இதுவா ஜனநாயகம்?

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை (28.11.2012) நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் மற்றும் பொலிஸாரினால் பல மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவியது.

இதனைக் கண்டித்து இராணுவத்தினருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. அதனையடுத்து பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி மேற்கொண்டுள்ளனர். அதன்பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பின்னர் நிலைமை சீரடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் போதிலும் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டே இருந்தமை குறிப்பிடத் தக்கது.

சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது 

 இச்சம்பவம் தொடர்பாக அனைத்து மீடியாக்கள்; வலைத்தளங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..