தெலுங்கில் மஹதீரா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த ராஜமவுலி, அடுத்து நான் ஈ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நானி, சமந்தா, கன்னட நடிகர் சுதீப், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தாவை ஹீரோ நானியும், வில்லன் சுதீப்பும் காதலிக்கின்றனர். சமந்தாவோ நானியை காதலிக்கிறார். இதை தாங்க முடியாத சுதீப், நானியை கொலை செய்கிறார். நானியோ ஈ வடிவில் வந்த வில்லன்களை பலிவாங்குகிறார். இப்படியொரு கதையை வித்தியாசமாகவும், கிராபிக்ஸ் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் ராஜமவுலி.