தொழில் என்பது பரம்பரை பரம்பரையாக இருந்த வருகின்றது அதிலும் சில தொழிலை அவரவர் தமது குலத் தெய்வத்தைப் போல் புனிதமாக செய்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் தமது தொழிலை தொடர்வதற்கு அத் தொழில் சம்பந்தப்பட்டு மட்டுமல்லாமல் வேறு பிரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டி வருகின்றது. அவ்வாறே நான் அண்மையில் சந்தித்த கொழும்பு ஆமர்வீதியில் வசிக்கும் சலவைத்தொழில் செய்யும் தொழிலாளர்கள்.
“நான் கூலித் தொழில் தான் செய்கிறேன். ஆடையொன்றுக்கு 30 ரூபா பெற்றுக்கொள்கிறோம். ஒருவர் 10 ஆடை தந்தால் 300 ரூபா வருமானம் வரும் இப்போதுள்ள செலவுகளைப் பார்க்கும்போது 300 ரூபா உணவுத் தேவைக்கே போதுமாக இல்லை. இதன விழைவாக மக்கள் எமக்கு சலவை செய்வதற்கு ஆடை தருவது குறைவு.
வசதி படைத்த பலர் இலத்திரனியல் சலவை இயந்திரங்களை வாங்கியிருக்கிறார்கள். அதனால் எம்மை நாட வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
நான் அறிந்த வரையில் இது எனது பரம்பரைத் தொழில் எனது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே செய்து வருகின்றோம காலப்போக்கில் நாம் அறிந்த இந்தத் தொழிலையும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. வருமானம் குறைவாக இருப்பதும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது”
.
இங்கு துணிகளை உலர்த்துவதற்கென பெரிய இடம் இருக்கிறது. அதன் நடுவே துணி துவைப்பதற்கான நீர்த்தாங்கிகளும் கற்களும் இருக்கின்றன.
ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமான துணிகளை துவைக்கிறார். துணிகளை உலரவைக்கும் கயிறுகளில் அவரவர்க்கென தனித்தனியான அலகுகளாகப் பிரித்திருக்கிருக்கின்றோம் அதன் பிரகாரமே துணிகளைத் துவைப்போம்
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆடை சேகரித்துப் பின் தோய்த்து உலர்த்தி மீண்டும் குறிப்பிட்ட வீடுளில் ஆடைகளைக் கொண்டு சேர்க்கவேண்டும் இங்கு யாரும் முதலாளி என்று இல்லை இன்று நான் வேலை செய்கின்றேன என்றால் ஏனையோர் என்னிடம் வேலை செய்வார்கள் நாளை அவர்கள் செய்கிறார்கள் என்றால் நான் சென்று செய்வேன் ஒருவருக்கு ஒருவர் உதவ வில்லை என்றால் இத்தொழில் செய்வது மிகவும் கஸ்ரம் என எம்மைக் கண்டவடன் வேடிக்கை பார்க்கவந்த மாரியப்பன் கூறினார்
கடுமையான உழைப்பை நம்பி மட்டுமே வாழும் இவர்கள் தாம் நிம்மதியாக வாழக்கூடிய அளவுக்கு இவர்களது வீடு இல்லை மழைக்காலம் என்றால் இவர்களது சிரமத்தை சொல்லில் அடக்க முடியாது துணிகளை உலர்த்தவும் முடியாமல் நிம்மதியான உறக்கமும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 350 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில் சுமார் 70 வீடுகள் 16 அடி நீளமும் 8 அடி அகலம் கொண்டவையாகவும் 8 அடி நீளமும் 8 அடி அகலம் கொண்டவையாகவும் கட்டுப்பட்டுள்ளன இவற்றை வீடு என்று சொல்வதை விட அறைகள் என்றே சொல்லலாம் வறுமைக்கு மத்தியிலும் கடுமையாக உழைக்கும் இவர்கள் நாளாந்த வாழ்க்கைச் சுமையோடு போராட்டம் நடத்துகிறார்கள் என்றே கூறலாம்