எனக்கு டாக்ரராகத்தான் விருப்பம் மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்றான் நான் சந்தித்த மறுவன்புலோ சகலகலாவல்லி வித்தியாசாலை மாணவன் சஜீவன். அவன் மட்டுமல்ல அங்கு நான் சந்தித்த 29 மாணவர்களும் ஏதோ எதிர்பார்ப்புக்களுடனும,; கனவுகளுடனும் தான் நடமாடுகின்றார்கள்;. அவர்களுடன் நாம் பயணித்த ஏழு நாட்களும் எமக்கு ஒரு படிப்பினையாகவே இருந்தது. எமக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளைத்தாண்டி அக்கிராமங்களில் வாழ்ந்தோம் என்று சொல்லலாம்
sdc நிறுவனத்துடன் பண்பாட்டு படைப்பாளியும் புகைப்படக் கலைஞனுமான ஜோல் சமெஸ் இணைந்து செயற்படுத்திய செயற்திட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய 2ஆம்; வருட மாணவர்களும,; சித்திரமும் வடிவமைப்பும் 3ம் வருட மாணவர்களும் இணைந்து கொண்டனர். இச்செயற்திட்டமானது சிறுவர்கள் தமது உலகை எவ்வாறு பார்க்கின்றனர் என்பதனை அறிவதாகும். இதற்கென தென்மராட்சி மறுவன்புலோ கிராமத்தில் உள்ள சகலகலாவல்லி வித்தியாசாலையில் கல்வி கற்கும் தரம் 3தொடக்கம் ஐந்து வரையான மாணவர்களை தெரிவு செய்தனர்.
பங்கு பற்றிய 29 மாணவர்களையும் ஊடக மாணவர்கள் வழி நடத்தினர். இதன் போது ஒவ்வொரு செயற்பாட்டிலும் மாணவர்களது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டது. எதைக்கற்கப்போகிறோம் என்பதில் மாணவர்கள் ஆர்வமாகவே காணப்பட்டனர். கமரா பற்றி கற்பிக்கும் போது மாணவர்கள் மத்தியில் இருந்த ஆர்வத்தை விட கமராவினை உபயோகிக்கும் போது மாணவர்களிடம் இருந்த ஆர்வம்; நாம் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே இருந்தனா.;
மாணவர்கள் கிராமத்துக்குள் படம் எடுக்கும் போது அக்கிராம மக்களில் ஒருவர் கருத்துக்கூறும்போது எங்கட பிள்ளையள நம்பி நீங்க இவ்வளவு பெறுமதியான பொருள நம்பி கையில குடுக்கிறீங்க நாங்களே நம்பி குடுக்க பயப்பிடுவம் எங்கட பிள்ளையள நீங்க தெரிவு செய்தது மகிழச்சிசியா இருக்கு என்றார் மாணவி கஜானியின் அம்மா. முதல் நாள் சற்று சோர்வாக காணப்பட்ட துர்க்கா இரண்டாம் நாள் இன்று தான் அக்கா நான் நிறைய படம் எடுத்தனான் என்றாள்.
இரண்டு நாட்களுக்குள் தம்மால் முடிந்த வரை மூவாயிரம் படங்களாக அக்கிராமத்தை புகைப்படமாக்கினர். எடுத்த படங்களுக்கு விளக்கம் கூறும்போது தான் எமக்கும் புரிந்தது நாம் அச்சிறுவர்களிடம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன என்று. தாம் எடுத்த படங்களில் மூன்றினைத்தெரிவு செய்யச் சொன்ன போது எனக்கு இந்தப்படம் தான் வேணும் இதில தான் இப்பிடி கீறலாம் என்று உறுதியாக தெரிவு செய்தான் கபிலன்.
ஏனக்கா இன்டைக்கு கமரா தர மாட்டிங்களா? உங்கட கமராவ தாங்களன் நான் எங்கயும் போகல இதிலயே நிண்டு படம் எடுக்கிறன் என்று கெஞ்சினாள் 3ம் நாள் மாணவி கனிஸ்ரிகா. எடுத்த படங்களை அவரவரது கைகளில் கொடுத்தபோது அருகில் உள்ள மாணவர்களோடு தமது படங்களை ஒப்பிட்டு பார்த்து “நீ இதில இதை கீறு நான் இதில இப்பிடித்தான் கீறப்போறன்” என தன் உலகத்தையே வர்ணித்தான் அருளினியன்.
சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்கள் வந்து மாணவர்கள் எடுத்துகீறிய படங்களை பார்வையிட்டனர். யாரது நம்பிக்கையும் சிறுவர்கள் அப்படங்களை எடுக்கவில்லை என்றே கூறினர். அவர்களிடம் இந்த படங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாம் புதிய ஒரு சமூகத்தினை எதிர் நோக்கி இருக்கிறோம். மாணவர்கள் தான் இப்படங்களை எடுத்தனர் என்று நம்ப முடியவில்லை இந்த இடங்கள் மிகவும் வறண்ட பிரதேசமாக உள்ளது மாணவர்கள் பசுமையாக வர வேண்டும் என்றே எதிர் பார்க்கின்றனர். நாம் எதிர் பார்க்காத விடயங்களை இவர்கள் சிந்திக்கிறார்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன என்றனர்.
அக்கிராம சுவர் மதகுகளில் கீறத்தொடங்கியதும் சில மாணவர்கள் கீறுவதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றனர். ஏனக்கா எங்கள கீற விடமாட்டாங்களா என்று கேட்டவள் கீறி முடிந்ததும் அக்கா என்ர படத்த கிணத்துக்குள்ள வடிவா கீறி இருக்காங்க வாங்க காட்டுறன் என்று இழுத்துச்சென்றாள் கயல்விழி.இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவி சுஜித்தா அக்கா எங்களுக்கு எப்ப கமரா சொல்லித்தருவிங்க என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
மாணவர்களது உலகத்தை அப்பாடசாலையில் கண்காட்சியாக வைத்த போது அக்கிராம மக்கள் பார்வையிட வந்தனர். அப்போது பதிந்த கருத்துக்களாவது இது எமது கிராமத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் இப்படி ஒரு கிராமம் உண்டு என்று வெளி உலகிற்கு பெரிதாக தெரியாது ஆனால் இப்போது அனைவருக்கும் தெரியும் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்ல அக்கிராமத்துக்கே கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும் என்றனர்.
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இக் கண்காட்சி நடைபெற்ற போது நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே எமது செயற்திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பதை எம்மால் அறிய முடிந்தது. ஆனாலும் பலர் கேள்வி இங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும் கமரா தெரியாது
மறுவன்புலோ பாடசாலையை ஏன் தொரிவு செய்தீர்கள் என்பதாகவே இருந்தது. எமது நோக்கம் கமரா பழக்குவதல்ல மறுவன் புலோ பிரதேசம் யுத்தம் நடை பெற்ற பிரதேசம் அப்பிரதேச சிறுவர்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும் தமது இடங்கள் எவ்வாறு மாற வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள் அதனை அறிவதுதான் காரணம் சொல்லப்போனால் யாழ். மாணவர்களிடம் இப்பயிற்சியை மேற்கொண்டிருந்தால் பசுமைக்கு மாறாக ஆடம்பரங்களையே அதிகமாக விரும்பியிருப்பர். ஆசவஉ இல் பார்வையிட வந்தவர்கள் கூறும் போது “என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல, எங்கு செய்தோம் என்பது தான் முக்கியம”; மறுவன் புலோ மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிட அழைத்து வரப்பட்டனர் அதன் போது ஆரம்பத்தில் அவர்களிடம் கேட்டது போலவே உங்களுக்கு என்னவாக வர விருப்பம் என்று கேட்டதற்கு நான் டாக்ரராகத்தான் வர வேண்டும் ஆனால் phழவழ தழசnடைளைவை ஆக வர வேண்டும் என்றும் ஆர்வமாக உள்ளது என்றான் மாணவன் சஜீவன்.