என்ன தான் நவீன யுகத்தில் மக்கள் ஒடிக்கொண்டிருந்தாலும் ஆயுள் வேதத்தை நம்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய் வந்தவுடன் போகிற போக்கில் ஆங்கில வைத்தியம் செய்வதும் தமது உடல் நிலையை தானே கவணிக்காதவர்களும் இருக்கிறார்கள்;. அழிந்து வரும் இயற்கையால் மக்கள் பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 5வது தலைமுறையாக ஆயுள் வேத வைத்தியம் செய்யும் டாக்டர் இரத்தின சபாபதி பொன்னையாவிடம் அழிந்து வரும் இயற்கையும் மனிதன் எதிர் கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் உரையாடினேன்.
நான் கேட்ட உடனேயே தலையில் கை வைத்தபடி கூறத்தொடங்கினார் இன்றைய இளம் தலைமுறையினரின் அட்டகாசங்களை. ஏதேதோ காரணங்களை சுட்டிக்காட்டி மக்கள் இயற்கையை அழித்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால் குளிர்மையாக இருக்கும் ஆரோக்கியமாண காற்றுக்கிடைக்கும் என்ற காலமெல்லாம் போய் மின்சாரம் மனிதனின் உயிர்த்தோழனாகி விட்டது. குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ந்த நீரும் மின் விசிறியில் காற்றும் என மனிதன் தன்னைத்தானே அழித்து வருகிறான் என்றே சொல்ல வேண்டும். முன்பெல்லாம் காய்கறி பழ வகைகளை நம்பி உண்ணலாம் ஆனால் இப்பொழுது கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. புழங்கஞ்சி பழந்தண்ணி என ஆரோக்கியமாண உணவுகளை உண்டு வந்தவர்கள் எல்லாம் இப்பொழுது முதல் நாளே சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடுகிறார்கள். எல்லாமே வெளிநாட்டு மோகம் வீட்டிலுள்ள மரங்களை வெட்டுகிறார்கள் காரணம் கேட்டால் வீட்டை திருத்தி அமைப்பதும் மேல்மாடி வீடு கட்டுவதும் என்று காரணத்தை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
இயற்கையால் கிடைக்கும் மருந்துகளை நாம் ஒரு போதும் தவிர்த்து விடக்கூடாது. அவை தான் நமது உடல் நலத்துக்கு உதவுகிறது. முன்னைய காலத்தில் எல்லாம் சாப்பாட்டின் மூலம் தான் மருந்து எடுத்தார்கள் இந்த காலத்தில் ஒரு சிலருக்கு மருந்தே உணவாகிக்கொண்டிருக்கிறது இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே மதுப்பாவனைகளும் அதிகரித்து விட்டன. பொதுவாக மக்கள் கிருமிகளை அழிப்பதற்கென்று மருந்துகளை வீசி பயிர்களையும் அழித்து வருகின்றனர். இதில் அதிகரிக்கும் வெய்யிலாலும் பல மூலிகைகள் அழிந்து வருகின்றன. எல்லாம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றன என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. மரங்களை வெட்டியும் தோட்டங்களுக்கு மருந்துகள் வீசுவதாலும் பல
மூலிகைகள் அழிந்து வருகின்றன. எனது அப்பா தாத்தா காலத்தில் எல்லாம் நாமே மூலிகைகளைத் தேடி எடுப்போம் ஆனால் இப்பொழுதெல்லாம் விலைக்குவாங்கும் நிலையே உருவாகியுள்ளது. சொன்னால் நம்ப மாட்டடீர்கள் (தாழங்காய்) எங்குமில்லாமல் தேடி இப்போதுதான் விலைக்கு வாங்கி இருக்கிறேன.; இது தீவுப்பகுதிகளிலே அதிகமாக கிடைக்கும் ஆனால் நாட்டில் ஏற்பட்ட யுத்தநிலையும் இதன் அழிவக்கு காரணம் என்று சொல்லலாம். இவை தொடர்பாக என்னிடம் வைத்தியம் பெற வருபவர்களுக்கு நான் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் பழையவற்றையும் கையாள வேண்டும் நவீன உலகத்தில் திண்டாடக்கூடாது ஆனால் எத்தனை பேர் இதனை கையாளுகின்றனர் என்பது சந்தேகமே.
அனைத்து தரப்பினரும் என்னிடம் வைத்தியம் பெற வருகிறார்கள். வாதம், செங்கமாரி, மலச்சிக்கல், பித்தம் என பல நோய்கள் அதிலும் அதிகமாக சிறுவர்களுக்கு எண்ணை வாங்க வருவோர்களே அதிகம் பெரியவர்களும் வருவார்கள் அவர்களது வயதுக்கு ஏற்றாற் போல் மூலிகைகள் வேறுபடுகின்றன முக்கிமாக குழந்தைகளுக்கு கிரந்தி எண்ணையே குடுக்கவேண்டும் இதற்கென 52 மூலிகைகள் தேவைப்படும். அதனை சேகரித்து வெய்யிலில் உளர்த்தி பின் நல்லெண்ணையில் காய்ச்சி கொடுக்கிறேன் இதனால் அவர்களுக்கு இயற்கையாண குளிர்மை கிடைக்கிறது. குழந்தை பிறந்து 41ம் நாளுக்கு பிறகே கிரந்தி எண்ணை வைப்பார்கள் இவை சில நேரங்களில் இடத்துக்கு இடம் வேறு படும் தீவுப்பகுதிகளில் குழந்தை பிறந்து 5ம் நாள் வைப்பார்கள். இவ்வாறு இடத்துக்கிடம் வேறுபட்டாலும் அதிகமாணோர் ஆயுள் வேதத்தையே விரும்புகிறார்கள். இவ்வாறு ஆயுள் வேதத்தை இன்னும் எவ்வளவு காலம் கொண்டு நடத்த முடியும் என்று தெரியவில்லை சித்த வைத்தியம் அழிந்து கொண்டே வருகின்றதுஎன்று முகத்தில் கவலையுடன் சொல்லி முடித்தார்.
எம்மவர்கள் என்னதான் பட்டப்படிப்பு படித்தாலும் பரீட்சையில் சமர்ப்பிப்பதோடு நின்று விடுகின்றனர.; வெளிநாட்டில் வசிப்பவர்கள் தான் கிடைக்காத வளங்களுக்காக செயற்கையை பயன் படுத்துகிறார்கள் என்றால் நம்மவர்கள் இயற்கையின் நிழலில் இருந்து கொண்டே இயற்கையை தோற்கடித்து எவ்வித பயனும் இல்லாத செயற்கையை வெல்லச் செய்சிறார்கள். இயற்கையை மனிதன் அழிப்பதால் அவனது வளம் மிகவும் குறைந்து வருகின்றது என்பது கண்கூடு