கரைதீவு ஒரு பார்வை








தங்குவதற்கு இடம் இருந்தால் மட்டும் போதுமா? ஆமாம் போதும் உயிர் வாழலாம் என வாழ்ந்து வருகின்றனர் காரைதீவு பிரதேச மக்கள் கடற் தொழிலை பிரதாணமாக கொண்டு வாழ்ந்து வரும் இப்பிரதேச மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர் என்பதை அறிந்தால் எம் நாட்டின் எதிர்காலம் எங்கு போகின்றது என்பது கேள்விக்குறியே?
கடற்கரையில் குடியிருக்கும் மக்கள் தண்ணீரிற்கு தந்தியடிக்க வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது வீடுகளில் கிணறு இல்லை அவ்வாறு இருந்தாலும் கிண்றுக்குள் தண்ணி இல்லை அவ்வாறே இருந்தாலும் எமது வீடுகளில் களிவுநீர் இருக்கும் நிலையில் தான் உள்ளது அத்துடன் மலசல வசதியும் இல்லை இவ்வாறு இருந்தால் அப்பிரதேச மக்களுக்கு நோய் ஏற்படாமல் என்ன ஆகும். இத்தனைக்கு மத்தியில் மக்களுக்கிடையில் பல பிரச்சனைகள் ஒழிந்துள்ளன அயலவர்களின் உதவிகள் சிலருக்கு கிடைப்பதில்லை சாதி பார்ப்பது என தமது பிரச்சனைகளை தாமே வளர்த்துக்கொள்கின்றனர் அப்பிரதேச மக்கள்.
காரைதீவு கிhமத்துக்கு செல்லும் போதே கிராமம் என்றால் இவ்வாறுதான் இருக்கும் என்ற ஒரு கனவுடன் உள் நுளைந்தேன் ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு உணர்வுகளை அக்கிராமம் தட்டியெழுப்பியது. ஒரு ஒழுங்கையால் உள் சென்றபோது வேடிக்கை பார்த்தபடி தன் வீட்டு வாசலில் செல்வராஜா (வயது 58) நின்றார் அவரிடம் சென்று கதைத்தபோது இங்;கு கடல்தொழிலாழர்களே அதிகம் இருக்கின்றார்கள் நான் குருநகரில் உள்ள நண்டு உடைக்கும் தொழில் சாலையில் தொழில் புரிகிறேன் இடம்பெயர்ந்து போய் இங்கு வந்து 15 வருடங்கள் ஆகின்றன ஆனாலும் இன்னும் இக்கிராமத்து மக்கள் முழுமையாக குடியேறவில்லை இப்போது தான் குடியேறிவருகின்றனர். நான் மாடு வளர்க்கிறேன் எனக்கு பிரச்சனை எனும் போது தண்ணீர் தான் இங்கு அயலவர்களின் உதவி என்பது கிடையாது தாங்களும் தங்கடபாடுமாக இருப்பார்கள் தமது தேவைக்கு மட்டுமே கதைப்பார்கள் என்று கூறிமுடித்தார் செல்வராஜா.
அவரைக்கடந்து சென்றபோது ஒரு பாடசாலை சிறுமி காலில் செருப்புக்கூட இல்லாமல் பாடசாலை முடிந்து வீதியால்  ஓட்டமும் நடையுமாக சென்றவளை மறித்துக் கதை கேட்டதும் எந்தவித பயமோ பதட்டமோ இல்லாமல் மோ.ரதீ~h பதிலழித்தாள். நான்; தரம் 5 படிக்கிறேன் படிக்கவே க~;டமா இருக்கு அக்கா விளக்கிலதான் படிக்கனும் 5மணிக்கு நித்திரையால எழும்பி குழிக்க போகனும் அப்ப தான் நேரத்துக்க பள்ளிக்கூடம் போகலாம் குடிக்க குழிக்க எல்லாத்துக்கும் தண்ணீ வேற இடத்துக்குத்தான் போய் எடுக்கிறனாங்க பாவனைக்குத்தான் தூரப்போய் தண்ணி கொண்டு வரனும் பள்ளிக்கூடத்துக்கும் நடந்து தான் போகனும் என்றாள் அச்சிறுமி.
அதே போல் தன் பேரப்பிள்ளைகளின் குறும்புகளை ரசித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி சதாசிவம் (வயது 52) என்பவரிடம் கதைத்த போது நாங்கள் 2002ம் ஆண்டு தான் இஙகு மீழக்குடியேறினோம் எனது கணவர் கடற்தொழில் செய்பவர் ஒருநாள் வருமானம் 500ரூபா போதாது தான் இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்றார். எனக்கு இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வீடு கட்டித்தந்தார்கள் பணம் போதாத நிலையில் கட்டி முடிக்கவில்லை அப்டியே உள்ளது இனி எங்கட காச போடடுத்தான் கட்டிமுடிக்கனும் இப்பதைக்கு எங்க முடிக்கிறது பாப்பம் என்றார். தண்ணீர் பிச்சனை என்பது எமக்கு காலம் காலமாக இருந்து வரும் ஒன்று உங்களுக்குத்தான் இது புதிதாக உள்ளது மாரிகாலத்தில் பக்கத்து கிணற்றில் பாவிக்கலாம் கோடை காலத்தில தூரத்தான் போய் எடுக்கனும் என்றார்.
அப்பிரதேச மக்களுக்கு தண்ணீர் பிச்சனை வழமையாக இருந்தாலும் சிறுவயது திருமணம் சாதிப்பிரச்சனை என தம்மைத்தாமே முன்னேற விடாமல் கட்டிப்போடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஒரு வீட்டில் கிணறு உள்ளது ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் போய் பாவிக்க முடியாது அவர்கள் வேறு இடத்திற்கு சென்று தான் எடுக்கவேண்டும் கேட்டால் சாதியை காரணம் காட்டுகிறார்கள் இவ்வாறு எமது நாட்டில் எவ்வாறான பிரச்சனைகள் இன்னும் உள்ளனவோ.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..