நாயன்மார்க்கட்டு சிறுவர் கிராமம்


நாயன்மார்க்கட்டு  பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுவர் கிராமம் எனும் இடத்திற்குச்சென்று அவர்களைச் செவ்விகண்டேன்.  அப்போது அங்கு மேற்பார்வை செய்துகொண்டிருந்த உதவி இயக்குநர் சுவாமிநாதன் அருச்சுனன் இச்சிறுவர் கிராமம் பற்றி கருத்துக்கூறினார்.


இந்த sos நிறுவனமானது இலங்கையில் 30 ஆண்டுகளாக சேவையாற்றிவருகின்றது.  sos  இன் இலங்கை தேசிய இயக்குநர்  ஞானந்தகருணாரட்ணம் சேவையாற்றி வருகிறார்;. இத்திட்டமானது சமூகசேவை அமைச்சருக்கும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்துக்கும் கீழ் நடைபெறுகின்ற ஒரு திட்டம். இத்திட்டத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கும் போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் யாழ் நீதி மன்ற  நீதிவான் கட்டளைக்கு இணங்க அனுமதிகேட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.

யுத்தத்தின்  பின் போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்டு sos சிறுவர் கிராமத்துக்கு அனுமதிக்கப்பட்ட 300பிள்ளைகளுடன் மணிக்பாம் எனும் இடைத்தங்கல் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தார்கள் படிப்படியாக பெற்றோர்கள் உள்ள பிள்ளைகள் அவர்களின் குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டு மிகுதி 74 பிள்ளைகளே வவுனியா நீதிமன்ற கட்டளைக்கு இணங்க யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றப்பட்டனர். தற்போது யாழ்ப்பாணத்தி;ல் 3 இடங்களில் ளுழுளு சிறுவர் கிராமத்தின் அனுசரணையுடன் சுண்டிக்குளி றக்கா வீதியிலும் அரியாலை, இருபாலை போன்ற இடங்களில் 74 சிறுவர்களுடன் தற்போது இயங்கிவருகின்றது.

இலங்கையில் 5 இடங்களில் இந்நிறுவனம் தன் சேவையை ஆரம்பித்துள்ளது. 1980 இல் பிரியந்தனை கொழும்பிலும,; 1984 இல் நுவரெலியாவிலும், 1989இல் காலி மாவட்டத்திலும், 1992 இல் அநுராதபுரத்திலும் ஆரம்பித்த இந் நிறுவனம் தொடர்ந்து 2002 இல் ஆதரவற்ற சிறுவர்களுக்கு சிறுவர் கிராமத்தை நிர்வகிக்கும் முகமாக நல்லூர் பிரதேசத்திலுள்ள நாயன்மார்கட்டு கிராமத்தில் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ந்திகதி யாழ்மாவட்ட நீதிவான் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் அவர்களால் நிரந்தர அடிக்கல் கட்டிடம் நாட்டி வைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் முடிக்கப்பட்ட வேண்டும் எனத்திட்டமிட்டுள்ளோம். 3 இடங்களிலும் உள்ள சிறுவர்களையும் இங்கு அழைத்துவரவுள்ளோம். 12 இல்லங்கள் நிர்மாணக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான குடும்ப சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் இச்சிறுவர் கிராமத்தில் சிறுவர்களை பராமரிப்பதற்காக பொறுப்பாக செயற்படக்கூடிய பெண்களைத் தெரிவு செய்யும் பணியையும் செய்து வருகின்றோம். முதலில் அரசாங்கம் எமக்கு இடம் ஒதுக்கித் தருவதாக சொன்னார்கள். பின் அதனை கைவிட்டுவிட்டார்கள்.

நாம் விலைக்கு வாங்குவதற்கென காணிதேடியபோது நிறைய விடயங்களை பார்க்க வேண்டியிருந்தது. காணியின் பரப்பு, அருகில் குடியிருப்பு, வைத்தியசாலை, பாடசாலை எனப்பல விடயங்களைப் பார்த்தோம். அவ்வாறு தேடும்போதே எமக்கு இந்த இடம் கிடைத்தது.   அத்துடன் இங்கு இருக்கும் மக்கள் மிகவும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். குடியிருப்பு  மிகவும்குறைவு என்றே சொல்லலாம். ஆனாலும் நாம் வரவேற்கின்றோம். இக்கிராம மக்களுக்கு  முன்னுரிமை வழங்கவேண்டும்.









அதிகளவான மக்கள் குடியிருக்கவேண்டும். இக்கிராம  மக்களுக்கு இங்கு அதிகளவான வேலைவாய்ப்பினை நாம் வழங்க இருகின்றோம். இந்த  ளுழுளு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பங்களை வலுவூட்டும் திட்டம் 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதாவது சுனாமிக்குப்பின் அங்குள்ள 500 குடும்பங்களைத்  தெரிவு செய்து அக்குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு மதியஉணவு, மாலை நேர வகுப்புக்களை  எங்களது செலவுகளில் செய்கின்றோம். இதன்மூலம் அக்குடும்பங்கள் இதற்கு செலவிடும் பணத்தை சேமித்து குடும்பத்தை வலுவூட்டமுடியும். நாம் அதனைக்கண்காணித்தும் வருகின்றோம். இது எமது ஒரு குறுங்கால திட்டம் என்றார். வட இந்தியாவினைச்சேர்ந்த சித்தாந்தக்கோல் தான் தற்போது ளுழுளு சிறுவர் கிராமத்துக்குத் தலைவராக உள்ளார். இதனை நிறுவ மூலகாரணமும் இவர்தான்.
இவ்வாறு கூறிய அவர் கட்டிட வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு எம்மை அழைத்துக்கொண்டு சென்றார். இவ்வாறு கூறிய அவர் கட்டிடவேலை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு எம்னை அழைத்துச் சென்றார். உண்மையில் சிறுவர் கிராமம் என்பதனைவிட அவர்களது சொந்த இல்லங்கள் அமைக்கப்படுகின்றதோ என எண்ணத்தோன்றியது.


 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..