ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் ஈழத்தவர் குறந்திரைப்பட விழா செப்ரம்பர் மாதம் 27,28 ஆகிய தினங்களில் காலை 9.30 தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈழத்தவர்களால் தயாரிக்கப்பட்ட 23 படங்கள் 5 அமர்வுகளாக திரையிடப்பட்டன.
1ம் நாள் அமர்வில் ஆ.சபேசன் (ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய பயிற்றுனர்) தலமை வகிக்க “திரைப்படம் மற்றும் குறந்திரைப்படம்” கருத்துரையை குப்பிளான் சண்முகம் வளங்கினார். தண்ணீர், சலனம், மறுபக்கம், அவசரம், பச்சை மண் சுட்ட மண், எங்கள் சுருட்டு, போன்ற குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
2ம் அமர்வில் கலாநிதி.க. ஸ்ரீறீகணேசன் (விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலமை வகித்தார். கர்த்தால், பொறி, கால் போன்ற குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
3ம் அமர்வில் கைத்தொலைபேசி குறந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன முற்றுமுழுதாக மாணவ படைப்புக்களாகவே காணப்பட்டது. விமல் சுவாமிநாதன் (விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலமை வகிக்க கருத்துரையினை “கைத்தெலைபேசி குறும்படம்” தே.தேவானந் (ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம்) வளங்கினார். இதுவே போதும், இழந்தோம், ஊமை மொழிகள், சாசனம், கனவு, விடியுமா, வாழ்க்கையே போராட்டம் போன்ற கைத்தொலைபேசி குறந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
4ம் அமர்வில் புலம்பெயர் தமிழர்களின் பேரன் பேத்தி, எது மட்டும், வட்டம் போன்ற குறந்திரைப்படங்கள் திரையாகின.
5ம் அமர்வில் பேராசிரியர் சிவச்சந்திரன் (முன்னாள் கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலைமை வகித்தார். கருத்துரையினை “மக்கள் தொடர்பாடல் ஊடகமாக குறும்படங்கள்” கவிஞர்.சோ.பத்மநாதன் வளங்கினார். இதன் போது வெள்ளைப்பூக்கள், இடைவெளி, பூமாலை, ஊனம் போன்ற குறந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.