பெண்கள் இன்னும் அடிமைப்படுத்தப்படுகின்றனரா


உலகிலேயே முதல் பெண் பிரதமரையும் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமை இலங்கைக்கே உரித்தானதாகும். பெண்கள் பல துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டாலும் எத்தனை பெண்கள் உயர் பதவியில் இருக்கின்றனர் என்பது சந்தேகம். ‘சமைஞ்சால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ’ எனக்கவிஞர் ஒரு பெண்ணின் பரிணாமங்களை கூறும் அளவுக்கு பெண்ணானவள் குழந்தையாகஇ குமரியாகஇ மனைவியாகஇ தாயாகஇ பாட்டியாக பல பரினாமங்களை எடுத்துள்ளாள். ஆனாலும் ஒவ்வொரு பரிணாமத்தாலும் பெண்னவளை ஏதோவொரு வகையில் அடிமைப்படுத்தியுள்ளனர்.

            இன்றைய சூழ்நிலையில்  பெண்களின் கல்வியறிவு அதிகமாகவே இருக்கின்றது. ஆனாலும் கல்விபயிலும் அனைத்துப் பெண்களும் தொழில் புரிகின்றனர் என்று கூறிவிட முடியாது. சில பெண்கள் மட்டுமே தொழில் புரிகின்றனர். சில பெண்கள் பெற்றோராலே கல்வியிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர். பெற்றோர் தனது மகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றாலாலும் சரி கற்காது விட்டாலும் சரி சீதனம் கொடுத்துத்தானே திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர் இன்னமும் இருப்பதனால் பெண்ணவளின் கல்வி இடை நிறுத்தப்படுகின்றது.      

மகள் படிக்கச் சென்றால் அவள் தொடர்பாக அயலவர்கள் தவறாக பேசுவார்கள் என்றும் தனது மகள் தவறான பாதைக்குச் சென்று விடவாள் என்று எண்ணும் பெற்றோரும் மனைவி வேலைக்குச் சென்று தன்னைவிட சம்பாதித்தால் தன்னை மதிக்க மாட்டாள் என்றும் குடும்பத்தை பராமரிப்பதில் கவனம் குறைந்து விடும் என்று எண்ணும் கணவன் மார்களும் பெண்ணவளின் முன்னேற்றத்திற்கு தடையாகவே உள்ளனர்.

          அண்மையில் கொழும்பில் வலைப்பூ தொடர்பாண கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது இக்கருத்தரங்கானது முற்றுமுழுதாக பெண்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது இங்கு பெண்களின் திறமை குறித்து பல்வேறு தரப்பிரனால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன குறிப்பாக இணையத்தள பாவனையில் பெண்களின் பங்கு குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன நம் நாட்டில் தகவல் தொழில் நுட்பத்தினை தொழிலாளர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் முதல் பாடசாலை செல்லும் மாணவர்கள் வரைக்கும் பயன் படுத்துகின்றனர்.

இன்றைய சூழலில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வேலைக்குச் செல்கின்றனர். வேலைக்குச் செல்வதற்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டிய தேவையுள்ளது. இன்று அனைவரினதும் மத்தியிலும் ‘;கயஉhடிழழம’                   பிரபல்யமாகியுள்ளது. அதைப்போலவே வலைப்பூ தொடர்பாக பெண்கள் அறிந்துள்ளதுடன் தமது எண்ணங்களையும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர்;. ஆனால் ஆண்கள் பாடசாலை கல்;லூரி அலுவலகங்களில் நடந்தவை ஒரு அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட விடயங்கள் அண்மையில் படித்த புத்தகம் அந்நூல் பற்றிய திறனாய்வு ஏதாவது ஒரு பொருள் அல்லது ஏதாவது பிரச்சனை என எல்லாவற்றையுமே ஆண்கள் உடனுக்குடன வலைப்பூ முலம் தெரியப்படுத்துகின்றனர் அது மட்டுமல்லாது தமது நட்பு வட்டாரத்தையும் பரந்து வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பெண்கள் ஏன் அவ்வாறு தங்களது வலைப்பூ நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் கூறப்பட்டன
நவீன இணையத்தள யுகத்தில் பெண்கள் இவ்வாறு பிற்படுத்தப்படுகின்றனர் அல்லது ஒதுங்கி நிற்கிறார்கள் என்பதற்கு இது போன்ற காரணங்கள் சான்றாக அமைந்துள்ளது.
 







 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..