங்கும் இடம் இதுவாக இருக்ககுமோ என எண்ணத்தோன்றியது. நாம் சென்றது மழைக்காலம் என்பதால் குடிசைக்குள் புகுந்த நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தனர். 150 குடும்பங்கள் குடியிருக்கும் அச்சேரியில் பாதுகாப்பு என்பது மிகவும் பலவீனமாகவே இருந்தது. நகரசபையில் தொழில் புரிபவர்களே அதிகமாக குடியிருக்கும் அச்சேரியில் வசிக்கும் டானியல் மற்றும் மனைவி கௌரியிடம் கேட்டபோது.
150 குடும்பங்கள் வசிக்கும் இச்சேரியில் பெரும் பிரச்சனையாக அமைவது மலசலகூடம் தான் நீங்கள் பாத்தீங்க எண்டா உங்களுக்கே தெரியும் மொத்தமாக 6 மலசலகூடங்கள் தான் உள்ளன. தொற்று நோய் பிரச்சனை என்று பெரிதாக எதுவும் இது வரை வந்ததில்லை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மானகரசபையினர் வந்து பாப்பாங்க ஏதாவது பிரச்சனை என்று அறிவித்தால் மந்திரி வந்து பார்வையிடுவார். நகரசபையில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் இங்கு குடியிருக்க முடியும். 55வயது வரை வேலை செய்யலாம் மாத வருமானம் 14500 தான். வேலையில் இருந்த ஓய்வு பெறும் போது சிறு தொகை பணம் தருவார்கள் இதனை வைத்து காணி வாங்கவேண்டும். இப்போது இருக்கும் காணி அரசாங்கத்தால் தரப்பட்டது காணி மட்டுமே தருவார்கள் தந்த காணிக்கும் எம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு வீடுகள் அமைப்போம். என்று கூறினார்.