ஆனால் யுத்தம் காரணமாக எமது பனைவளம் பெருமளவு அழிக்கப்பட்டதுடன் வேறு தேவைக்காகவும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. பனை தறிப்பது தண்டனைக்குரிய குற்றமாக அரசால் அறிவிக்கப்பட்ட போதும் இச்செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படவில்லை பனை மரமானது காலகாலமாக நிலைபெற்று நிற்கக்கூடியது என்பதால் மக்கள் அதிகமாக இதையே பயன்படுத்துகின்றனர்.
பனைமரம் முழமையாக பராமரிக்கப்படாமைக்கு மற்றுமொரு காரணம் திட்டமிடாமை எனலாம். மின்சாரக்கம்பிகளுக்கு இடையூறாக இருப்பதாலும் வீதி அகலிப்பு மற்றும் மீளக்குடியமர்வு போன்ற காரணங்களாலும் தறிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவரிடம் கேட்ட போது “பனைவளம் அதிகம் இருக்கக்கூடிய இடம் வடக்கு கிழக்கு மாகாணம். யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் பனைஅபிவிருத்தி இடம் பெறவில்லை ஆனால் இப்போது பனை அபிவிருத்திக்கான சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் நாற்றுக்களாக நடத்தீர்மானம் எடுத்துள்ளோம். இருப்பினும் உற்பத்திகள் போதாத நிலையே காணப்படுகிறது உற்பத்தியாளர்கள் அதிகமாக இணைக்கப்பட வேண்டும் பனை தொடர்பான புதிய ஆராச்சிகள் மேற்கொள்ள்பட வேண்டும் பனை மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப்பொருட்களும் தரம் உயர்த்தப்பட்டு வெளிநாட்டு உள்டநாட்டு சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பனை வளத்தின் உற்பத்தி என்பது ஒன்று பனைசார் உணவு உற்பத்திப் பொருட்கள் மற்றயது பனைசார் அழகுசாதனப்பொருட்கள் மற்றும் தளபாடப்பொருட்கள். சிறு சவடுகள் என்ற அமைப்பில் உற்பத்தியாளர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பயிற்சி அழிக்கப்பட்டாலும் இவர்கள் ஒன்றினைக்கப்படவில்லை உதிரிகளாகவே இருக்கின்றனர் அவர்களை சிறு சுவடு என்ற அமைப்பில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். பனை ஆராட்சி மையத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கை இரசாங்கத்தினால் 24 மில்லியனும் இந்திய அரசாங்கத்தினால் 75 மில்லியன் தொகையும் வளங்கப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துளைப்பு வளங்க வேண்டும் என்பதே பனை அபிவிருத்திச்சபையின் எதிர்பார்ப்பாகும்” என்று கூறினார்.
பனை சார்ந்த கைத்தொழில் உற்பத்திப்பொருட்களை பெண்கள் சுயதொழிலாக செய்கின்றனர். பனைசார் வடிவமைப்பு நிலையத்தில் தொழில் புரியும் பெண் ஒருத்தி கூறுகையில் “எனது பெயர் தர்சினி நான் பருத்தித்துறையில் இருந்து இங்கு வருகிறேன். எமக்கு பயிற்சி அழிக்கப்பட்டது பயிற்சியின் முடிவிலே பரீட்சை நடைபெற்றது. பரீட்சையின் பலனாக 25பேரை தேர்ந்தெடுத்து இங்கு இழைத்து வந்தனர் எமக்கு இத்தொழில் வாய்ப்பானது மிகவும் பயனுள்ளதாகவும் இலகுவானதாகவும் உள்ளது. இந்தத்தொழில் எமக்கு நிதந்தரமானதாகவும் மாதச்சம்பளம் பெறக்கூடிதாகவும் இருந்தால் சிறந்தது” என்றார்.