வன்னி மண்ணில் கேப்பாபிலவு மக்களுடன் நான்கு நாட்கள்.......



ஒரு பிரச்சனை என்றவுடன் தலைதூக்கும் ஊடகங்கள் பின் அதைப்பற்றிக்கதைப்பதே இல்லை இதிலும் முக்கியமாக புலம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறுகின்றனர் எனும் போது தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவும் மக்கள் மத்தியில் தாமும் இருக்கிறோம் என காட்டவுமே இன்றைய ஊடகங்கள் நடமாடுகின்றன. இவ்வாறே நான் அண்iமயில் சந்தித்த வன்னி கோப்பாபிலவு மக்களின் நிலையும்.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மூன்று நாள் கருத்தமர்வு நிகழ்வு டிசம்பர்மாதம் 19. 20, 21ம் திகதிகளில நடைபெற்றது அத்துடன் அம்மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன இதன்போதே அம்மக்களுடன் கதைக்கும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. 

கடந்த மாதங்களில் ஊடகங்களின் வாயிலாக எல்லோர் மத்தியிலும் இக் கேப்பாபிலவு கிராமம் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்த மக்கள் இக்கேப்பாபிலவு பகுதியில் விரைவாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இக்கிராமத்திற்கு சென்ற பின்னர் தங்களால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையான வீடுகளைத் தாமே அமைத்துக் கொண்டதாக இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

மொத்தமாக 175 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.


இங்கு வசிக்கின்ற மக்களில் கணிசமானவர்கள் யார் அங்கு சென்றாலும் "எங்களுக்கு என்ன தருவார்கள்? என்ன கிடைக்கும்? என்ற ஒரு வித எதிபார்ப்பு மனநிலையுடன் காணப்படுகின்றனர். இங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது அனைத்துக் குடும்பங்களுக்கும் பொதுவாக 05 கிறுகள் மற்றும் 10 குழாய்க்கிணறுகளும் குறைந்தளவிலான மலசல கூட வசதிகளுமே காணப்படுகின்றது. அத்துடன் இம் மக்களின் முக்கிய தொழிலாக மீன்பிடித் தொழிலே காணப்படுகின்றது மீன்பிடிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும் இங்குள்ள மாணவர்கள் 2km நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கேப்பாபிலவுஇளைஞர் சங்கத்தின் அங்கத்தவர் சுகிர்தன் கூறினார்.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..