பாரம்பரியங்களை நம்மால் பாதுகாக்க முடிந்தால்











 
சிலரிடம் தோன்றி பலரிடம் சென்றால் அது கலை. பலரிடம் தோன்றி சிலரிடம் சென்றால் அதன் பெயர் கலையே இல்லை அது கலையை மழுங்கடிக்கும் செயல்.
ஓவ்வொருவரும் தம் உணர்வுகளை ஒவ்வொரு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். ஒருவன் கவிதை வடிவிலும் மற்றொருவன் ஓவியம் வடிவிலும், சிற்பங்கள் மூலமும் இசை வடிவிலும் வெளிப்படுத்துகின்றனர்;;. கலை என்பது கலைஞர்களது மற்றுமொரு மொழி ஆனால் கலையின் வடிவங்கள் எங்கெல்லாம் உருவெடுத்துள்ளன என்பதை கண்டறிய சாதாரண மக்களால் முடிவதில்லை இருப்பினும் சிலரது முயற்சி பாராட்டத்தக்கது.


இலங்கையின் சிரசாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் முழுமையாண தொன்மை வரலாற்றை பெற்றுக்கொள்ள முடியா விட்டாலும் அந்நியர் ஆட்சியில் ஏற்பட்ட தடையங்கள் மூலம் ஓரளவு உறுதிப்படுத்த முடிகிறது. வரலாறு என்பது கடல் போன்றது முழுமையாக அறிந்தவர்கள் யாரும் தற்காலத்தில் இல்லை என்றே கூறலாம். இலங்கையை ஆண்ட மன்னர்கள் ஏராளம் இலங்கையை பல மன்னர்கள் ஆட்சி செய்தாலும் ஆட்சித்திறமையும் சமயப்பற்றும் நிறைந்தவன் சங்கிலிய மன்னன்; எத்தனை மன்னர்கள் ஆண்டாலும் மக்களது மனங்களில் பதிந்த ஒருவன் என்றால் அது பரராஐசேகரனின் மகன் சங்கிலியனாகத்தான் இருக்க முடியும்.


கி.பி 15ம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய சங்கிலிய மன்னனை வெளிநாட்டு சக்திகள் கூட எதிர்க்க தகுதி அற்றவர்களாகவே காணப்பட்டனர். 15ம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டையை ஆட்சி செய்த 6ம் பராக்கிரம பாகு இலங்கை முழவதையும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வளர்ப்பு மகனான சபுமல்குமாரயாவை அழைத்து படை ஒன்றை அனுப்புவதற்காக தூண்டி விட்டான் இதை அறிந்த சங்கிலிய மன்னன் தந்தை உயிருடன் இருக்கும் போதே ஆட்சியைக் கைப்பற்றினான் என மற்றுமொரு வரலாறு கூறுகின்றது.

சங்கிலிய மன்னனது ஆட்சியின் போது யாழ்ப்பாணத்தில் குழப்ப நிலைகள் குறைந்து அமைதியான சூழல் ஏற்பட்டது. நற்குணங்கள் கொண்ட சங்கிலிய மன்னனிடம் துர் நடத்தைகளும் கொலை வெறி, அஞ்சா நெஞ்சம் போன்ற பயங்கரமான குணங்களும் இருந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இது இவ்வாறு இருக்க போர்த்துக்கேயரின் தலையீடும் வியாபார நடவடிக்கைகளும் இந்து மதத்தை அவமதித்து மக்களை மதம் மாற்றும் செயற்பாடுகளும் நடந்துள்ளன. அவ்வாறான சூழ்நிலையில் முற்கோபமும் அதிவேகமும் உள்ள சங்கிலிய மன்னன் மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டு மதத்தைப்பாதுகாக்க பல கொலைகளையும் செய்துள்ளான். இவ்வாறு யாழ்ப்பாணம் தனி இராச்சியமாகத் தலை நிமிர்ந்து நின்ற காலப்பகுதி அது.

இலங்கையில் ஒரு சிறப்பு மிக்க செல்வாக்குள்ள இராச்சியமாக யாழ்ப்பாண இராச்சியம் காணப்பட்டது. இது மட்டுமா வடகிழக்கே திருகோணமலைப்பிரதேசம் வன்னியனின் ஆதிக்கத்தில் இருந்தது வன்னியனின் மறைவுக்குப்பின்னர் ஆட்சிப்பீடம் ஏற அவனது மகனுக்கு வயது போதாது வாலிப வயது அடையும் வரை குடும்பத்தவன் ஒருவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்பதை அறிந்த சங்கிலிய மன்னன் திருகோணமலை போர்த்துக்கேயரிடம் போய் விடக்கூடாது என்று எண்ணி தனது தளபதியை அனுப்பி திருகோணமலையை தனதாக்கி கொண்டான் பின் உரியவனிடம் ஒப்படைத்தான்.


கி.பி 1552ல் சிங்களப்பிரதேசத்தை ஆட்சி செய்த புவனேகபாகு மன்னன் இறக்க தர்மபாலன் ஆட்சியை எற்றான் தர்மபாலனின் பலவீனத்தை அறிந்த போர்த்துக்கேயர் சிங்க மன்னனை எதிர்த்து பௌத்தர்களின் புனித புத்ததாதுவை அழித்ததாக அறியப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்று செய்வதறியாதிருந்த தர்தபாலன் சங்கிலிய மன்னனின் உதவியை நாடினான். இவையாவற்றுக்கும் உதவியாய் இருந்த தர்மபாலுவின் தந்தை வீதி விபத்தில் இறந்தமை இருவருக்கும் பெரும் துயரத்தைக் கொடுத்தது தர்மபாலனின் தந்தையான வீதிபண்டார யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் முற்றுகையிட்டபோது சங்கிலிய மன்னனுடன் ஒன்றினைந்து போர்த்துக்கேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தினர்.


இப்படியான வீதி பண்டாரவின் இழப்பை நினைவு கூற நல்லூர் வடக்கு வாசலில் ஓர் ஆலயத்தை கட்டுவித்தான். சட்டநாதர்சிவன்கோவிலுக்கு வேறு ஒரு காரணமும் கூறுகின்றனர் அப்பிரதேச மக்கள் சங்கிலிய மன்னன் நீதி வழங்கும் இடமாகவே இக்கோவில் அமைந்தது என்கின்றனர் அதாவது சட்டம் சொல்லும் இடம் என்பதால் சட்டநாதர் சிவன்கோவில் என பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.



ஏற்கனவே மன்னார் கொலை சம்பவத்தினால் லஞ்சம் வைத்திருந்தமையும், மன்னார் மக்கள் போர்த்துக்கேயரின் தளபதிக்கு ஆதரவளித்து படையெடுத்தமையும், வீதிபண்டாரவின் இழப்பும், மக்கள் இரகசியமாக கத்தோலிக்க மதத்தை தழுவியவியமையும் சங்கிலிய மன்னனை தோற்கடிக்க செய்தன யாழ்ப்பாணம் இவ்வாறே போர்த்துக்கேயர் வசமானது.
வட பகுதியில் வேறு எந்த சக்திகளும் உருவெடுக்கக்கூடாது என்பதற்காக கொலைகளும் நடவடிக்கைகளும் தனிப்பட்ட குரோதங்களுக்காகவோ, மதத்திற்காகவோ அன்றி அரசியல் நோக்கங்களுக்காகவும் நாட்டின் இறமைக்காகவும் ஏற்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போர்த்துக்கேயரின் தலையீடுகளுக்கு எந்தவகையிலும் இடம் கொடுக்காத சங்கிலிய மன்னன் தன் நாட்டு மக்களையும் இந்து மதத்தையும் கரிசனையுடன் பாதுகாத்துள்ளான் என வைபவமாலை கூறுகின்றது.



இவ்வாறாண சிறப்பு மிக்க மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் சங்கிலிய மன்னனின் அரன்மனை, தோப்பு, யமுனாஏரி போன்றன எவ்வித பாதுகாப்பு அற்ற நிலையிலும் பாழடைந்த நிலையில் இருப்பதும் கவலைக்குரியதே இவை பற்றி நம் நாட்டவர்களும் சிந்திக்க வேண்டும்.
நம் நாட்டின் வரலாற்றினை எதிர்வரும் சந்ததியினருக்கு எடுத்துக்கூற நம்முடன் வாழ்ந்து வருபவை இவ்வாறாண தடையங்களே. நமது நாடு படிப்படியாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. ஆனால் இவ்வாறான வரலாற்று விடயங்களில் நாம் கவலையீனமாக இருப்பது கவலைக்குரியதே.



யுத்தம் முடிவடைந்து ஏ.9 வீதி திறக்கப்பட்டதும் தென்பகுதி மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி அதிகமாக வருகை தருகின்றனர். அவர்கள் இவ்வாறான வரலாற்று தடையங்களை பார்வையிட்டு இவை ஏன் இவ்வாறு உள்ளது இவற்றை புணரமைத்தால் என்ன என எண்ணி புணரமைப்பு செய்ய முற்படும் போதோ அல்லது இவை பற்றி கதைக்கும் போது தான் நம்மவர்களுக்கு நம்நாடு நம்தேசம் என போராடும் எண்ணமும் தொடங்கும்.  சிலர் கண்டு பலர் பேசும் முன் நம் நாட்டவர்களே நம் தேசத்தை பாதுகாக்க வேண்டும்.
 













 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..