
மாற்று வலுவுள்ளோரிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்களால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சாதனை படைத்து வருகிறது இச்சங்கம்.
இச்சங்கமானது 1990ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி உருவாக்கப்பட்டது. பிறப்பின் போதோ, யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் விழைவுகளால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ உடல், உள ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இங்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் சக்கரநாற்காலி முச்சக்கரவண்டி நடக்கும்சட்டம், ஊன்றுகோல் கொமேட்கதிரை வெள்ளைப்பிரம்பு போன்றவற்றை மாற்றுவலுவுடையோருக்கு இச்சங்கம் வழங்கி வருகின்றது அத்துடன் வறிய குடும்பங்களிலுள்ள மாற்று வலுவுடையோரிற்கு மாதாந்த உதவுதொகை வழங்கி வருதல்.
போசாக்கு குறைவாக உள்ள மாற்று வலுவுடைய பிள்ளைகளிற்கு சத்துணவு வழங்கலும், சத்துமருந்து வழங்கலும். வறியகுடும்பங்களிலுள்ள மாற்று வலுவுடைய மாணவர்களின் கல்விக்கான உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கிவருதல். பொழுது போக்கு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள், மற்றும் ஆலயங்களிற்கு அழைத்துச் செல்லுதல். வலுவிழந்தோர் உபகரணங்கள் திருத்த வேலைகளினைச் செய்து வழங்குதல் போன்ற பல விடயங்களை செய்து வருகின்றது.
இந்தச் சங்கத்தினுடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் நிர்வாக உத்தியோகத்தர் தே.விஜயச்சந்திரனிடம்; கேட்ட போது,
“இந்நிறுவனமானது இவ்வருடம் 21வது ஆண்டை புர்த்திசெய்கின்றது. நாம் என்ன நோக்கத்துடன் இந்த ஸ்தாபனத்தை உருவாக்கினோமோ அந்த நோக்கை எம்மால் முழுமையாக அடைய முடியவில்லை என்றே கருதுகிறேன்.
மாற்று வலுவுடையோருக்கு மருத்துவ வசதிஇ சத்துணவு வழங்குவதோடு;; மாற்றவலுவுடையோரின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான உதவிகளையும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி கின்றோம். மாற்று வலுவுடையோருக்கு உளநலம் பொழுது போக்கு போன்றவற்றுக்காக கலாச்சார நிகழ்வுகளை நடத்துதல் ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லல், வருடந்தோறும் ஆண்டு விழா நிகழ்வில் பல்வேறு வகையாண போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசில் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தல் பொன்றவற்றையும் செய்து வருகிறோம்.
இங்கு கேள்கருவிமூலம் ஒலிமூலம் வாய்மொழி மூலம் உதட்டு அசைவு மூலம் என பல்வேறு முறைகளைக் கையாண்டு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சுயதொழில் பயிற்சிவகுப்புக்களை விரிவுபடுத்தி வருகின்றோம். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நிலையம் ஒன்றை நிறுவுதல்இ தங்கமிட விடுதிவசதிகளை விரிவுபடுத்தலஇ; மாற்றவலுவுடையோர்களின் கல்விக்கான வசதிகளை விரிவுபடுத்தல் இயன் மருத்துவ நிலையத்தை விரிவுபடுத்தல் போன்ற திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளோம் என்றார்.
மாற்று வலுவுடையோரால் சுயமாக செய்யப்பட்ட கைத்தொழில் பொருட்கள் விற்பனைக்கு விடுவதன் மூலம் அவர்களது சுய முன்னேற்றத்துக்கு வித்திடுகிறோம்” என்றார்.
பொதுமக்கள் நண்பர்கள் சமூகஆதரவும் அக்கறையும் செலுத்தி அவர்களையும் எம் குடும்பத்தில் ஒருவர் போன்று இணைத்துக்கொள்ள முன் வரவேண்டும் அவ்வாறு செயற்படின் அவர்கள் வாழ்வு நிச்சயம் நலம்பெறும்.