என் ஊடகப்பயணத்தில் ஏற்பட்ட அனுபவம்



காற்றோட்டத்தில் மழைதூறி ஓய்ந்த நேரம் சில் என்ற காற்று நேரம் மாலை 4.30 இருக்கும். “வேணா மச்சான் வேணா இந்தப பொண்ணுங்க காதலே” என ஐஸ்கிறீம் வாகனம் பாட்டுடன் வீதியை அலங்கரித்தது.

 வீட்டு வாசலில் எனது சைக்கிலை  நிறுத்தினேன் மரத்தில் நின்ற காகம் என்னைத் திட்டியதோ தெரியவில்லை கத்திய படி பறந்தது என் சைக்கிள் மரத்தில் பட்டு விழுந்த அதிர்ச்சியில்.

 “சர்” என்ற சத்தத்தில் கதவு திறக்க சிறு பெண் வந்தாள் தங்கா அப்பா நிக்கின்றாரா? “அல்லா கூ அப்தர்” என போட்டி போட்டுக்கொண்டு மூன்று பள்ளிவாசலில் இருந்தும் ஓதிக்கேட்டது.

என்னோட அப்பா “எங்க வீட்டில நிக்குறாரு நீங்க யாரு”  
 “ஜயோ சொறிம்மா இந்த வீட்டில யாரும் இல்லையா?” 
“நிக்கிறாங்க உள்ள போங்கக்கா”  என்றவாறே ஓட்டம் பிடித்தாள் அச்சிறுமி தன் வீட்டிற்கு.

கல்லின் மேல் சுத்தியலால் டொக் டொக் என தட்டும் சத்தம் கேட்டது பல ஆண்களின் சிரிப்புச்சத்தமும் தொடர நான் அச்சத்தங்கள் கேட்கும் இடத்தை தொடர்ந்து சென்றேன். அயல் வீட்டு வானொலி ஊரக்கே சேவை புரிந்து கொண்டிருந்தது. ஒருவர் கதைக்கு இன்னொருவர் தன் கருத்தினைக்கூற ஏனையோர் வில்லங்கத்துக்கு சிரிப்பது போல் பலத்த குரலில் சிரிக்க மேலும் தொடர்ந்தது அவர்களது அராஜகம்.

 ஒரு கொட்டிலின் கீழ் தான் நடந்து கொண்டிருந்தது பார்த்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன் அருகில் இருந்த சிவன்கோயில் மணி டாங் டாங் என ஒலித்தது. அழகன் முருகன், அண்ணன் கணேசன், சயன நிலையில் கண்ணன் என ஏராளமான சிற்பங்களுக்கு நடுவில் சரஸ்வதி சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார் நான் சந்திக்கச் சென்ற சிற்பி.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..