மிரளும் மாணவர்களும் யாழ் கட்டளைத் தளபதியும்!!


மாவீரர் தினத்திற்கு மெழுகுதிரி கொழுத்தியதில் இருந்து ஆரம்பமான பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடு இல்லை. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யும் வரை பல்கலைக்கழகம் வழமைக்கு திரும்பாது என்ற நோக்கோடு பல்கலை மாணவரகள் இருக்க கைது செய்யப்பட்ட மாணவ்ர்களை விடுதலை செய்தால் தான் யாழ்.பல்கலைக்கழகம் மீள் இயங்கும் என்றால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை என்று யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹித்த ஹத்துரு சிங்க நேற்றுத் தெரிவித்துள்ளமையானது பல்கலைக்கழக மாணவர்களை அதிர வைத்துள்ளது.

பலாலி படைத் தலைமையகத்தினுள், பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத்தலைவர்கள். மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள். கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து கலந்தரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது யாழ்.பல்கலைக்கழக சம்பவத்தை ஜே.வி.பியுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர் இது தவறு ஜே.வி.பி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டம் கடந்த 30 வருட காலமாக யாழ்ப்பாண மக்களும் இலங்கை மக்கள் அனைவரும் கஸ்ரப்பட்டனர். 1981ம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது காணப்பட்ட நிலமைக்கும் தற்போதுள்ள நிலமைக்கும் வேறுபாடுள்ளது. இந்தப் போரினால் பெற்றது என்ன?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மாதிரியான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் திட்டவட்டமாகக் கூறியள்ளார். அமைதியைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
கார்த்திகை தீபத்திருநாள் சமய நிகழ்வுகளை இராணுவம் எங்குமே குழப்பவுமில்லை அதில் தலையிடவுமில்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் பிரபாகரன் படம் கட்டப்பட்டு ஒர் குழப்பமான நிலமை காணப்பட்டது. அதனால் தான் பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் சென்றனர் அவர்கள் உதவிக்கு அழைத்ததால் ராணுவம் சென்றது.
பல்கலைக்கழகத்துக்குள் சென்றது சிங்கள ராணுவம் அல்ல இலங்கை இராணுவமே இராணுவத்தில் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களும் இருந்தனர் பலிகளின் மிரட்டல்களினாலேயே அவர்கள் இராணுவத்தை விட்டு விலகினர். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டோம் அமிர்தலிங்கம், நவரத்தினம் போன்றோர் அன்று தூண்டி விட்டதன் விளைவாக என்ன நடந்தது?  மீளவும் பழைய நிலைமையை, 30 வருடத்துக்கு முன்னைய நிலைமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

உருத்திரகுமாரன், இம்மானுவேல், விநாயகம் போன்றோரின் பின்னணியிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் இவர்கள் சிறுசிறு குழப்பங்களை நாட்டில் உருவாக்க நினைக்கின்றனர் இந்த நாட்டை அழிக்க முயற்சிக்கின்றனர்.
இந்த நாட்டில் தனித்தமிழீழம் ஒரு போதும் கிடையாது நிச்சயமாக சம உரிமை வழங்கப்படும் இங்கு அமெரிக்காவோ, ஜரோப்பாவோ உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.

யாழ்ப்பாணத்தில் தற்போது 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர் இங்குள்ள இராணவத்தினரால் உங்களக்கு ஏதாவது தொந்தரவு உண்டா? என்று மனச்சாட்சியைத் தொட்டுப் பார்;து சொல்லுங்கள்
இறுதியாகச் சொல்லுகின்றேன் கைது செய்யப்பட்ட 4 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுதலை செய்தால் தான் யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் இயக்கப்படும் என்றால் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை என்றார்.


*நன்றி உதயன்*

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..