உதயபுர மக்களுடன் யாழ் றோட்றக்கழகம்






















கிழக்கரியாலை உதயபுரம் பகுதியில் வாழும் மக்களின் நலன்கருதி சுகாதார தினைக்களத்துடன்; இனைந்து யாழ் றோட்றக்கழகம் கடந்த 30ம் திகதி (2012.09.30) நுளம்புவலைகளை வழங்கியது. இச்செயற்பாடானது எமது றோட்றக்கழகத்தின் அங்கத்தவர் மதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 120 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.
அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுடன் கதைத்த போது சில பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல குடும்பத் தலைவிகள் உட்பட அப்பகுதி மக்கள் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ள வருகின்றனர் என தெரியவந்தது. இதற்கு எம்முடன் வந்திருந்த பொதுச்சுகாதார அதிகாரி மதன் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகானும் முகமாக அம்மக்களுடன் கதைத்து அதற்கேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அங்கு வசிக்கும் (பெயர் குறிப்பிட விரும்பாத) சிறுமி ஒருத்தி பாலர் பாடசாலை செல்வதில்லை என குற்றச்சாட்டு நிலவியது அதற்காண காரணத்தை கேட்ட போது சக மாணவர்கள் நுள்ளுகின்றனர் அதனால் போக மறுக்கிறார் என தாய் கூறினார். அச்சிறுமி தாய் அம்மம்மா என மூவரும் தான் அவ்வீட்டில் வசிக்கின்றனர். மிகச்சிறிய வீடு அடிப்படை வசதிகள் அற்ற நிலையே காணப்பட்டது. மேலும் அச்சிறுமியின் தாயுடன் கதைத்தபோது தாயார் தான் வேலைக்கு செல்பவர் ஆனால் அவரும் ஒரு கிழமையாக வேலைக்குச் செல்வதில்லை என்றார் அவருடைய தாய். நாம் காரணம் கேட்டபோது அம்மாவிற்கு உடம்பு சரியில்லை மகளை கவனிக்க முடியாது மகளும் பாடசாலை செல்ல மறுக்கிறா நான் எப்படி வேலைக்கு செல்ல முடியும் என்றார்.
அம்மம்மாவின் கருத்தாக அடிப்படை வசதிகள் (மலசலகூடம், கிணறு) இல்லாத காரணத்தால் தான் எனக்கு நோய் ஏற்படுகிறது. நான் மகளை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் போகமாட்டேன் என்கிறா என் பேத்தியை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் ஏதாவது செய்வீர்களா? என்றார்.


அங்கு வசிக்கும் மக்கள் தற்போது தான் மீளக்குடியேறி வருகின்ற நிலையில் தமது தொழிலுக்கு ஏற்றாற் போல் தமது இருப்பிடங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். தற்போது தான் அப்பகுதிக்கு மின்சார வசதிகளை வழங்கி வருகின்றனர் மின்சார சபையினர்.






இருப்பினும் அப்பகுதியில் நிதந்தரமாக மக்கள் வசிப்பதில்லை எனவும் அவ்வப்போது தான் வந்து பேகாகிறார்கள் அதுவும் ஏதாவது நிறுவனம் வந்து நிவாரணப் பொருட்கள் குடுக்கின்றனர் என்றால் வருவார்கள் பிறகு காணக்கிடைக்காது என குற்றச்சாட்டும் எழும்பியது. இவ்வாறு குற்றஞ்சாட்டும் போது அங்கு வந்த (பெயர் குறிப்பிட விரும்பாத) பெண்மணியிடம் ஏன் நீங்கள் இங்கு திதந்தரமாக வசிப்பதில்லை என்று கேட்டதற்கு வசதிகள் போதாது இப்போது தான் செய்து வருகிறோம் பின் எப்படி இங்கு இருக்க முடியும் என்றார்.

எவ்வாறு இருப்பினும் ஒரு கிராமம் என்று இருந்தால் அழகாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்பது உண்மை தான் மழை தூற மண்வாசனையும், அழகான குடும்பங்களின் பேச்சு வழக்கும், அத்துடன் அக்கிராம இழைஞர்கள் சேர்ந்து நண்பகலே மைதானத்தில் விழையாட ஆரம்பித்தமையும் கலகலப்பான வித்தியாசமான அனுபவத்தைத்தந்த அக்கிராமத்தை விட்டு வெளியேறும் போது கவலையாகத்தான் இருந்தது.

 ஆனாலும் இப்படி எத்தனை இடங்கள் எவ்வளவு மனிதர்களை சந்திக்க வேண்டும்.




 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..